தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் : திரை விமர்சனம்

கெளதம் மேனன் தயாரிப்பில் புதியவர் பிரேம் சாய் இயக்கிய படம்.

பல ஆண்டுகள் முன்பு சிவாஜி நடித்த அஞ்சல் பெட்டி 520 என்ற நகைச்சுவை படத்தின் சாயலும், சமீபத்திய ஈ, சேட்டை படங்களின் நிறமும்உள்ளது.

இதுல கொஞ்சம் சேஸ், திரில், காதல் எல்லாம் சேர்த்து கிண்டி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் தவிர படத்தை முன்பே பார்த்து விட்ட உணர்வு.

ஆங்…

இதே தயாரிப்பாளர் இயக்குனர் உருவாக்கிய கூரியர் பாய் கல்யாண் என்ற தெலுங்குப் படம்.
போன வருடம் வந்தது. இது வர தாமதம்.

அந்த நாயகியை கூட எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?

ஃபேர் அன்ட் லவ்லி விளம்பரத்தில்  வரும் அதே மாடல் யாமி கெளதம்.

சரி சரி …. படம் எப்படின்னு சொல்லுப்பா? – உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.

சமூக விரோத செயல்களைப் பற்றிய ஆதாரங்கள் கொண்ட ஒரு அஞ்சலை சமுக ஆர்வலர் நாசருக்கு அனுப்புகிறார் தம்பி ராமையா.

அதன் பயணத்தை படமாக்கி உள்ளார்கள்.

முதல் பாதி,

ஜெய் , சந்தானம், வி.தா.வ கணேஷ் கூட்டணியின் நகைச்சுவை, ஜெய் – யாமி காதல் என்று விருவிருப்பாக ஓடுகிறது.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் த்ரில், சேஸ் என்று சூடு பிடித்து சுபமாக முடிகிறது.

நாசர் , தம்பி ராமையா குறைவாக வந்தாலும் நிறைவாக நடித்துள்ளனர் .

மொத்ததில்

சொதப்பல் இல்லாத ஒரு விறுவிறுப்பான படம்.

Tamilselvanum-Thaniyar-Anjalum-trailer

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s