அம்மு முதல் அம்மா வரை : பகுதி 4

நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசியதால்

‘வெண்ணிற ஆடை’ பட வாய்ப்பு…!!

நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசியதால் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்பு…!! ‘ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-4)

உட்லண்ட்ஸ் ஓட்டலில் ‘ கர்ணன் ’ படத்தின் நூறாவது நாள் விழா. படத்தில் நடித்திருந்ததால் வெற்றி விழாவுக்குக் குடும்பத்தோடு வந்திருந்தார் சந்தியா.

முதல் முறையாகப் புடைவை கட்டிக்கொண்டு வெளியிடத்துக்கு வந்திருந்த ஜெயலலிதாவின் மீதுதான் எல்லோருக்கும் கண். ‘ சந்தியாவுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா ’ என்ற ஆச்சர்யம்.

வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் படத்தின் டைரக்டர் பி.ஆர். பந்தலு , சந்தியாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்றார். சுற்றி வளைக்காமல் நேராகவே விஷயத்துக்கு வந்தார். ‘ அடுத்த வாரம் ஒரு கன்னடப் படத்துக்குப் பூஜை போடப் போறேன்.

உங்க பொண்ணுதான் கதாநாயகி! ’

இயக்குநர் பந்துலு இப்படிக் கேட்பார் என்று சந்தியா துளியும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா கல்லூரியில் படிக்கப் போவதைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

ஆனால் , இரண்டு மாதத்தில் முழுப் படத்தையும் எடுத்து முடித்துவிடுவதாகச் சொல்லி பந்துலு சம்மதிக்க வைத்தார்.

ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த கன்னடப்படம் ‘சின்னத கொம்பே’.

கதாநாயகன் யாரென்று கேட்டதும் ஜெயலலிதாவுக்கு உற்சாகம். ‘ அட , நம்ம சொக்கண்ணா ’.

அப்போது கன்னடத்தில் பிரபலமாக இருந்த நடிகர் கல்யாண்குமார் , ஜெயலலிதா குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர்.

தெரிந்தவர் கதாநாயகன் என்பதால் ஜெயலலிதாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

சொன்னது போலவே அடுத்த வாரமே பூஜையை முடித்துவிட்டு , கையோடு மைசூரில் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார் பந்துலு.

அம்மாவுடன் மைசூருக்கு ஏதோ சுற்றுலா வந்ததுபோல இருந்தது ஜெயலலிதாவுக்கு.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல், சந்தியாவும் டைரக்டர் பந்துலுவும் என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ , அதை காமிரா முன் செய்துகாட்டி விட்டுப் போய்க் கொண்டே இருந்தார் ஜெயலலிதா.

இரண்டே மாதங்கள். படம் முடிந்துவிட்டது.

மைசூரிலிருந்து சென்னைக்கு வந்ததும் ‘சின்னத கொம்பே’ வை மறந்துவிட்டு ஜெயலலிதா காலேஜ் போகும் கனவுகளில் மூழ்கிவிட்டார்.

விதி , இந்த முறை ஸ்ரீதர் ரூபத்தில் வந்தது.

விஜயா ஸ்டுடியோவில் ‘ சின்னத கொம்பே ’ படச்சுருளைப் போட்டு ‘ ரஷ் ’ பார்த்துக் கொண்டிருந்தார் பந்துலு.

ஏதேச்சையாக அங்கே வந்த டைரக்டர் ஸ்ரீதர் , ஜெயலலிதாவை திரையில் பார்த்து ஆச்சர்யப்பட்டுவிட்டார்.

‘ என்னது , சந்தியாவோட மகளா ?’ ‘ முழுக்க முழுக்க புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்.

அதுல வர்ற ஒரு முக்கியமான கேரக்டருக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருப்பான்னு நினைக்கிறேன் ’ என்று பந்துலுவிடம் சொன்னார் ஸ்ரீதர்.

மறுநாள் ஸ்ரீதர் ஜெயலலிதாவை தேடிப் போன இடம் ஒய்.எம்.சி.ஏ. நீச்சல் குளம்.

‘வெண்ணிற ஆடை’ யில் நடிக்க கான்வெண்டில் படித்த நடிகை தேவை என்று பேப்பரில் விளம்பரமே கொடுத்திருந்த ஸ்ரீதர் , சந்தியாவுடன்  நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை அங்கேயே ஓகே செய்துவிட்டார்.

