அம்மு முதல் அம்மா வரை : பகுதி 6

நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா

ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!

நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6)

1967. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடிதான் அப்போது வெற்றிகரமான ஜோடி.

தேர்தல் நேரத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் ‘தாய்க்கு தலைமகனி ’ லும் , சிவாஜியின் ‘ கந்தன் கருணை ’ யிலும் ஜெயலலிதா நடித்திருந்தார்.

அடுத்து வந்த ‘காவல்கார’ னும் வெற்றி அடைந்தது.

சரோஜா தேவி நடிக்கவிருந்த படம் அது. சேலத்தில் நடந்த நூறாவது நாள் விழாவில் ஜெயலலிதாவையும் பேசச் சொன்னார்கள்.

பேசினார். அதுதான் ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு.

வரிசையாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்ததால் ராசியான ஜோடி என்கிற பெயர் கோடம்பாக்கத்தில்.

விளைவு, எம்.ஜி.ஆர். படம் ஆரம்பிக்கப் போகிறார் என்றால் ஜோடி ஜெயலலிதாதான் என்று முடிவே செய்துவிடுவார்கள்.

அது மட்டுமல்ல. ‘ முழு மதிபோல் என் மேனிக்கு நிறைவூட்டுவது இதுதான் ’ லக்ஸ் விளம்பரத்தில் ஜெயலலிதா.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் சினிமா தாரகையாகவும் மாறி இருந்தார்!

பொதுவாக , எம்.ஜி.ஆர். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்.

படப்பிடிப்பெல்லாம் ஆண்டுக் கணக்கில் நடக்கும்.

ஏற்கெனவே வேறு நடிகைகளை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளையெல்லாம்கூட வெட்டித் தள்ளிவிட்டு ஜெயலலிதாவை நடிக்க வைத்து, மீண்டும் படமெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

kavalkaran நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6) kavalkaran

சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

‘தனிப்பிறவி’ யில் வள்ளியாக ஜெயலலிதாவும் முருகனாக எம்.ஜி.ஆரும் போஸ்டர்களில் போஸ் கொடுத்தார்கள்.

பல படங்களில் சரோஜா தேவிக்குப் பதிலாக ஜெயலலிதா!

தேவிகா , சிவாஜி படங்களில் பிஸி. பானுமதியும் , சாவித்திரியும் தெலுங்குக்குப் போய்விட்டார்கள்.

குடும்பப் பாங்கான படங்களில் நடிக்க சௌகார் ஜானகி , கே.ஆர்.விஜயாவும் இருந்தார்கள்.

பத்மினி , எம்.ஜி.ஆரை எதிர்த்து பரங்கிமலையில் தேர்தல் பிரசாரம் செய்திருந்தார்.

சரோஜோதேவியும் திடீர் கல்யாணம் செய்துகொண்டு ஒதுங்க, ஜெயலலிதாவுக்குப் போட்டி அவர் மட்டுமே.

எம்.ஆர்.ராதாவிடமிருந்து குண்டடிப்பட்ட பிறகு , செட்டுக்கு வந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் காட்சியே டூயட்தான்.

படம் , சந்திரோதயம்.

‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது!’ ஜெயலலிதாவுடன் உற்சாகமாகப் பாடினார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா தனது சம்பளத்திலிருந்து ஒரு பிளைமௌத் கார் வாங்கினார்.

ரொம்ப நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியது. யாரோ வாங்கிக் கொஞ்ச நாள் ஓட்டிவிட்டு, விற்ற அந்த பிளைமௌத் காரின் நம்பர்  MSX 3333.

அதுவரை வீட்டிலிருந்தது சந்தியாவின் அம்பாசிடர்தான்.

நடிக்க வந்து கை நிறைய சம்பளமும் வர ஆரம்பித்த பின்னர்தான் , தனக்குப் பிடித்த நகை , புடைவையெல்லாம் வாங்க ஆரம்பித்தார்.

பணத்தைப் பற்றி ஜெயலலிதா எப்போதும் கவலைப்பட்டதில்லை.

நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.

இவற்றில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , பழைய டைரக்டர் , புது டைரக்டர் , சீனியர் நடிகர் , ஜூனியர் நடிகர் , குடும்பப் படம் , ஆக்ஷன் படம் , திகில் படம் என்று எந்த வித்தியாசமும் கிடையாது.

ஒவ்வொரு படத்தின் பூஜையின் போதும் மாம்பலம் அகஸ்தியர் கோயில் பிள்ளையாருக்குச் சிறப்பு அர்ச்சனை செய்ய மறக்க மாட்டார்!

வெண்ணிற ஆடையைத் தொடர்ந்து அதே விதவைக் கோலத்தில் ஒரு கன்னடப்படம்.

19sachu-with-jaya-madam_0 நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6) 19Sachu with Jaya madam 0சச்சு & ஜெயலலிதா

‘ நன்ன கர்த்வ்யா ’ என்ற அந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு மாமியாராக நடித்தது , சந்தியா.

