ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 68

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-5

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட வீடியோ கேசட்டுகள், போட்டோக்கள் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களையும் விசாரணைக் குழுவினர் கைப்பற்றினர். இவற்றில் சில ஆவணங்கள் ராஜிவ் காந்தி படுகொலை வழக்குக்கு முக்கியமானவை. ராஜிவ்காந்தி கொலை திட்டமிடலில் பிரபாகரனுக்கும், உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உள்ள தொடர்பையும், காவலில் வைத்துக்கப்பட்டிருந்த சிலருக்குள்ள தொடர்பையும் இந்த ஆவணங்களை வைத்தே சி.பி.ஐ. எஸ்டாபிளிஷ் செய்தது. இந்த ஆவணங்களில் முதன்மையானவை, பொட்டு அம்மான் மற்றும் அகிலாவுக்கு சுபா மற்றும் தனு எழுதிய கடிதங்கள்தான். ராஜிவ்காந்தி படுகொலைக்கு இரு வாரங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கம், சென்னையில் இருந்த முருகனை யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வருமாறு அழைத்திருந்தது. சிவராசன், தனக்கு ஒயர்லெஸ்ஸில் வந்த அந்த உத்தரவை முருகனுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் செல்ல படகை பிடிப்பதற்காக முருகன், 2 சூட்கேசுகள், 4 பைகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்டார்.

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட வீடியோ கேசட்டுகள், போட்டோக்கள் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களையும் விசாரணைக் குழுவினர் கைப்பற்றினர். இவற்றில் சில ஆவணங்கள் ராஜிவ் காந்தி படுகொலை வழக்குக்கு முக்கியமானவை. ராஜிவ்காந்தி கொலை திட்டமிடலில் பிரபாகரனுக்கும், உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் உள்ள தொடர்பையும், காவலில் வைத்துக்கப்பட்டிருந்த சிலருக்குள்ள தொடர்பையும் இந்த ஆவணங்களை வைத்தே சி.பி.ஐ. எஸ்டாபிளிஷ் செய்தது.

இந்த ஆவணங்களில் முதன்மையானவை, பொட்டு அம்மான் மற்றும் அகிலாவுக்கு சுபா மற்றும் தனு எழுதிய கடிதங்கள்தான்.

ராஜிவ்காந்தி படுகொலைக்கு இரு வாரங்களுக்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கம், சென்னையில் இருந்த முருகனை யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வருமாறு அழைத்திருந்தது. சிவராசன், தனக்கு ஒயர்லெஸ்ஸில் வந்த அந்த உத்தரவை முருகனுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் செல்ல படகை பிடிப்பதற்காக முருகன், 2 சூட்கேசுகள், 4 பைகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்டார்.

முருகன் எடுத்துச் சென்ற சூட்கேஸூகளில் இருந்தவை:

‘சாத்தானின் படை’ புத்தகத்தின் பிரதிகள், பொட்டு அம்மானிடம் அளிப்பதற்காக முருகன் எழுதிய வரவு செலவு கணக்குகள், சென்னையில் உள்ள முக்கிய இடங்களின் வீடியோ, பேபி சுப்பிரமணியத்துக்கு பாக்கியநாதன் எழுதிய கடிதம், பொட்டு அம்மானுக்கும் அகிலாவுக்கும் சுபா, மற்றும் தனு எழுதிய கடிதங்கள் உட்பட வேறு சில பொருட்கள்

மே 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை முருகன் வேதாரண்யத்தில் இருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து படகு ஏதும் அங்கு வராததால், சென்னை திரும்ப முருகன் முடிவு செய்தார்.

சென்னை திரும்பியபோது, வேதாரண்யத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க ஆதவு கடத்தல்காரரான சண்முகத்தின் உதவியாளரிடம் தனது சூட்கேசுகளையும், பைகளையும் விட்டுச் சென்றார் முருகன். உதவியாளர் அவற்றை காட்டுப்பகுதியில் புதைத்து வைத்தார்.

சண்முகம் தற்கொலை செய்துகொண்ட பின்னர் அவரது உதவியாளரை விசாரித்து அவர் மூலமாக இந்த சூட்கேசுகள், பைகளை விசாரணைக் குழு கைப்பற்றியது.

பேபி சுப்பிரமணியத்துக்கு பாக்கியநாதன் எழுதிய கடிதம், பாக்கியநாதன் விடுதலைப்புலிகளுக்காக அச்சகம் நடத்தி வந்ததற்கும், விடுதலைப்புலிகளுக்கு அவர் எப்போதும் ஆதரவு அளித்து வந்ததற்கும் ஆதாரமாக வழக்கில் பதிவாகியது.

