அம்மு முதல் அம்மா வரை : பகுதி 7

எம்.ஜி.ஆருடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!!

எம்.ஜி.ஆருடன்  ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-7)

‘ அடிமைப்பெண் ’.

இரண்டு வருஷங்களுக்கு முன்பே பூஜை போட்டு பாதியிலேயே நின்றிருந்த படத்தைத்தான் எம்.ஜி.ஆர். தூசி தட்டினார்.

ஆரம்பத்தில் சரோஜா தேவி, கே.ஆர். விஜயாவோடு ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது.

இப்போது அடிமைப்பெண்ணில் ஜெயலலிதா தவிர, வேறு யாருமில்லை.

ஜீவா , பவளவல்லி என ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடங்கள்.

ஜெயலலிதாவின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

2r53i9c எம்.ஜி.ஆருடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-7) 2r53i9c
அடிமைப்பெண்’ படத்தில் இயக்குநருக்கு இணையான அந்தஸ்து ஜெயலலிதாவுக்கும் கிடைத்தது.

படத்தில்  ஜெயலலிதாவுக்குச் சொந்தக்குரலில் ஒரு பாட்டும் உண்டு.

‘அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு! ’ பாட்டு பதிவாகும்போது , பக்கத்திலேயே இருந்து எம்.ஜி.ஆர். ஊக்கப்படுத்தினார்.

சர்ச் பார்க்கில் படிக்கும் காலங்களில்  அசெம்பிளி ஹாலில் கையில் கிதாருடன் கோரஸ் பாடுவது ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான விஷயம்.

சொந்தக்குரலில் சினிமாவில் பாடவேண்டும் என்ற ஜெயலலிதாவின் நீண்ட ஆசை , எம்.ஜி.ஆர். மூலமாகத்தான் நிறைவேறியது.

1969. ராஜஸ்தானில் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பு.

ஜெயலலிதாவுக்கு எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஒகேனக்கலில் தொடர்ந்தது. ஜெயலலிதாவும் சந்தியாவும் சென்னையிலிருந்து ஒகேனக்கலுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

கடைசி நேரத்தில் எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று அவர்களை ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர். வரச்சொல்லிவிட்டார்.

முன்னால் எம்.ஜி.ஆரின் கார், அதைத்தொடர்ந்து ஜெயலலிதா கார் ஒகேனக்கலை நோக்கி போய்க்கொண்டிருந்தது.

கிருஷ்ணகிரி தாண்டுவதற்கே நள்ளிரவு ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆரின் கார் ஆமை வேகத்தில் முன்னால் போய்க்கொண்டிருந்தது. இதே வேகத்தில் போனால் பொழுது விடியும்போதுதான், ஒகேனக்கல் போய்ச் சேரமுடியும்.

பொறுமையிழந்த ஜெயலலிதா, தனது டிரைவரிடம் சொல்லி எம்.ஜி.ஆரின் காரை ஓவர்டேக் செய்து முன்னால் போகச்சொல்லிவிட்டார்.

‘ ராத்திரி  நேரத்தில் வேக வேகமாக காரில் போனால் அம்முவுக்கு என்னாவது ?’ என்ற எம்.ஜி.ஆரின் கவலை அடுத்த நாள் காலையில்தான் ஜெயலலிதாவுக்குத் தெரிய வந்தது.

இன்னொரு முறை ஏற்காட்டில் என்.டி.ஆருடன் ஒரு தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பு.

அதை முடித்துவிட்டு அடிமைப்பெண்ணுக்காக ஜெயலலிதா சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

கடுமையான மழையால் உளுந்தூர் பேட்டை விழுப்புரம் பாலம் உடைந்து ஏகப்பட்ட போக்குவரத்து நெருக்கடி. ஜெயலலிதாவை அழைத்து வர சென்னையிலிருந்து ஒரு காரை எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார்.

