சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 7

நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்:

தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

இலங்கை அரசிற்கும் விடுதலைப்  புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது.

பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை  தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைநாகரான ஒஸ்லோவில் இடம்பெற்றன.

14-08-2002 இல் இடம்பெற்ற இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு புலிகள் மீதான தடையை நீக்கியது.

இதன் பிரகாரம் உத்தியோக பேச்சுவார்த்தைகளை தாய்லாந்தில் 2002ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடத்த இரு சாராரும் உடன்பட்டனர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் அமெரிக்க ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்த நோர்வே வெளிநாட்டமைச்சர் அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆமிஸ்ரேஜ் அவர்களை அணுகினார்.

அவருக்கு இலங்கைப் பிரச்சனையில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அத்துடன் பயங்கரவாதிகளுக்கும். அரசிற்குமிடையே எவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்பதில் அனுபவங்களைப் பெறுவதில் ஆர்வம் இருந்தது.

இதே போன்று இப் பிரச்சனைகளின் நிலை குறித்து இந்திய தரப்பினருக்கு விளக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போதிருந்த வெளிநாட்டமைச்சரான ஜஸ்வன் சிங்கா விடுதலைப்புலிகளின் தற்தோதைய நிலை குறித்து சந்தேகங்களை தெரிவித்தார்.

அதாவது இப் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலம் எடுக்கலாம் என்ற அபிப்பிராயம் கொண்டிருந்தார்.

ராஜிவ் காந்தியின் படுகொலை இவ்வாறான கடுமையான அபிப்பிராயத்தை அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்திருந்தது.

ஆனாலும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் புலிகளைப் பயிற்றுவித்தவர்கள், முக்கிய உறுப்பினர்களை நன்கு அறிந்தவர்கள் என்ற வகையில்.

சற்று வித்தியாசமான, பேச்சுவார்த்தைகளை ஊக்கப்படுத்துவதாக அவர்களின் அபிப்பிராயங்கள் அமைந்திருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நாடு தழுவிய ரீதியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தது. குறிப்பாக சிங்களப் பகுதிகளில் தெருத்தடைகள் எடுக்கப்பட்டு மாமூல் நிலைக்கு நிலமைகள் படிப்படியாக திரும்பிக்கொண்டிருந்தது.

இம் மாற்றங்கள் தொடருமானால் ரணில் தேர்தலில் பெரு வெற்றி பெறலாம் என்ற அபிப்பிராயம் காணப்பட்டது. இம் மாற்றங்களே அரசாங்கத்தைத் துரித பேச்சுவார்த்தைகளுக்குத் தள்ளியது.

ஆனாலும் புலிகள் தரப்பில் இம் முயற்சிகள் தொடர்ந்து இழுபட்டுச் செல்லவேண்டும் என்பதே அணுகுமுறையாக இருந்தது.

இவ்வாறான பின்னணில் தாய்லாந்தில் உள்ள கடற்படைத் தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் பல்வேறு சிக்கல்களுடன் ஆரம்பமாகியது.

அரச பிரதிநிதிகளுக்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆசனங்கள் ஒதுக்குவது முதல் உரைகளை ஆரம்பிக்கும்போது பயன்படுத்தும் ராஜதந்திர வார்த்தைப் பிரயோகம் வரை பிரச்சனைகள் காணப்பட்டது.

வழமையாக ராஜதந்திரிகளை மாட்சிமை தங்கிய என விழித்து ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் எரிக் சோல்கெய்ம் தனது ஆரம்ப உரையில் பாலசிங்கத்தையும் அவ்வாறு விளித்து உரையைத் தொடங்கியது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதே போன்று ஆசனங்களை ஒதுக்கும்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒழுங்கு செய்வது வழக்கம்.

Session 2-1edited  "நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம் Session 2 1editedநோர்வே பிரதிநிதிகள் புலிகளுக்கு அவ்வாறு ஆசனங்களை ஒதுக்கியபோது தாய்லாந்து அதனை நிராகரித்து இலங்கை அரசுப் பிரதிநிதிகளைக் கௌரவப்படுத்தும் விதத்தில் ஆசனங்களை அமைத்தது.

பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உரைகளில் அரசின் போக்கும், புலிகளின் போக்கும் வித்தியாசமாகவே காணப்பட்டன.

அரசின் சார்பில் கலந்து கொண்ட ஜி எல் பீரிஸ் அவர்களின் உரையில் நாட்டின் ஐக்கியத்தையும், பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையிலும் அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் விதத்தில் அரச நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படும் என்றார்.

ஆனால் பாலசிங்கம் அவர்களின் உரையில் மீள்குடியமர்த்தல், புனர்வாழ்வு வழங்குதல், தனியார் கட்டிடங்களில் ராணுவம் நிலைகொண்டிருப்பதைத் தடுத்து அவற்றை விடுவித்தல் என்பவற்றை வற்புறுத்துவதாக அமைந்திருந்தன.

இப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக இடைக்கால நிர்வாக சபை அமைப்பது குறித்து வற்புறுத்தி வந்த புலிகள் அப் பேச்சுவார்த்தைகளின் போது அதனை வற்புறுத்தாது தவிர்த்தனர்.

இலங்கை அரசு தீர்வுகளுக்கான அணுகுமுறைகளை அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காணப்பட்டதால் புலிகளின் இடைக்கால நிர்வாக கோரிக்கை அதனை வற்புறுத்த இடமளிக்கவில்லை.

பதிலாக தற்காலிக இடைக்கால நிர்வாகம் அமைப்பதற்கான யோசனைகளை முன்வைத்த அரச தரப்பினர் காலப் போக்கில் அதுவே இடைக்கால நிர்வாகமாக மாற்றப்படலாம் என வெளியிட்டிருந்தனர்.

srilanka372  "நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம் srilanka372ஜி எல் பீரிஸ் அவர்களின் இந்த வாதங்களால் புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கை முன்வைக்க முடியாமல் போனது.

பேச்சுவார்த்தைகளின் பின்னர் பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றபோது பாலசிங்கம் வெளியிட்ட கருத்துக்கள் புலிகள் மத்தியிலும் சர்வதேச பார்வையாளர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பு தனிநாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனவும், பதிலாக தமிழர் தாயகத்தில் கணிசமான சுயாட்சி அதிகாரம் கொண்ட சுய அரசு தேவை என்றார்.

தனது கருத்தை மேலும் விளக்கும் வகையில் “தனி நாடு என்பது தனிநாடு என்ற ஒன்று அல்ல” அது தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை அடையாளப்படுத்துகிறது.

நாம் சுய நிர்ணய உரிமை என்பது நாம் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் கணிசமான வகையிலான சுயாட்சி அல்லது சுய அரசு என்றார்.

பாலசிங்கத்தின் இவ் விளக்கம் அரசு தரப்பில் அதாவது ஜி எல் பீரிஸ் தனது விளக்கத்தில் தாமும் அவ் விளக்கத்தை ஏற்பதாக கூறி, நாம் அதற்கேற்ற வகையிலான ஏற்பாடுகளை செய்தால் அந்த அபிலாஷைகளை எட்ட முடியும் என்றார்.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s