ஸ்ரீதரிடமிருந்து சினிமா சான்ஸ் என்பதை சந்தியாவால் நம்பவே முடியவில்லை.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு டைரக்டரை நம்பி சினிமா என்றால் அதை ஆரம்பித்து வைத்தது ஸ்ரீதர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமாவின் அகராதியில் இளமை , புதுமை என்றால் அதற்கு ஸ்ரீதர் என்றுதான் அர்த்தம்.

ஸ்ரீதரின் இயக்கத்தில் , அதுவும் ஒரு கலர் படத்தில் , கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பின் அருமை பற்றி சந்தியாவுக்குத்தான் தெரியும்.

சினிமாவில் அதிர்ஷ்டம் எப்போதும் ஒரு தடவைதான் வரும்.

ஜெயலலிதா சினிமாப் பக்கமே வரக் கூடாது என்று நினைத்த அதே சந்தியாதான் , வந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்தார்.

jejaa நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசியதால் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்பு...!! 'ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-4) jejaa1

ஆனால் , இதில் ஜெயலலிதாவுக்கு இஷ்டமேயில்லை. தவிரவும் , மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாவது இடம் வாங்கியதற்கான ஸ்காலர்ஷிப்பும் அன்றுதான் வந்திருந்தது.

சந்தியாவுக்கோ சினிமா வாய்ப்பெல்லாம் குறைந்து கொண்டே வந்த காலம்.

குடும்பத்தின் பொருளாதார நிலைமை அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

சின்னப் பெண்தானே என்று ஒதுக்கிவிடாமல் சந்தியா , மகளை நேருக்கு நேர் பார்த்துப் பேசினார்.

ஜெயலலிதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை.

வெளுத்தது வானம். தெளிவாக இருந்தது ஜெயலலிதாவின் முகம். ‘ அம்மா , அந்த ஸ்காலர்ஷிப்பைத் திருப்பி அனுப்பிச்சுடுங்க. அப்படியே ஸ்ரீதர் சாருக்கு போன் பண்ணி ஓகே சொல்லிடுங்க.

’ மதுரை வைகை அணைக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் வெண்ணிற ஆடை படத்துக்கான ஷூட்டிங்.

முதல் நாள் ஜெயலலிதாவுக்கு வேலை எதுவுமில்லை.

யூனிட்டில் மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஜெயலலிதாவுக்கு ஸ்ரீகாந்துடன் ஒரு டூயட். ‘ அம்மு , ரிகர்சல் ஓகேவா ? டேக்குக்கு போய்டலாமா ?’

‘ ஓயெஸ். நான் ரெடி சார்! ’

‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல , கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல… ’ தூரத்தில் எங்கோ பாடல் ஒலித்தது.

ஜெயலலிதாவும் ஸ்ரீகாந்தும் ஆடினர்.

‘ஷாட் ஓகே. வெல்டன் அம்மு’ இது ஸ்ரீதர். உற்சாகமாக இருந்தது ஜெயலலிதாவுக்கு.

அடுத்தடுத்து பல பகுதிகளுக்கும் செல்லத் தொடங்கினார்.

கூடவே , அம்மாவும். கேமரா பயமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.

ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல ஸ்ரீதருக்கும் ‘வெண்ணிற ஆடை ’ முக்கியமான படம்.

‘காதலிக்க நேரமில்லை’ படம் இந்தியிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததால், இந்தியா முழுக்க தெரிந்த இயக்குநராகியிருந்தார்.

அடுத்தப் படமும் வெற்றிப்படமாக இருக்கவேண்டும் என்பதற்காக David & Lisa ஆங்கிலப் படத்தை ‘வெண்ணிற ஆடை’ யாக உருமாற்றியிருந்தார்.

va_2377081g நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசியதால் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்பு...!! 'ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-4) va 2377081gவெண்ணிற ஆடை’ படத்தில் நிர்மலா, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன்

ஸ்ரீதர் போலவே அவரது யூனிட்டும் இளமை, புதுமைதான்.

படத்தில் பத்தி பத்தியாக வசனமிருக்காது. சொல்லிக் கொடுப்பதை அப்படியே காமிரா முன்னால் செய்தால் போதும். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் பாரபட்சம் இருக்காது.

