ஆண்டவன் கட்டளை : திரை விமர்சனம்

 

ஆண்டுக்கு ஒரு படம் என்ற கொள்கையில் தல , தளபதிகள் இருக்கும் போது விஜய் சேதுபதி மாதமொரு படம் என்று பட்டைய கிளப்பராரு..

கா.க.போ , இறைவி, தர்மதுரை என்று வரிசையாக வந்தாலும் மனுஷன் கதை தேர்தெடுப்பில் உஷாராகவே இருக்கிறார்.

காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்கத்தில் , இறுதிச்சுற்று ரித்திகா சிங்குடன் இணைந்து இதோ இந்த ஆண்டவன் கட்டளை .

ஆறு மனமே ஆறு என்ற தத்துவத்தை இதிலும் சொல்லியிருந்தாலும் , பழய சிவாஜி படத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

கடன் அடைப்பதற்கு பணம் சம்பாதிக்க நண்பன் யோகியுடன் லண்டன் போகனும் என்று அவசரமாக பாஸ்போர்ட் விசா பெற தவரான தகவல் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதியுறும் காந்தி (சேதுபதி) தான் நம் நாயகன்.

மணமானவர் என்று, கார்மேகக்குழலி என மனைவி பெயரை பொய்யாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் குறிப்பிட அதனால் ஏற்படும் சிக்கல்களை மிக எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு இலங்கைத் தமிழர் பாத்திரத்தையும்  கதையில் சேர்த்து கொஞ்சம் சென்டிமென்ட் ஏத்தியிருக்காங்க.

நாசர் மற்றும் எல்லா நடிகர்களும் யதார்த்த நடிப்பில் அசத்தி இருக்காங்க.

ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி இருந்தாலும் படம் மிக மெதுவாக நகர்வது ஒரு குறை தான்.

பாஸ்போர்ட் அலுவலகம், விவாகரத்து நீதிமன்றம் நம் நாட்டில் இயங்குகிறது என்பதை தெள்ளத்தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர்.

குறுக்குவழியில் லஞ்சம் கொடுத்து ஏமாறுவதை விட நேர்வழியில் சென்றால் அரசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்ற படிப்பினையுடன் முடித்திருக்கிறார்கள்.

காதல் என்று தனி ட்ராக் இல்லாவிட்டாலும் சேதுபதி – ரித்திகா சிங் இணைந்து வரும் காட்சிகள் கிளுகிளுப்பாகவும் , இளமையாகவும் உள்ளது.

மொத்தத்தில் ஆபாசம் இல்லாத அர்த்தமுள்ள திரைப்படம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s