இருந்தும் ஜெயலலிதாவால் பாலத்தைக் கடக்க முடியவில்லை. சேலத்துக்குத் திரும்பிப் போய் ரயில் பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் எம்.ஜி.ஆருக்கு நிம்மதி வந்தது.

‘ கண்ணன் என் காதலன் ’ படப்பிடிப்பு நடந்தபோது , இடைவேளையில் மதிய உணவுக்காக காரில் ஏறிவிட்ட எம்.ஜி.ஆர். , அடுத்த காட்சியைப் பற்றி இயக்குநரிடம் கேட்டார்.

மாடிப்படியில் சக்கர நாற்காலியிலிருந்து ஜெயலலிதா உருண்டு விழும் காட்சியைப் படமாக்கப்போவதாகச் சொன்னார்கள்.

ஆபத்தான விஷயமாச்சே என்று  பதறிப்போய்  காரைவிட்டு  இறங்கிய  எம்.ஜி.ஆர். , திரும்பவும் செட்டுக்குள் வந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு , பின்னால் கயிற்றைச் சரியாகக் கட்டச்சொல்லி ஏகப்பட்ட முறை ஒத்திகை பார்த்த பின்னரே ஜெயலலிதாவை நடிக்க அனுமதித்தார்.

மற்ற நடிகைகளைவிட ஜெயலலிதா மேல் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கூடுதல் பாசம் இருந்தது.

அதை ஜெயலலிதாவும் உணர்ந்தே இருந்தார். அதேசமயம் எம்.ஜி.ஆர். காட்டிய அதீத அக்கறை எரிச்சலூட்டியது.

அப்போது தி.மு.க. ஆட்சியிலிருந்த நேரம். 1969 – ம் ஆண்டின் சிறந்த படமாக அடிமைப்பெண் தேர்வு செய்யப்பட்டது.

அடிமைப்பெண்ணின் வெற்றியில் ஜெயலலிதாவுக்குக் கணிசமான பங்கு உண்டு. தெலுங்கு , கன்னடப்படங்களில் நடிப்பதையும் ஜெயலலிதா குறைத்துக்கொண்டார்.

தமிழில் நடிப்பதற்கே நேரமில்லை.

ஜெயலலிதாவின் தேதிக்காக எம்.ஜி.ஆரும் , சிவாஜியும் காத்திருக்க வேண்டி இருந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெயலலிதா , சினிமா மீது ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.

‘குமரிப்பெண்’ படத்துக்காக சைக்கிள்  ஓட்டிய ஜெயலலிதா , ‘தெய்வ மகன்’  படத்துக்காக கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்.

அடிமைப்பெண்ணுக்குப் பதிலாக தெய்வமகன் ஆஸ்காருக்குப் போனதில் எம்.ஜி.ஆருக்கு வருத்தம்.

இரண்டில் எந்தப்படம் ஆஸ்காருக்குப் போனாலும் ஜெயலலிதாவுக்குப் பெருமைதான்.

இரண்டிலும் நடித்தவர் அவர்தானே!

4vqz5z எம்.ஜி.ஆருடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-7) 4vqz5zஎம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டாரத்தில் ஜெயலலிதாவின் செல்வாக்கு மளமளவென்று உயர்ந்தது.

அவர்  நடிக்கும் படங்களின் திரைக்கதை , வசனங்கள் ஜெயலலிதாவின் பார்வைக்கும் வந்தன. அவரது குடும்பத்துடனான தனிப்பட்ட நட்பும் வளர்ந்தது.

சிவாஜியின் படமான ‘ குருதட்சணை ’ படப்பிடிப்பின் மதிய இடைவேளையில் எம்.ஜி.ஆர். – ஜானகியுடன் சாப்பிட ஜெயலலிதா , ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.

எத்தனையோ நடிகைகளுடன் எம்.ஜி.ஆர். நெருக்கமான நட்புடன் இருந்திருக்கிறார். பாசத்தோடு பலரை வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பிட வைத்திருக்கிறார்.