வசனங்கள் பக்கம் பக்கமாக இருந்தாலும் ஜெயலலிதா சளைக்காமல் பேசி நடித்தார்.

பாட்டா , நடனமா , சோகமா,  சந்தோஷமா எதுவாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்குக் கஷ்டமில்லை.

நிறைய படங்களில் எம்.ஜி.ஆர். பியானோ வாசிக்க , ஜெயலலிதா சுற்றிச் சுற்றி வந்து வெஸ்டர்ன் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார்.

ஜெயலலிதாவுக்கு டான்ஸ் மட்டுமல்ல , பிரமாதமாக பியானோ வாசிக்கவும் தெரியும்.

தெலுங்கிலும் ஜெயலலிதா அலை. நாகேஸ்வரராவ் ஜோடியாக ஜெயலலிதா நடித்த முதல் படமே சூப்பர் ஹிட். ‘ மனுஷலு மமதலு ’ ஜெயலலிதாவை ஆந்திராவில் கனவுக்கன்னி ஆக்கிவிட்டது.

‘கோபாலுடு பூபாலுடு’ படத்தில் என்.டி.ஆரோடு ஜோடியாகும் வாய்ப்பு.

இன்னொரு பக்கம் தமிழில் சிவாஜியின் மூன்றாவது மகளாக ‘ மோட்டார் சுந்தரம் பிள்ளை ’.

நடுவே எம்.ஜி.ஆரோடு ‘குமரிப்பெண் ’, ‘ சந்திரோதயம் ’, ‘ ரகசிய போலீஸ் 115’ படங்களில் டூயட் பாடி , கிளைமாக்ஸில் அலறி , வில்லனுக்குப் பயந்து , கதாநாயகனிடம் தஞ்சம் புகும் வழக்கமான தமிழ் சினிமாக் கதாநாயகி.

தமிழ் , தெலுங்கைத் தொடர்ந்து கன்னடப் படங்களிலும் முன்னணிக் கதாநாயகி.

‘பதுருவதாரி’  என்கிற கன்னடப் படத்தில் சோகமயமான இருதய நோயாளியாக நடித்து இருந்தாலும் ஜெயலலிதாவுக்குப் படத்தில் ஏகப்பட்ட வாய்ப்பு.

சின்னக் கதாபாத்திரமாக இருந்தாலும் ‘மேஜர் சந்திரகாந்தி’ல்   ஜெயலலிதாவின் நடிப்புப் பேசப்பட்டது. ஜெயலலிதாவைப் போலவே 1965 – ல் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சக சாதனையாளர்கள் வாலியும், கே. பாலசந்தரும்.

‘முகராசி’ யில் ஜெயலலிதா கவர்ச்சியாக இருந்தார்.

‘ அன்று கண்ட  முக ’ த்தில் ஜெயலலிதாவுக்குக்  கொஞ்சம் கவர்ச்சிகரமான நடன அசைவுகள்.

ஜெயலலிதாவால் மறுக்க முடியவில்லை , சொன்னவர் எம்.ஜி.ஆர். என்பதால். படம் பார்த்துவிட்டு சந்தியா நிறையவே வருத்தப்பட்டார்.

‘ நிலவு தேபிடி’ தெலுங்கு படத்திலும் அதே காரணத்துக்காகத் தயாரிப்பாளருடன் சண்டை.

பாதி படத்துக்கு மேல் நடிக்க ஜெயலலிதா மறுக்க , மீதிப் படத்தை ஜெயலலிதா மாதிரி இருக்கும் வேறு ஒரு நடிகையைப் போட்டு எடுத்து முடித்துவிட்டார்கள்.

படமும் சூப்பர் ஹிட்.

08jayalalithaa5 நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6) 08jayalalithaa5

வெறும் கவர்ச்சி பொம்மையாக வந்து போய்க் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்குச் குணசித்திர பாத்திரத்தைக் கொடுத்தது தெலுங்கு சினிமா.

‘பிரம்மாச்சாரி ’ யில் பிரமாதப்படுத்தி இருந்தார்.

‘டிக்க சங்கரய்யா’ வில் அசட்டுப் பெண்ணாக அசத்தியிருந்தார். தமிழ்ப் படத்திலும் ஒரு காட்சியிலாவது இப்படி நிஜமாகவே நடிக்க வாய்ப்பு வராதா என்று ஏங்கினார்.

கலர் கலர் டிரெஸ்ஸில் தலைவரோட டூயட் பாடினாலே போதும் ’ என்றார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.

அதையும் மீறி ‘கண்ணன் என் காதல’ னில் கிளாமர் ரோலை ஒதுக்கிவிட்டு ஒரு கனமான கேரக்டரில் நடித்தார். ‘

முத்துச்சிப்பி ’ வந்த பின்னர்தான் ஜெயலலிதாவுக்கு நடிக்க வரும் என்பதைத் தமிழ்த் திரையுலகம் ஒப்புக் கொண்டது.

