ராஜிவ் கொலை: புலிகள் சிக்கியது எப்படி? அத்தியாயம் 71

d9e7f-rajiv-assasination-20120325-1

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-8

கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் ஒயர்லெஸ் தொடர்புகள் நடந்த நாட்களில், சிவராசன், சுபா, நேரு ஆகியோர் சென்னை கொடுங்கையூரில் விஜயனுடன் தங்கியிருந்தனர். சிவராசன், சுபாவின் போட்டோக்கள், ‘தேடப்படுவோர்’ என ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன. பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதனால், கவலையடைந்த சிவராசன் வெளியே செல்வதையே நிறுத்திவிட்டார். தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர்கூட, தலைமறைவாகிவிட்டனர். இருப்பினும், புலிகளின் உளவுப் பிரிவினருக்கு இல்லாத வசதி, அரசியல் பிரிவினருக்கு இருந்தது.

அது என்னவென்றால், அரசியல் பிரிவினருக்கு உதவியாக இந்திய ஆதரவாளர்கள் பலர் இருந்தனர். பல்வேறு மறைவிடங்களும் இருந்தன.
கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் ஒயர்லெஸ் தொடர்புகள் நடந்த நாட்களில், சிவராசன், சுபா, நேரு ஆகியோர் சென்னை கொடுங்கையூரில் விஜயனுடன் தங்கியிருந்தனர்.

சிவராசன், சுபாவின் போட்டோக்கள், ‘தேடப்படுவோர்’ என ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன. பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

இதனால், கவலையடைந்த சிவராசன் வெளியே செல்வதையே நிறுத்திவிட்டார்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர்கூட, தலைமறைவாகிவிட்டனர்.

இருப்பினும், புலிகளின் உளவுப் பிரிவினருக்கு இல்லாத வசதி, அரசியல் பிரிவினருக்கு இருந்தது.

அது என்னவென்றால், அரசியல் பிரிவினருக்கு உதவியாக இந்திய ஆதரவாளர்கள் பலர் இருந்தனர். பல்வேறு மறைவிடங்களும் இருந்தன.

எனவே, உளவுப் பிரிவை சேர்ந்த சிவராசனை யாழ்ப்பாணத்துக்கு மீட்டு வருவதற்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திருச்சி சாந்தனைப் பயன்படுத்த பொட்டு அம்மான் முடிவு செய்தார்.

பிரபாகரனின் அனுமதி மற்றும் நேரடி உத்தரவு இல்லாமல், சிவராசனுக்கு உதவ திருச்சி சாந்தனை பொட்டு அம்மானால் ஏற்பாடு செய்ய முடியாது. இதனால், பிரபாகரன் மூலம், அந்த உத்தரவு யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் அரசியல் பிரிவு தலைமைக்கு போய், அங்கிருந்து, திருச்சி சாந்தனுக்கு உத்தரவிடப்பட்டது.

இலங்கையில் அந்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் இருந்த சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய மற்றொரு ஒயர்லெஸ் தகவலில், “தமிழகக் கடலோரப்பகுதி முழுவதும் பொலிசார் உஷார் நிலையில் உள்ளனர்.

எனவே, தப்புவதற்கான மாற்றுவழியைத் திட்டமிடும் வரையில் மறைவிடத்தை மாற்றி கொண்டிருப்பதுதான் எனக்குள்ள ஒரே வழி. என்னால் வெளியே நடமாட முடியாது என்பதால், திருச்சி சாந்தன் உதவியுடன் மட்டுமே இதை செய்ய முடியும்” என தெரிவித்தார்.

இதற்கு பொட்டு அம்மானிடம் இருந்து வந்த பதிலில், “உனக்கு உதவிபுரிய திருச்சி சாந்தனுக்கு உத்தரவு போயுள்ளது. உனது குழுவினரை டிரக் மூலம் வேறிடத்துக்கு அழைத்துச் செல்லலாம் என அரசியல் பிரிவுக்கு யோசனை கூறியிருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ராஜிவ் கொலை புலன்விசாரணையின் இந்த இடத்தில், விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவுக்கும், அரசியல் பிரிவுக்கும் இடையிலான முரண்பாடு ஒன்று வெளியே தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அரசியல் பிரிவினரை விசாரித்தபோது, சிவராசனுக்கு உதவுமாறு பிரபாகரன் தனக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தனது ஆட்களிடம் திருச்சி சாந்தன் கூறியதாக தெரிவித்தார்கள். இந்த உத்தரவு திருச்சி சாந்தனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

premium-id“அவர்கள் (உளவுப்பிரிவினர்) தமிழகத்தில் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ போனால், இதனால், எல்லோரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள போகிறோம்.