அதையெல்லாம் ஜானகி கண்டுகொண்டதேயில்லை. அவர்களில் பலர் ஜானகியை அக்கா என்றெல்லாம் அழைப்பார்கள்.

ஒரு சினிமா நடிகையாக இருந்ததால் ஜானகிக்கு சினிமாவுலகம் புரிந்தது.

ஆனாலும் ஜெயலலிதா மீது ஜானகிக்கு ஏனோ இனம் புரியாத வெறுப்பு இருக்கத்தான் செய்தது.

ஜெயலலிதாவுக்கு காமெடியும் வரும் என்பதை ‘ எங்க மாமா ’ நிரூபித்தது.

பாலாஜியின் தயாரிப்பில் வந்த ‘ எங்கிருந்தோ வந்தாள் ’ மொழிமாற்றப் படமாக இருந்தாலும் ஜெயலலிதாவின் நடிப்புக்காகப் பேசப்பட்டது.

அப்போது முதல் பாலாஜி படமென்றால் ஜெயலலிதாவுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. ஜெயலலிதா செட்டில் பயன்படுத்திய எவர்சில்வர் டம்ளர் , மடக்கு நாற்காலி இப்போதும் பாலாஜி யூனிட்டில் பத்திரமாக இருக்கிறது.

என்னதான் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த படங்கள் ஜெயலலிதாவை பிரபலப்படுத்தினாலும் அவரை நடிகையாக அங்கீகரித்தது சிவாஜியுடன் நடித்த படங்கள்தான்.

முக்கியமாக நிறைய குளோஸப் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் சினிமாவில் அப்போது திமிர் பிடித்த பெண் கேரக்டருக்கு ஜெயலலிதாவைத்தான் ஒப்பந்தம் செய்வார்கள்.

முதல் பாதியில் மாடர்ன் டிரெஸ்ஸில் வந்து ஹீரோவை அவமானப்படுத்தி , பிற்பாதியில் புடைவை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக வசனம் பேசவேண்டும்.

351etme எம்.ஜி.ஆருடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-7) 351etmeகிட்டத்தட்ட இரண்டு டஜன் படங்களில் ஜெயலலிதாவின் கேரக்டர் இந்த ரகம்தான்.

‘சவாலே சமாளி ’ படமும் அந்த ரகம்தான்.

திமிர் பிடித்த பணக்காரப் பெண் , ஏழை ஹீரோவை மணந்துகொண்டு குடிசையில் குடும்பம் நடத்துவதாகக் கதை.

வீம்பு செய்தாலும் முடிவில் அனுதாபத்தை வரவழைப்பது போன்ற ஒரு கேரக்டர்.

அதில் நடிப்பது நிஜமாகவே ஜெயலலிதாவுக்குச் சவாலாக இருந்தது.

‘ சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ’ என்று வயல்வரப்பில்   ஜெயலலிதா துள்ளிக்கொண்டு ஓடி வரும் பாடல் , அப்போது இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல்.

சிட்டுக்குருவியாகவே தமிழ் சினிமாவில்   சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்குப் பேரிடி வந்தது.

அவரது தாய் சந்தியாவின் மறைவு.

சந்தியா இல்லாமல் ஜெயலலிதாவால் இயங்க முடியாது. அதிர்ச்சியில் அவரால் அழக்கூட முடியவில்லை. யாருமில்லாத தனிமை அவரை வாட்டியது.

சினிமா ஷூட்டிங் தவிர , மற்ற நேரங்களில்தான் சொந்தமாக வைத்திருந்த நாடகக்குழுவில்தான் நேரத்தைச் செலவழித்தார்.

‘ காவிரி தந்த கலைச்செல்வி ’ என்னும் ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் பிரபலம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து எம்.ஜி.ஆர். சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவரானார்.

சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த அரசு சார்பில் விழா நடைபெற்றால் , அதில் ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் கட்டாயம் இருக்கும்.

1971. ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரம்.

