மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : பாகம் 25

ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில் கருணாநிதி உடந்தை??

ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட ‘வீடியோ கேசட்’ எங்கே?? பத்மநாபா படுகொலையில்  கருணாநிதி உடந்தை??

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன்.

அதன்பின் ஜெயின் கமிஷன். வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றியும் சதித்திட்டம் பற்றியும் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் நீதிபதி வர்மா, தன்னால் சதித்திட்டம் குறித்த விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம், புலன் விசாரணை அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அது முடியாமல் சதித்திட்டம் குறித்த விசாரணையை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

எனவே பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றி மட்டும் வர்மா கமிஷன் விசாரிக்கும்படி அரசாங்கத்தின் உத்தரவு திருத்தி அனுப்பப்பட்டது. அதன்படியே வர்மா கமிஷன் பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து மட்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த கமிஷனில் இந்திய உளவுத்துறைத் தலைவர் முதற்கொண்டு பலபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். பல அதிமுக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். முதலாவது, வர்மா கமிஷன். அதன்பின் ஜெயின் கமிஷன்.

வர்மா கமிஷன் நியமிக்கப்பட்டபோது முதலில் பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றியும் சதித்திட்டம் பற்றியும் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் நீதிபதி வர்மா, தன்னால் சதித்திட்டம்  குறித்த  விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். காரணம், புலன் விசாரணை அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அது முடியாமல் சதித்திட்டம் குறித்த விசாரணையை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.

எனவே பாதுகாப்புக் குளறுபடிகள் பற்றி மட்டும் வர்மா கமிஷன் விசாரிக்கும்படி அரசாங்கத்தின் உத்தரவு திருத்தி அனுப்பப்பட்டது. அதன்படியே வர்மா கமிஷன் பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து மட்டும் விசாரிக்கத் தொடங்கியது.

இந்த கமிஷனில் இந்திய உளவுத்துறைத் தலைவர் முதற்கொண்டு பலபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். பல அதிமுக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன

அவற்றில் ஒன்று, ஐ.பியின் தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் மே 22 அன்று பாரதப் பிரதமருக்கு நேரடியாக அனுப்பிய ஒரு கடிதம்.

அக்கடிதத்தில் எம்.கே. நாராயணன், ‘எங்களுக்கு ஒரு வீடியோ கேசட் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்  நிகழ்ந்த அன்று எடுக்கப்பட்ட   அந்த வீடியோ கேசட்டை நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். விரைவில் அது பற்றிய தகவல்களை அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் வர்மா கமிஷன் விசாரணைகள் முடிகிறவரை, சி.பி.ஐயின் புலன் விசாரணைகள் முழுவதுமே முடிகிற வரை அப்படி எந்த ஒரு வீடியோ கேசட்டையும் ஐ.பி. வெளியிடவேயில்லை.

ராஜிவ் கொலைவழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி என்னும் முறையில் இது பற்றி என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

அப்படி ஒரு வீடியோ கேசட் ஐ.பியின் வசம் அப்போது கிடைத்திருக்குமானால், அது விசாரணைக்கு மிக முக்கிய ஆதாரமாக உதவி செய்யக்கூடியதாக இருக்குமானால் எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இறுதிவரை அந்த கேசட் வரவேயில்லை.

சற்று யோசித்துப் பாருங்கள்.

கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கும்போது ஹரி பாபு எடுத்த புகைப்படங்கள் தவிர எங்களுக்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது.

இருட்டில்தான் நடக்கத் தொடங்கியிருந்தோம். ஐ.பி. தலைவர் குறிப்பிட்ட கேசட்டை எங்களுக்குத் தந்திருந்தால் ஒரு சிறு வெளிச்சம் புலப்பட்டிருக்கலாம் அல்லவா?

index ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில்  கருணாநிதி உடந்தை?? index4

அன்றிரவு ஏழரை மணியிலிருந்து பத்து மணி வரை சிவராசன் குழுவினர் அந்தப் பொதுக்கூட்ட மைதான வளாகத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

யார் யார் இருக்கிறார்கள், அவர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பது அந்த கேசட்டில் பதிவாகியிருந்தால் அது வழக்கைத் தொடங்க எத்தனை உதவியாக இருந்திருக்கும்!

எங்கள் விசாரணையில் தணு, லதா கண்ணனுடன் சென்று லதா பிரியகுமாருடன் பேசினார், அவர் மூலமாகத்தான் மாலையிட அனுமதியே கிடைத்தது என்று தெரிந்திருந்தது.

பின்னால் நாங்கள் விசாரித்துத் தெரிந்துகொண்ட இந்த விஷயத்தை அந்த கேசட் ஒருவேளை உள்ளங்கைக் கனி ஆதாரமாகக் காட்டியிருக்கலாமல்லவா?

சிவராசனும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் யார் யாருடன் பேசினார்கள், எப்படி அனுமதி கிடைத்தது அவர்களுக்கு என்பதையெல்லாம் அந்த கேசட்  அவசியம் சுட்டிக்காட்டியிருக்கும்.

ஆனால் அது சி.பி.ஐயிடம் கிடைத்தால் மரகதம் சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிரச்னை வரும் என்று கருதி முழுப்பூசனியை மறைத்துவிட்டது ஐ.பி.

இறந்த தலைவரைவிட இருக்கும் பிரமுகர்கள் முக்கியமாகிவிடுகிறார்கள்.