முன்னதாக, சென்னை மடிப்பாக்கம் வீட்டில் விசாரணைக் குழு கைப்பற்றிய முருகனின் டயரியில் இருந்து காணப்பட்ட வரவு, செலவு விவரங்கள், பொட்டு அம்மானுக்கு முருகன் எழுதிய கடிதத்திலும் இருந்தன. இதனால், சூட்கேசில் இருந்த வரவு செலவுக் கணக்குகள், விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவின் கணக்குகள் என வழக்கில் பதிவாகியது.

சூட்கேஸில் இருந்து கிடைத்த, சுபா, தனு எழுதிய கடிதங்களை விசாரணைக் குழு ஆய்வு செய்தது.

எதற்காக சுபா, தனு கடிதங்கள் எனக் கூற வேண்டும்? அவை இருவராலும் எழுதப்பட்டவையா? 1991 மே 9-ம் தேதியிட்ட அந்த இரு கடிதங்களிலும் காணப்பட்ட கையெழுத்து மூலம், இருவர் சார்பில் இருவரில் ஒருவர்தான் அக்கடிதங்களை எழுதியிருக்க வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழு அறிந்துகொண்டது.

அக்கடிதத்தில் ஊர் எனக் குறிப்பிட வேண்டிய இடத்தில், தமிழீழம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முருகனின் சூட்கேஸ்களையும் பைகளையும் கைப்பற்றுவதற்கு முன், சென்னை கொட்டிவாக்கம் மறைவிட வீட்டிலிருந்து சிவராசனுக்கும், சுபாவுக்கும் சொந்தமான சில பைகளையும் விசாரணைக்குழு கைப்பற்றியது. இவற்றில் சிவராசனின் டயரி, சுபாவின் டயரி, மற்றும் ஆட்டோஃகிராப் புத்தகம் ஆகியவையும் இருந்தன.

சுபாவின் ஆட்டோ கிராஃபில் நளினி எழுதியிருந்தார். “இதயங்கள் பல மைல்கள் பிரிந்திருந்தாலும், உன் மீது நான் கொண்டிருக்கும் அன்பு என்றும் அழியாது” என எழுதி, கைச்சாத்திட்டிருந்தார் நளினி.

ஆட்டோகிராஃபில் நளினி எழுதியதை தவிர, தமிழில் எழுதப்பட்டிருந்த சில வரிகள் சுபாவால் எழுதப்பட்டவை என தெரியவந்தது. எப்படியென்றால், ஜூன் 3-ம் தேதி வரை சுபா டயரியில் எழுதியிருந்தார். ஆட்டோகிராஃபில் இருந்த கையெழுத்தும், டயரியில் இருந்த கையெழுத்தும் ஒரே கையெழுத்து.

டயரியில் ஜூன் 3-ம் தேதி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, சுபா மட்டுமே அதை எழுதியிருக்க வேண்டும் என்ற முடிவுக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு வந்தது. ஏனென்றால் தனு, மே 21-ம் தேதியே குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார்.

சூட்கேஸில் இருந்து கிடைத்த, சுபா, தனு எழுதிய கடிதங்களில் காணப்பட்ட கையெழுத்தும், ஆட்டோகிராஃபில் இருந்த கையெழுத்தும் ஒன்றாக இருந்தன. சுபா, தனு எழுதிய கடிதங்கள், யாழ்ப்பாணத்தில் இருந்த பொட்டு அம்மானுக்கும், அகிலாவுக்கும் எழுதப்பட்டிருந்தன.

இந்த தரவுகளின் அடிப்படையில், பொட்டு அம்மானுக்கும், அகிலாவுக்கும் எழுதப்பட்டிருந்த கடிதங்கள், தனு, மற்றும் சுபாவின் பெயர்களில் இருந்தாலும், இரு கடிதங்களையும் சுபா எழுதினார் என வழக்கில் பதிவாகியது.

இக்கடிதங்களையும், ஆட்டோகிராஃபையும் டில்லியில் உள்ள இந்திய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி, தடயவியல் சோதனை முறை மூலம், அவற்றில் பதிவான விரல்ரேகைகளைக் கண்டறிந்தது சிறப்புப் புலனாய்வுக் குழு. ஆட்டோகிராஃப் புத்தகத்திலிருந்து வலது கை விரல் ரேகையொன்றை நிபுணர்கள் எடுத்தனர்.

சிவராசன், சுபா மரணத்திற்குப் பின், அப்போது இறந்தவர்கள் அனைவரின் விரல்ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. சுபாவின் வலது கைப் பெருவிரல் ரேகை, ஆட்டோகிராஃபிலிருந்து எடுக்கப்பட்ட விரல்ரேகையுடன் ஒத்திருந்தது. எனவே, அது சுபாவின் ஆட்டோகிராஃப்தான் என வழக்கில் பதிவாகியது.