நள்ளிரவில் அந்த எட்டு மாடி குடியிருப்பிலிருந்த ஒரு வீட்டின் கதவை பதினைந்து பேர் தட்டிக்கொண்டிருந்தார்கள்.

பகல் முழுவதும்  எக்ஸ்போ 1970 பொருட்காட்சியைச் சுற்றிச் சுற்றி வந்து படமெடுத்துவிட்டு,  இருட்டிய பின்னர் சாப்பாடு கிடைக்காமல் அங்கிருந்த தமிழ்க் குடும்பத்தைத் தேடி வந்திருந்தது ‘ உலகம் சுற்றும் வாலிபன் ’ பட யூனிட்.

வீட்டில் காய் , கறி எதுவுமில்லை. வெறும் சோற்றில் மோர் ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு அந்தச் சின்ன பிளாட்டிலேயே உடம்பைக் குறுக்கித் கிடந்தவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்.

மறுநாள் காலையில் யூனிட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் வயிறார உணவளித்து அனுப்பி வைத்த ஒரு சில மணி நேரங்களில் கதவு திரும்பவும் தட்டப்பட்டது.

திறந்து பார்த்தால் தன்னந்தனியாக ஜெயலலிதா.

‘ உலகம் சுற்றும் வாலிபன் ’ படத்தில் ஜெயலலிதா இல்லை என்பதுதான் , தமிழ் சினிமாவின் பரபரப்பான செய்தி.

jayalalithaa-10_15264 எம்.ஜி.ஆருடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு வாய்பு அளிக்க மறுப்பு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-7) Jayalalithaa 10 15264நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தைத் தெரிந்துகொள்ள ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரைத் தேடி ஜப்பானுக்கே வந்திருந்தார்.

அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகிவிட்டது.

‘நான் ஆணையிட்டால்’ படத்தில் சரோஜா தேவிக்குப் பதிலாக ஜெயலலிதா நடித்த காலத்திலிருந்தே ஆர்.எம்.வீரப்பனுக்கும்  ஜெயலலிதாவுக்கும் பிடிக்காமல் போனது.

ஆர்.எம்.வீ.யின் சொந்தத் தயாரிப்பான ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் ஜெயலலிதா நடிக்கவே கூடாது என்பதுதான் ஆர்.எம்.வீ.யின் முதல் நிபந்தனை.

அதற்கு எம்.ஜி.ஆரின் சம்மதமும் வாங்கப்பட்டிருந்தது.

உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ஜெயலலிதாதான் நடிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். எப்போதே முடிவு செய்திருந்தார்.

படப்பிடிப்பு என்கிற பெயரில் எம்.ஜி.ஆர். , நடிகைகளோடு   ஜப்பானுக்கு உல்லாசப் பயணம் செல்வதாகப் பத்திரிகைகளில் கிசுகிசு வந்தது.

கதை விவாதத்துக்கு வந்த ஆர்.எம்.வீ. , அப்போது ‘ ரிக்ஷாக்காரன் ’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த மஞ்சுளாவை ஜோடியாக ஒப்பந்தம் செய்யலாம் என்றார்.

ஆர்.எம்.வீ.யைப் பற்றி எம்.ஜி.ஆருக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவுடன் நடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் மஞ்சுளாவை சிபாரிசு செய்கிறார் என்பதையும் புரிந்து கொண்டார்.

‘ படத்துல  இன்னொரு ஹீரோயின் கேரக்டரும் உண்டே… ’ என்று எம்.ஜி.ஆர். இழுக்க , லதாவைப் பற்றிச் சொன்னார்கள். எம்.ஜி.ஆரும் விடவில்லை.

படத்தில் மூன்றாவதாகவும் ஒரு ஹீரோயின் கேரக்டரும் உண்டு என்று சொன்ன பின்னர்தான் சிக்கல் ஆரம்பமானது.

யார் யாரையோ சிபாரிசு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்குத் திருப்தியில்லை.

தேடித் தேடி அலுத்துப்போய் கடைசியில்   ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள் என்று அவரும் எதிர்பார்த்தார்.