இதனால், தமிழகத்தில் நாம் இவ்வளவு காலமும் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பு முழுமையாக அழிய போகிறது.

ஒரு காலத்தில் இங்கே (தமிழகத்தில்) விடுதலைப் புலிகளே இருக்க முடியாத நிலை வரும்.

ஆனால், பிரபாகரனிடம் இருந்தே நேரடியாக உத்தரவு வந்துள்ளது என்பதால், உதவுவதை தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி வருத்தப்பட்டதாக, விசாரணையின்போது அரசியல் பிரிவினர் சொன்னார்கள்.

ஜூன் 20-ம் தேதி பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், திருச்சி சாந்தனை எங்கே சந்திப்பது எனத் தெரிந்து கொள்ள விரும்புவதாக கேட்டிருந்தார். அத்துடன், “தேவைப்பட்டால், சுபாவை திருச்சி சாந்தனிடம் ஒப்படைத்துவிட்டு சிறப்புப் புலனாய்வுப்படை தலைமையகம் உள்ள ‘மல்லிகை’ கட்டடம் மீது தாக்குதல் நடத்த நான் தயார்.

அப்படியொரு தாக்குதல் நடத்தினால், சகோதரி அன்புவின் (தனு) ஆன்மா ஓரளவு அமைதியடையும். சி.பி.ஐ.யின் மன உறுதி குலையும்” என்றும் அதே ஒயர்லெஸ் தகவலில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

ஜூன் 21-ம் தேதி பொட்டு அம்மான் அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், “நீங்கள் அனைவரும் வெளியே செல்லும் போதெல்லாம், சயனைட் குப்பியை எடுத்துச் செல்கிறீர்களா?” என்று கேட்டிருந்தார்.

அதே ஒயர்லெஸ் தகவலில் பொட்டு அம்மான், “நீங்கள் தப்பி வருவதற்கு நாம் படகு அனுப்பினால், சிவராசன், சுபா, நேரு ஆகிய மூவர் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். காந்தனும், மற்றவர்களும் முக்கியம் அல்ல. கூடுதலாக ஆட்களைப் படகில் ஏற்றி வருவது தேவையற்ற ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகி விடும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

(அதாவது, காந்தனுக்கும் மற்றவர்களுக்கும் ராஜிவ்காந்தி படுகொலை திட்டமிடல் பற்றி முழுமையாக தெரியாது என்பதால், அவர்கள் அகப்பட்டாலும், எந்த ரகசியமும் வெளியாகாது என பொட்டு அம்மான் நினைத்திருக்கலாம்)

அத்துடன், திருச்சி சாந்தனுடனான தொடர்பை ரகசியமாக வைத்திருக்குமாறும், தமிழகத்தில் உள்ள மற்ற (புலிகளின்) உளவுப் பிரிவினருக்கு தெரிய வேண்டாம் என்றும், அவர்களை சி.பி.ஐ. கைது செய்தால்கூட, சிவராசன் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்றும் பொட்டு அம்மான் சிவராசனுக்கு தெரிவித்திருந்தார்.

சிவராசன், சுபா, நேரு ஆகிய மூவரையும் இந்தியாவிலிருந்து எப்படியேனும், இலங்கைக்கு அழைத்துவர அனைத்து முயற்சிகளையும் விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்கொண்டது. ராஜிவ்காந்தி படுகொலை திட்டமிடல் பற்றி சகலமும் அறிந்தவர்கள் இந்த மூவரும்தான்.

இவர்கள் கைது செய்யப்பட்டால் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பேரழிவு உருவாகும் என்பதை பொட்டு அம்மான் மிக தெளிவாக புரிந்து வைத்திருந்தார் என்பதை, அவரது ஒயர்லெஸ் அறிவுறுத்தல்கள் காட்டுவதாக, சி.பி.ஐ, தமது வழக்கு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது. .