கிடைக்கிற இடத்தில் உட்கார்ந்துகொண்டு ஜாலியாகக் கிண்டலடித்துக் கொண்டே எந்தப் பரபரப்பும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்.

ஜெயலலிதாவுக்குக் கல்லூரிக்குப் போகாத ஏக்கத்தைத் தீர்த்து வைப்பது மாதிரியான ஜாலி டீம்.

ஆனால், படம் ஆரம்பித்த நாளிலிருந்தே ஸ்ரீதர் டென்ஷனாகத்தான் இருந்தார்.

ஏகப்பட்ட பிரச்னைகள் , குறுக்கீடுகள். கதாநாயகியை விதவையாக , மனநோயாளியாகக் காட்டினால் எடுபடுமா என்கிற சந்தேகம் வேறு.

படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க வந்தார் ஹேமமாலினி.

திரையில் ஒல்லிக்குச்சியாகத் தெரிந்ததால் , பாதிப் படத்திலேயே ஹேமமாலினியை நீக்கிவிட்டார்கள்.

போதாக்குறைக்கு இன்னொரு குழப்பம். தணிக்கைத் துறை, ‘வெண்ணிற ஆடை’ க்கு அ சர்டிபிகேட் கொடுத்துவிட்டது.

தமிழ் சினிமாவில் ‘ மர்மயோகி ’ க்குப் பின்னர் முதல்முறையாக அதுவும் திரைக்கு வருவதற்கு பல நாள்கள் முன்பே வழங்கப்பட்டது.

டாப் ஆங்கிளில் மெல்ல நகர்ந்து வரும் காமிரா, ஜன்னல் வழியாக வீட்டில் உள்ளே நுழைகிறது.

‘ ஒன், டூ , த்ரீ , ஃபோர் , ஃபைவ்… டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ’ சொல்லிக் கொண்டே குட்டைப் பாவாடை , ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் முகத்தில் கரியோடு ஓடி வந்து சிரிக்கும் ஜெயலலிதாவின் குளோஸப் காட்சி. படத்தில் ஜெயலலிதா அறிமுகமாகும் காட்சி அது.

‘ வெண்ணிற ஆட ’ யில் ஜெயலலிதா வரும் இந்த ஒரு காட்சிக்குத்தான் சென்ஸாரில் ‘A’ சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தார்கள்.

14-1426334240-6thingsaboutjayalalithathatyoumighthaveneverknown நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசியதால் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்பு...!! 'ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை…. (பகுதி-4) 14 1426334240 6thingsaboutjayalalithathatyoumighthaveneverknown

பதினாறு வயதேயான ஜெயலலிதாவால், தான் நடித்த படத்தைப் பார்க்க முடியாது என்று குமுதத்தில் வந்த பிட் நியூஸை எல்லோரும் படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், ஆனந்த் தியேட்டரில் அம்மாவோடு உட்கார்ந்து படத்தை ரசித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.

படம் ரீலிஸான அன்று சென்னை தியேட்டர்களில் ஒரே கூச்சல், குழப்பம், சீட்டு கிழிப்பு.

எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கைங்கர்யம்தான்.

‘ அன்று சிந்திய ரத்தம் ’ என்கிற பெயரில் ஆரம்பித்து ஒரே ஷெட்யூலோடு படம் நின்று போனதால் , ஸ்ரீதர் மேல் ரசிகர்களுக்குப் பயங்கரக் கோபம்.

எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்காததால்தான் படம் நின்று போனது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பிரச்னை பெரிதானதும் எம்.ஜி.ஆரே தலையிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

அடுத்த நாள் தினத்தந்தியில் அரைப்பக்க விளம்பரம்.

‘ ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை – பனி விலகிவிட்டது. இனி இந்தப் படத்தை நீங்கள் நன்றாகப் பார்க்கலாம்! ’

‘ வெண்ணிற ஆடை ’ மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

அந்தப் படத்துக்கு ஜெயலலிதா வாங்கிய சம்பளம் மூவாயிரம் ரூபாய்.

தொடரும்…

நன்றி : ஜெ ராம்கி  இணையதளம்


 சில பாடல் காட்சிகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s