நல்வரவு என்கிற போர்டை ஃபோகஸ் செய்துவிட்டு மெல்ல நகர்ந்து, அணைக்கட்டின் கீழிருந்து ஓடி வரும் ஜெயலலிதாவை விழுங்க ஆரம்பிக்கிறது காமிரா.

jjsg நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6) JJSG

‘வந்த இடம் .. நல்ல இடம்… வரவேண்டும் காதல் மகாராணி ’ சிவாஜியுடன் கலாட்டா கல்யாணத்துக்காக டூயட்.

தியேட்டரில் பலத்த கைதட்டல். சிவாஜிக்கு அல்ல, ஜெயலலிதாவுக்கு.

ஏதோ பெரிய அரசியல் கூட்டணியே மாறியதுபோல எம்.ஜி.ஆரின் ஜோடி , சிவாஜியுடன் டூயட் பாடியதால் , ரசிகர்கள் கூட்டம் பரவசப்பட்டுப் போனது.

‘கலாட்டா கல்யாணம் ’, நாடகமாக இருந்தபோது , அம்மா சந்தியா நடித்திருந்தார்.

சினிமாவானபோது ஜெயலலிதா நடித்தார்.

எம்.ஜி.ஆரோடு மட்டுமல்லாமல் சிவாஜியுடனும் ஜோடி சேர்ந்ததால் , ஜெயலலிதாதான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக மாறியிருந்தார்.

‘எங்க ஊர் ராஜா’ வில் சிவாஜிக்கு மூன்று ரோல்.

ஜெயலலிதாவுக்கு ஊறுகாய் மாதிரியான கேரக்டர்.

என்னதான் இருந்தாலும்  ஜெயலலிதாவுக்கு   எம்.ஜி.ஆர்.தான்  ராசியான ஜோடி என்று பேச ஆரம்பித்தார்கள்.

அரசியலில் சினிமாவும் சினிமாவில் அரசியலும் தமிழ்நாட்டில் பின்னிப் பிணைந்துக்கிடப்பவை.

எம்.ஜி.ஆர். – சிவாஜி பனிப்போர் தமிழ் சினிமாவில் ரொம்பவும் பிரசித்தம்.

இரண்டும் தனித்தனி கூடாரங்கள். கயிறு இழுக்கும் போட்டிபோல, இருபது ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது.

sivajias நடிக்க வந்த மூன்றே ஆண்டுகளில் ஜெயலலிதா ஐம்பது படங்களைத் தொட்டிருந்தார்.!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-6) sivajias

சிவாஜியை இயக்கும் டைரக்டர், எம்.ஜி.ஆர். படத்தை இயக்க மாட்டார்:

எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கும் நடிகை திடீரென்று கூடாரம் மாறி சிவாஜி படத்தில் நடித்தால், மார்க்கெட் காலி என்று அர்த்தம்.

பாட்டெழுதும் கவிஞர்கள் முதல் யூனிட் ஆள்கள் வரை எல்லாருமே தனித்தனி.

இந்த எழுதப்படாத சட்டத்துக்கு இரண்டு பேர் மட்டுமே விதிவிலக்கு.

ஒருவர் எம்.எஸ். விஸ்வநாதன் , இன்னொருவர் ஜெயலலிதா!

‘ தேர்த் திருவிழா ’ படத்துக்காகக் கும்பகோணத்தில் படப்பிடிப்பு.

காவிரி ஆற்றில் ஜெயலிதா – எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகள்.

ஏகப்பட்ட கூட்டம் கூடியதால் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டது. கூட்டத்தைக் கலைக்க எம்.ஜி.ஆரே வெளியே வந்தார். கூட்டத்திலிருந்து ஒரு ரசிகர் கத்தினார்.

‘வாத்தியாரே… நாங்க கலைஞ்சு போறோம். ஆனா , நீங்க இனிமே ஜெயலலிதாகூட மட்டும்தான் நடிக்கணும்.

’ அந்த நேரத்தில்  எம்.ஜி.ஆரோடு   ஜெயலலிதா நடித்ததெல்லாம்   வரிசையாகத் தோல்வி.

‘ தேர்த்திருவிழா ’ வில் தேரும் இல்லை ; திருவிழாவும் இல்லை. ‘ புதிய பூமி ’ வெறிச்சோடியது.

‘ காதல் வாகனம் ’ என்கிற டைட்டிலுக்காகக் கதை செய்து கோட்டை விட்டார்கள். எம்.ஜி.ஆருக்குத் திடீர் சறுக்கல். அவருக்கு ஓர் அதிரடி வெற்றி தேவைப்பட்டது. சொந்தப்படம் எடுக்க ஆரம்பித்தார்.

தொடரும்..

நன்றி : ஜெ.ராம்கி – இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s