ஆனால் ஆர்.எம்.வீ. சளைக்கவில்லை. சந்திரகலா என்கிற புதுமுகத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார். முன்னணி நடிகை யாருமேயில்லாமல் புதுமுகத்தையா வைத்துப் படமெடுப்பது என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.

வேறு வழியில்லாமல்  அரைமனத்தோடுதான் எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.

ஜெயலலிதா , எம்.ஜி.ஆருடன் நடிக்கவே கூடாது என்று ஆர்.எம்.வீ. பிடிவாதமாக இருந்தார்.

அப்படிப் பிடிவாதமாக இருந்ததில் எந்தவொரு நியாயமான காரணங்களும் இல்லை.

பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர். பற்றி கிசுகிசு வந்ததால் சேர்ந்து நடிப்பதைத் தடுத்ததாகச் சொன்னார். ஆர்.எம்.வீ.யால் ஜெயலலிதாவை மட்டுமே தடுக்க முடிந்தது. கிசுகிசுக்களை அல்ல.

ஆர்.எம்.வீரப்பன் , எம்.ஜி.ஆருக்கு வெறும் மேனேஜர் மட்டுமல்ல. அரசியலோ , சினிமாவோ எம்.ஜி.ஆருக்கு சகலமும் அவர்தான்.

ஆர்.எம்.வீ.யும் , ஜெயலலிதாவும் இரண்டு துருவமாக நின்று பரஸ்பரம் மோதிக்கொண்டு இருந்த காலங்களிலும் இருவரையும் கூப்பிட்டு எம்.ஜி.ஆர். சமாதானம் பேசியதே இல்லை.

அதைத் தன்னால் செய்ய முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்றாகவே தெரிந்தது.

ஜெயலலிதா Vs ஆர்.எம்.வீரப்பன் கோஷ்டி அரசியல்தான் அடுத்துவந்த பதினேழு வருஷங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலில் சூடான விஷயம்.

1971 மார்ச். ஏகப்பட்ட  இடைவெளிக்குப் பின்னர்  எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க ஜெயலலிதாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

‘ நீரும் நெருப்பும் ’ என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ரத்து செய்துவிட்டு எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்கு சென்றார்.

தேர்தல் பிரசாரத்துக்கான முழு ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தது ஆர்.எம்.வீ.தான். ஜெயலலிதாவின் கால்ஷீட்டும் வீணானது. ஜெயலலிதாவை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான மனவருத்தத்தால் , ‘எங்கள் தங்கம் ’ படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துப்பிறகு நடந்த தமிழ்நாடு அரசின் பரிசளிப்பு விழா ஏற்பாடாகியிருந்தது.

எம்.ஜி.ஆர். வந்திருந்தார். ஜெமினி கணேசன் , சௌகார் ஜானகியெல்லாம் பரிசு வாங்கிவிட்டு திரும்பி வரும்போது , எம்.ஜி.ஆர். சிரித்து வரவேற்றார்.

கடைசியாக ஜெயலலிதா வர , எம்.ஜி.ஆர். முகத்தைத் திருப்பிக்கொண்டார். காத்திருந்த மீடியாவுக்குச் சரியான தீனி!

ஒரு முறை இந்தி சினிமா ஹீரோக்களுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்டார்கள்.

ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம் என்று பதில் சொல்லிவிட்டார்.

இந்தி சினிமாவில் ஹீரோவுக்கு இணையான மரியாதை ஹீரோயின்களுக்கு உண்டு என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருந்தார்.

1968 – ல் ஜெயலலிதா நடித்திருந்த அந்த இந்திப்படத்தின் பெயர் , ‘இஸ்ஸாத் ’. ஹீரோ தர்மேந்திரா.

ஒரே ஒரு இந்திப்படத்தில் நடித்துவிட்டு ஜெயலலிதா ஒட்டுமொத்தமாகக் கருத்துச் சொல்லலாமா என்று எம்.ஜி.ஆருக்கு ஆதங்கம்.