வர்மா கமிஷன் விசாரணைகள் முடிந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசம், அதைவிட உளவுத்துறையின் செயல்பாடுகள் மோசம் என்பது அறிக்கையாக எழுதப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகு, முறைப்படி உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1995ம் ஆண்டு இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் அரசு சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் வசமே ஒப்படைத்தது. முன்னதாக, பாதுகாப்புக் குளறுபடிகளுக்காக மாநில போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தமிழக போலீஸ் அதிகாரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உளவுத்துறை அதிகாரிகள் மீதான விசாரணையை மட்டும் சி.பி.ஐ மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, வழக்கு எஸ்.பி. அளவிலான ஓர் அதிகாரியின் பொறுப்பில் விடப்பட்டது. (பொதுவாக டி.எஸ்.பி. அளவிலான விசாரணைகள்தான் நடக்கும்.)

ஆனால், அந்த விசாரணை என்ன ஆனது, யார் யார் விசாரிக்கப்பட்டார்கள், விசாரணையில் என்ன தெரிந்தது, என்ன முடிவெடுத்தார்கள், விசாரணை முடிவு அரசுக்கு அனுப்பப்பட்டதா எதுவும் தெரியாது!

சொல்லப்போனால் அந்த கேஸ் டயரிகளே இன்று இருக்குமா என்பது சந்தேகம்.

அந்த விசாரணை ஒழுங்காக நடந்திருக்குமானால் உளவுத்துறை அதிகாரிகள் எங்கெங்கே கோட்டை விட்டார்கள், எதனால் ஸ்ரீபெரும்புதூர்  சம்பவம் குறித்த ஒரு சிறு தகவல்கூட உளவுத்துறைக்கு முன்கூட்டித் தெரியாமல் போனது என்று ஆரம்பித்து அனைத்து வினாக்களுக்கும் விடை வந்திருக்கும்.

ஆனால் எம்.கே. நாராயணன் தொடங்கி, அத்தனை ஐபி அதிகாரிகளையும் ‘காப்பதற்காக’வே அவதரித்த மாதிரி சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை இந்த வழக்கில் நடந்துகொண்டு, மூடி மறைத்துவிட்டது.

இதன்மூலம் சில தனி நபர்கள் காக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் தேசத்துக்கு எத்தனை இழுக்கு? இந்த  ஒரு விவகாரம் என்றில்லை. ராஜிவ் கொலை வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த காலம் முழுதும் இம்மாதிரியான பல சம்பவங்களை நான் எதிர்கொண்டேன்.

sg ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில்  கருணாநிதி உடந்தை?? SGபத்மநாபா

முன்பே குறிப்பிட்ட  பத்மநாபா கொலை வழக்கை மீண்டும் நினைவுகூர்வோம்.

சின்ன சாந்தன்  பிடிபட்ட பிறகுதான் அந்த வழக்கின் முழு வடிவம் வெளிச்சத்துக்கு வந்தது.  கொலை நடந்த சமயம் தமிழ்நாடு போலீஸ் ‘விசாரித்து முடித்து’ அதைக் கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டிருந்தார்கள்.

சின்ன சாந்தன் அளித்த தகவல்களின் அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்டு அதைத் துப்புத் துலக்கியிருக்குமானால் இன்னும் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.

ஆனால் அந்த வழக்கைத் தமிழ்நாடு போலீஸே பார்த்துக்கொள்ளட்டும் என்று கார்த்திகேயன் சொல்லிவிட்டார்.

ஒரே காரணம், வழக்கை சி.பி.ஐ. எடுத்தால் அன்றைய உள்துறைச் செயலர் நாகராஜன் தொடங்கி, தி.மு.க. தலைவர் கருணாநிதி வரை விசாரிக்க வேண்டியிருந்திருக்கும்.

பொதுமக்கள் எதிர்பார்த்திராத பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வந்திருக்கும். நமக்கெதற்கு வம்பு? விட்டுவிடலாம். தமிழ்நாடு போலீசே பார்த்துக்கொள்ளட்டும்!

xrajiv3_1764374h-jpg-pagespeed-ic_-1vav2dha15 ஸ்ரீபெரும்புதூரில் கண்டெடுக்கப்பட்ட 'வீடியோ கேசட்' எங்கே?? பத்மநாபா படுகொலையில்  கருணாநிதி உடந்தை?? xrajiv3 1764374hகார்த்திகேயன்

சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்  தலைவராக  இருந்த கார்த்திகேயன் அன்றைக்குப் பிரதமர் நரசிம்மராவ் தொடங்கி பல அமைச்சர்கள், மிக உயர் அதிகாரிகள் வரை எளிதில் அணுகக்கூடியவராகவும் பழகக்கூடியவராகவும் இருந்தார். அவர் மனம் வைத்தால் எந்த வழக்கையும் எடுக்கலாம், முடிக்கலாம்.

அவரது பணியில் குறுக்கிட ஒருத்தர் என்றால் ஒருத்தரும் கிடையாது. இதனை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.

சி.பி.ஐயின் இயக்குநரே கார்த்திகேயன் விஷயங்களில் தலையிட மாட்டார். அப்படி இருந்தும் அவர் பல வழக்குகளில் பட்டும் படாமலும் நடந்துகொண்டது, சி.பி.ஐ. எடுத்திருக்க வேண்டிய வழக்குகளை வேண்டுமென்றே தவிர்த்தது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின்  கசப்புக்கு ஆளாகாதிருப்பதே  முக்கியம் என்று நினைத்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

நான் உள்பட அன்று சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய அத்தனை பேரும் அவருக்குக் கீழே இருந்தவர்கள்.

எங்கள் அபிப்பிராயங்களைச் சொல்ல முடியுமே தவிர, அவரை நிர்ப்பந்தம் செய்ய முடியாது. எந்த விஷயத்திலும் அவர் சொல்வதுதான் இறுதி என்றிருந்தது.

கே. ரகோத்மன்

தொடரும் 

நன்றி : தொகுப்பு :கி.பாஸ்கரன்சுவிஸ்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s