பொட்டு அம்மானுக்கும், அகிலாவுக்கும் அனுப்பப்பட்ட சுபா பெயரிலும், தனு பெயரிலும் எழுதப்பட்டிருந்த கடிதங்களில் என்ன எழுதப்பட்டிருந்தது?

பொட்டு அம்மானுக்கு சுபா, தனு எழுதிய கடிதத்தில் 6 வரிகளே இருந்தன. தாங்கள் மிக நலமுடன் இருப்பதாகவும், இந்தியாவுக்குத் தாங்கள் வந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறும் என நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பொதுக்கூட்டத்துக்குச் சென்று வந்த பின்னர் தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், தங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதில் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் உளவுப்பிரிவுப் பொறுப்பாளராக இருந்த அகிலாவுக்கு எழுதப்பட்ட கடிதம் சற்று நீண்டதாக இருந்தது. அதில் 13 வரிகள் எழுதப்பட்டிருந்தன. அகிலா தங்களிடம் பேசிய ஒவ்வொரு சொல்லையும் இறுதி வரை நினைவில் வைத்திருப்பதாக தனுவும், சுபாவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன், சுபாவையும், தனுவையும் பஜேரா ஜீப்பில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் மதகல் என்ற இடத்துக்கு அகிலாவே ஓட்டிச் சென்றார். அங்கு அவர்கள், பொட்டு அம்மானையும், சிவராசனையும் சந்தித்தனர். மாதகல்லில் வைத்துத்தான், ராஜிவ் காந்தி கொலை ஆபரேஷனுக்காக, பிரதான மனித வெடிகுண்டாக தனுவும், அவரால் முடியாவிட்டால் மாற்று ஏற்பாடாக சுபாவும், சிவராசனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால், அகிலா யார்?

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் அவர் ஒரு எதிரி. ஆனால், அகிலா என்பது விடுதலைப்புலிகள் வட்டாரத்தில் அவரது இயக்கப்பெயர். அவரது உண்மையான பெயர் சிபிஐ புலனாய்வுக் குழுவுக்குத் தெரியவில்லை. அகிலாவின் போட்டோவும் சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவிடம் இருக்கவில்லை.

இதனால், ராஜிவ் கொலை வழக்கின் ஆரம்ப சார்ச் ஷீட் தாக்கல் செய்யப்பட்டபோது, சி.பி.ஐ. புலனாய்வு குழுவை பொறுத்தவரை அகிலா என்பது ஒரு பெயர் மட்டுமே.

(தமிழகத்தில் சி.பி.ஐ.-யால் கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்கள் யாரும், மகளிர் உளவுப் பிரிவின் தலைவியாக இருந்த அகிலா என்பவரை நேரில் சந்தித்ததில்லை. இதனால், அவர்களிடம் இருந்து அகிலா பற்றிய தகவலை பெற முடியவில்லை)

இது நடந்து, 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995 அக்டோபர் 25-ம் தேதி விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், யாழ்ப்பாணம் வாலிகாமம் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில், மூத்த பெண் விடுதலைப்புலி தளபதி அகிலா கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது. அதிலும், அவர் தொடர்பாக வேறு விபரங்கள் ஏதுமில்லை.

பொதுவாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடும்போது, அவரது இயக்க பெயர், பதவி தர நிலை ஆகியவற்றுடன், அவரது நிஜ பெயர் மற்றும் சொந்த ஊர் ஆகியவையும் வெளியிடப்படுவது வழக்கம் (இறந்தவர்களின் குடும்பத்தினர் ‘மாவீரர் குடும்பத்தினர்’ என கொளரவிக்கப்படுவதற்காக, போராளி இறந்தபின் நிஜ பெயர், ஊர் விபரங்களை வெளியிடுவார்கள்).

ஆனால் 1995 அக்டோபர் 25-ம் தேதி விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட செய்தியில், ‘மூத்த பெண் விடுதலைப்புலி தளபதி’ என குறிப்பிடப்பட்டவரின் பெயர், ‘அகிலா’ என மொட்டையாக குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு எந்த விபரமும் கிடையாது.

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான சார்ஜ் ஷீட்டில், பிரதான எதிரிகளாக, பிரபாகரன், பொட்டு அம்மானுக்கு அடுத்தபடியாக அகிலாவின் பெயர் இருந்ததால் (வழக்கில் 3-வது குற்றவாளி), அவர் பற்றிய நிஜ விபரங்களை விடுதலைப்புலிகள் அப்போது வெளியிடாது விட்டிருக்கலாம்.