சிவாஜி ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிவாஜியின் நடிப்பை ஜெயலலிதா பாராட்டிப் பேச , எம்.ஜி.ஆர். வட்டாரங்கள் ஆச்சர்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து திருச்சியில் ‘ சவாலே சமாளி ’ படத்தின் வெற்றி விழா.

அங்கேயும் சிவாஜியைப் புகழ்ந்து பேச, எம்.ஜி.ஆரை தாக்கிப் பேசியதாக மீடியா சேதி சொன்னது.

இதுபோன்ற பரபரப்பான விஷயங்களில் எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் இருந்துவிட்டார்.

எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடிக்கவே கூடாது என்பதற்காகவே ஒரு சிலர் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு , இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார்கள்.

எம்.ஜி.ஆரை இனி நெருங்கவே முடியாது என்கிற நிலை வந்ததை ஜெயலலிதா தாமதமாகத்தான் புரிந்துகொண்டார்.

எம்.ஜி.ஆரை விட்டுவிலக ஆரம்பித்து மற்ற படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நல்ல குணச்சித்திர பாத்திரங்களும் கிடைத்தன. காலையில் ஆரம்பித்து மாலை வரை ஒரு காட்டில் நடக்கும் சம்பவங்களை  மட்டுமே  திரைக்கதையாக்கி ஒரு படமெடுத்தார்கள்.

‘திக்கு தெரியாத காட்டில்’ என்னும் அந்தப்படத்தில் முத்துராமனுக்கு மனைவியாக ஜெயலலிதா நடித்தார்.

வித்தியாசமான படமாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் தேறவில்லை.

அன்னமிட்ட கை படத்தில் பட்டிக்காட்டுப் பெண்ணாக வந்து படபடவென்று வசனம் பேசும் கேரக்டர்.

ஒரே மூச்சில் நீளமான வசனத்தைப் பேசிக்கொண்டே நடந்து வந்து ‘ ஆமா.. நடுவுல இது வேற ’ என்று பூசணிக்காயை தடாலென்று போட்டு உடைப்பார்.

படத்தில் ரசிகர்கள் கைதட்டிய ஒரே காட்சி அதுதான்.

பட்டிக்காடா பட்டணமா. சோழவந்தான் மூக்கையா சேர்வையை தமிழ் சினிமா மறக்காது.

ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்.

ஒரு கிராமத்தானுக்கு வாழ்க்கைப்படும் நவநாகரிகப் பெண். கிளைமாக்ஸ் வரை வில்லியா , கதாநாயகியா என்று பார்ப்பவர்களை குழம்ப வைக்கும் முகம்.

படம் முழுக்க மாடர்ன் உடையில் உலா வருவார். ஒரே ஒரு பாட்டில் மட்டும் மூக்குத்தி , கொண்டை , பட்டுப்புடைவை சகிதம் ஆடச் சொன்னார்கள்.

அந்தப்பாட்டுதான் இன்றைக்கும் டீக்கடைகளில் அலறிக்கொண்டிருக்கிறது. ‘அடி , என்னடி ராக்கம்மா பல்லாக்கு… ’ தானே நடித்திருந்தாலும் படம் பிடிக்கவில்லை என்றால் ஜெயலலிதா

அதைப் பார்க்கவே மாட்டார். படம் எப்படி வரும் என்பது நடிக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிடும். உள்ளதை உள்ளபடியே சொல்வதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

ஒருமுறை தான் நடித்த ஒரு படத்தைப் பற்றி பத்திரிகைகளில் பேட்டியே கொடுத்தார். ‘ நான் அந்தப்படத்தை முழுசாப் பார்க்க முடியலை. பார்த்துட்டிருக்கும்போதே போரடிச்சு தூக்கம் தூக்கமா வந்துடுச்சு! ’

தொடரும்

நன்றி : ஜெ ராம்கி , இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s