திருச்சி சாந்தனை, சிவராசன் எங்கே சந்திக்க வேண்டும் என்பது குறித்தும், பொட்டு அம்மான் ஒயர்லெஸ் தகவல் அனுப்பியிருந்தார்.

“திருச்சி சாந்தனை சந்திப்பதற்கு உகந்த இடம், விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரும் இலங்கைத் தமிழருமான பொறியாளரின் வீடுதான். அந்த இடமும் கண்காணிக்கப்படக் கூடும் என்பதால், ஒரு தடவைக்கு மேல் அந்த வீட்டுக்குச் செல்ல வேண்டாம்” என சிவராசனை எச்சரித்தார் பொட்டு அம்மான்.

ஆனால், சிவராசன் அந்த வீட்டுக்குப் போகவே இல்லை. சுதந்திர ராஜாவைத்தான் அனுப்பினார்.

திருச்சி சாந்தனும் அங்கு போகவில்லை. தமது ஒயர்லெஸ் ஆபரேட்டர் நிக்சனை அவர் அனுப்பினார்.

சுதந்திர ராஜா, நிக்சன் சந்திப்பு ஜூன் 22-ம் தேதி நடந்தது. இதையடுத்து, சிவராசனைச் சந்திப்பதற்காக நிக்சனை விஜயனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சுதந்திர ராஜா.

தமிழகத்தில் சி.பி.ஐ. வலைவீசி தேடிக்கொண்டிருக்க தலைமறைவாக இருந்த சிவராசன், இலங்கையில் என்ன நடக்கிறது என்பதிலும் ஒரு கண் வைத்திருந்தார் என்பது, சுவாரசியமான ஒரு விஷயம். ஜூன் 21ம் தேதி, கொழும்பில் இலங்கை ராணுவ தளபதியின் தலைமையகம் அமைந்திருந்த கட்டடத்தின் மீது விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

மறுநாள் பொட்டு அம்மானுக்கு சிவராசன் அனுப்பிய ஒயர்லெஸ் தகவலில், “இந்த தாக்குதல் நமது ஆட்கள் (உளவுத்துறை) செய்ததா?” என கேட்டிருந்தார்.

அதற்கு ஆம் என பொட்டு அம்மான் பதிலளித்தார். “இது பற்றி நேரில் விவாதிக்கலாம் நீ வா!. இதைவிட அதிகம் சாதிக்கலாம்” என்றது, பொட்டு அம்மான் அனுப்பிய தகவல்.

மறுநாள் தனது பிரதிநிதியும், திருச்சி சாந்தனின் பிரதிநிதியும் சந்தித்துப் பேசியது பற்றி பொட்டு அம்மானுக்கு தெரியப்படுத்தினார் சிவராசன். அத்துடன், கனகசபாபதியுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதையும் தெரிவித்தார்.

ஒயர்லெஸ் தொடர்பைத் துண்டிப்பதற்கு முன் சிவராசனுக்கு மற்றொரு எச்சரிக்கை விடுத்தார் பொட்டு அம்மான். “ஏதோ ஒரு வகை வாயுவைப் பயன்படுத்தி உன்னை (சிவராசனை) உயிருடன் பிடிக்க சி.பி.ஐ. ஏற்பாடு செய்வதாக அறிகிறேன்” என்றார்.

இந்த ஒயர்லெஸ் தகவல்கள் யாவும், மத்திய உளவுத்துறை ‘ரா’வினால், இடைமறித்து பதிவு செய்யப்பட்டவை. ராஜிவ்காந்தி படுகொலை திட்டமிடல் தொடங்கியதில் இருந்தே பொட்டு அம்மானுக்கு இதில் உள்ள தொடர்பை இவை நிரூபிக்கின்றன என ராஜிவ் கொலை வழக்கு நடந்தபோது, சி.பி.ஐ. வாதாடியது.

அந்த வாதம், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ராஜிவ் கொலை திட்டமிடல் ரகசியம் முழுமையாக தெரிந்த சிவராசனை யாழ்ப்பாணத்துக்கு மீட்டுச் செல்ல, புலிகள் முயற்சிக்கவே இல்லையா?

முயற்சித்தார்கள்.  அது எப்படியான முயற்சி என்பதை, அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s