தொடரி : திரை விமர்சனம்

மைனா, கும்கி , கயல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபு சாலமன் தனுஷ் , கீர்த்தி சுரேஷ், ராதாரவி, நாசர் , தம்பி ராமையா , கருணாகரன் மற்றும் பல தெரிந்த நடிகர்களை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் இந்த தொடரி.

தொடரி என்றால் என்ன என்று மட்டும் கேட்காதீர்கள்…

சில வருடங்கள் முன் வந்த ஹாலிவுட் படமான டைட்டானிக் கதையை கப்பலிருந்து ரயிலுக்கு ஏற்றி ஒரு விருவிருப்பான காதல் திரில்லராக கொடுத்திருக்கிறார்கள்…

அங்கே கடலில் தத்தளிக்கும் கப்பல்…

இங்கே ட்ராக்கில் நிலை இழந்து தறிகெட்டு ஓடும் டெல்லி – சென்னை சூப்பர் எக்ஸ்பிரஸ்

ரயில் பாண்ட்ரி உணவு சேவையில் பணி செய்யும் தனுஷ் பயணிக்கும் நடிகையின் டச் அப் பெண்ணின் மனதை டச் செய்கிறார்….

ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி மற்றும் பலர் பயணிக்க விருவிருப்பாக கதை நகரும் போது…..

ரயில் ஓட்டுனர் உதவியாளர் தகராறில் அவர்கள் சாக , யாரும் இல்லாமல் வண்டி கட்டுப்பாடின்றி போக…

ஹெலிகாப்டர் மற்றும் ரயில்வே , போலிஸ் அதிகாரிகள் மீட்பு வேலைகளில் முடுக்கப்பட்டு …

இந்த செய்தியை ஊடகங்கள் எப்படி ஊதி பெரிதாக்குறது என்பதே கதை

இவ்வளவு நடக்கும் போது பயணிகள் இணையதளத்தில் அவர்கள் பயண நேரடி ஒளிபரப்பை ஐபேடிலும், ஸ்மார்ட் போனிலும் பார்த்து ரசிப்பது கொஞ்சமல்ல நிறையவே ஓவர்…

எப்படியோ ஹீரோ தனுஷ் காதலியை கட்டிப்பிடித்துக் கொண்டே அமைச்சர் உட்பட எல்லா பயணிகளையும் காப்பாற்றி விடுகிறார்.

கடைசியில் , நூறாண்டுகளுக்கு மேல் கம்பீரமாக இன்றும் நிற்கும் மதராசப்பட்டிண சென்ட்ரல் ரயில் நிலையத்தை தரைமட்டமாக்கி ரயில் நிற்பதாக முடித்து உள்ளார்கள்.

முழுக்க முழுக்க ரயிலில் பயணித்த உணர்வு…..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s