அகிலா உயிரிழந்து 8 மாதங்களின் பின், 1996 ஜூன் 12-ம் தேதி வெளியான விடுதலைப்புலிகளால் பிரசுரிக்கப்படும் ‘களத்தில்’ பத்திரிகை வெளியானபோது, அதில் அகிலா இடம்பெற்றிருந்தார்.

‘அகிலா என்ற அகிலாக்கா’ என குறிப்பிடப்பட்டு, அவரது போட்டோ, அதில் பிரசுரமாகியிருந்தது.

அப்போதுதான், அகிலாவின் மறைவுக்குப் பின் லெப்டினன்ட் கேணல் பதவி தர நிலை அளித்துக் கௌரவித்தது விடுதலைப்புலிகள் இயக்கம். லெப்டினன்ட் கேணல் அகிலாவின் நிஜ பெயர், சோமசேகரம் சத்யதேவி என களத்தில் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

அவரைப் பாராட்டி எழுதப்பட்ட புகழுரையில், “விடுதலைப்புலிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுவிட்ட அகிலாக்கா, தலைவர் உருவாக்கிய ‘தீக்குழந்தை’ என்ற ‘யோசனை’க்கு வடிவம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் ‘களத்தில்’ பத்திரிகையில் அகிலா பற்றி வெளியான புகழுரையில் மேலும், “பன்முகத்திறன் கொண்ட அகிலாவின் சாதனைகளில் சில, ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். சிக்கலான பிரச்சனைகளுக்குத் அகிலாக்கா தனது எளிதான தீர்வுகளை கூறி மற்றவர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடுவார்” எனவும் எழுதப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமது சிறந்த தளபதிகள், போராளிகள் பற்றிய புகழுரைகளை வெளியிடும்போது, “ஓயாத அலைகளில் (ஆபரேஷன் ஓயாத அலைகள்) டாங்கியை தாக்கி அழித்தார்”, “ஆனையிறவு சமரில் ராணுவ தளத்துக்குள் ஊடுருவிச் சென்றார்” என்பது போன்ற குறிப்புகளை வெளியிடுவது வழக்கம். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெளிவாக புரியும்.

ஆனால், 1996 ஜூன் 12-ம் தேதி வெளியான களத்தில் பத்திரிகையில் அகிலா பற்றிய புகழுரை குறிப்பில், “தலைவர் உருவாக்கிய ‘தீக்குழந்தை’ என்ற யோசனைக்கு வடிவம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்” என்ற வரிகள் ஒருசிலருக்கு மட்டுமே புரியும் வகையில் இருந்தன. காரணம், தலைவர், ‘தீக்குழந்தை’ என்றொரு யோசனையை உருவாக்கியதாக யாரும் அறிந்திருக்கவில்லை.

யுத்தம் முடிந்தபின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்போது விடுதலையாகி இலங்கையில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ஒருவரிடம் பழைய கதைகளை கேட்டு தெரிந்துகொண்டபோது, அகிலா பற்றி எழுதப்பட்ட புகழுரைக்கு விளக்கம் கிடைத்தது.

‘தீக்குழந்தை’ என்பது, ராஜிவ் காந்தியை கொல்ல, தனு, மனித வெடிகுண்டாக வெடித்து சிதறுவதை குறிக்கும்.

“தீக்குழந்தை யோசனையில் அகிலா முக்கிய பங்கு வகித்தார்” என்பதன் அர்த்தம், தனு, மற்றும் சுபாவுக்கு பயிற்சியளித்து, தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்தி கொடுத்தார் என்பதை குறிக்கும்.

“அகிலாக்காவின் சாதனைகளில் சில, ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்” என்பதன் அர்த்தம், அந்த சாதனைகளில் ஒன்று ராஜிவ்காந்தி படுகொலைக்கான நடவடிக்கை என்பதே. (ராஜிவ் கொலை திட்டம், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும், அதை நடத்திய ஓரிருவருக்கும் மட்டுமே அப்போது தெரிந்திருந்தது)

“சிக்கலான பிரச்சனைகளுக்குத் அகிலாக்கா தனது எளிதான தீர்வுகளை கூறி மற்றவர்களைத் திகைப்பில் ஆழ்த்திவிடுவார்” என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா,

மனித வெடிகுண்டாக சென்ற தனு, ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க செல்வதுபோல கையில் சந்தன மாலையுடன் சென்றது, பாதுகாப்பு ஏற்பாடுகளை கடந்து ராஜிவ்காந்தி அருகே செல்ல, அகிலா தெரிவித்த ‘எளிதான தீர்வு’தான்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s