சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்: பாகம் 33

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!!

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம்

புலிகளை ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நோர்வேயும் பலத்த முயற்சிகளை எடுத்தன.

புலிகள் மீது பலமான அழுத்தங்கள் போடப்பட்டன. பயங்கரவாத அமைப்புகள் தடை, வங்கிக் கணக்குகள் உறைய வைத்தல், ஐரோப்பிய பயணங்கள் தடை என எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் புலிகளைப் பேச்சுவார்த்தையை நோக்கித் திரும்ப வைத்தன.

2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தாம் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நோர்வேயினருக்கு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இலங்கை அரசும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இச் செய்திகளைத் தொடர்ந்து கூட்டுத் தலைமை நாடுகள் இரு தரப்பாரும் வன்முறையை முழுமையாகக் கைவிட்டு சமாதானத்தில் தமது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டுமெனவும், கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்டவைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டுமென  நீண்ட பட்டியலொன்றையும் வெளியிட்டிருந்தது.

இவ் அறிக்கை கூட்டுத் தலைமை நாடுகள் இப் பிரச்சனையில் மிக முக்கியமான பங்கினை வகிக்கப் போவதை உணர்த்தியது.

இதன் பின்னர் வன்முறை படிப்படியாக குறையத் தொடங்கியது. சம காலத்தில் மனித உரிமை பற்றிய கோரிக்கைகள் சர்வதேச அளவில் எழுந்தன.

ஜெனீவா மனித உரிமைச் சபையினர் ஐ நா சபையின் அனுசரணையுடன் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது.

இதே வேளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கமும், புலிகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக குற்றம் சாட்டியது.

குறிப்பாக ஏ9 பாதையை மூடி உணவு விநியோகத்தைத் தடுத்துள்ளதாக கூறியது. மறு பக்கத்தில் உணவுக் கப்பல்களின் பாதுகாப்பை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என புலிகள் கூறினர்.

39937843_leader1  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் 39937843 leader11

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதி வரும் இக்பால் அத்தாஸ் அவர்கள் கருணாவை பேட்டி கண்டிருந்தார்.

புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். எனவேதான் காலத்தை கடத்தும் வழிகளை நோக்குகின்றனர்.

நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் தயார் என்பது அவர்களது பலவீனத்தை எடுத்துக் காட்டுகிறது.

தனது வெளியேற்றத்தின் பின்னர் பல தோல்விகளை பிரபாகரன் சந்தித்துள்ளார்.

நல்ல விவேகமுள்ள, தலைமை தாங்கும் ஆற்றலுள்ள, பல வெற்றிகளைத் தந்த போராளிகளை இழந்துள்ளார்.

பல முனைகளிலும் புலிகள் தமது திறனை இழந்துள்ளனர். இது வன்னியில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் சர்வதேச அபிப்பிராயமும் சார்பாக இல்லை.

அவர்களது வீழ்ச்சிக்கான ஆரம்பம் கிழக்கில் கட்டுப்பாட்டிலிருந்த பெரும் பகுதி நிலத்தை இழந்துள்ளதிலிருந்து ஆரம்பித்துள்ளது.

வெகு விரைவில் எமது போராளிகளை அவர்கள் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் காண நேரிடும். அதனால் பொட்டு அம்மான் போன்றோரின் தீவிரப்போக்கான தற்கொலைத் தாக்குதலுக்கு செல்ல நேரிடும்.

இவை பிரபாகரனுக்கு அச்சுறுத்தலாக அமைய நிலமைகள் மேலும் மோசமடையலாம் என கருணா தெரிவித்திருந்தார்.

புலிகளும், அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அறிவித்ததால் 2006ம் ஆண்டு அக்டோபர் 28-29 திகதிகளில் ஜெனீவாவில் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.

இத் தருணத்தில் தேசிய பாதுகாப்புக் கருதி தாம் சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அரச தரப்பிலிருந்து வெளியான தகவல் கூட்டுத் தலமை நாடுகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது.

பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான திகதி அறிவித்து மூன்று வாரங்களுக்கு முன்னர் அதாவது அக்டோபர் 6ம் திகதி மாங்கேணியில் இரு தரப்பாருக்கும் போர் மூண்டது.

இரு தரப்பார் மத்தியிலும் பலத்த இழப்புகள். கருணா தரப்பினரும் ராணுவத்துடன் இணைந்துள்ளதாக புலிகள் குற்றம் சாட்டினர்.

அக்டோபர் 11ம் திகதி முகமாலை முன்னரங்கில் போர் மூண்டது. இங்கு புலிகளின் தந்திரோபாயத்தினால் போர் மூண்ட இரு மணி நேரத்தில் சுமார் 130 ராணுவத்தினர் கொலையுண்டதோடு, மேலும் 500 ராணுவத்தினர் காயமடைந்தனர்.

முகமாலையைத் தொடர்ந்து  திருகோணமலை முகாமிலிருந்து ராணுவத்தினர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக அக்டேபர் 16ம் திகதி பாரிய வாகனங்கள் தெருவில் தடுப்புக்காக நிறுத்தப்பட்டன.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த கடற்படை வாகனத்தில்; வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட லொறி மோதியதால் 130 கடற்படையினர் கொல்லப்பட்டதோடு, 130 பேர் காயமடைந்தனர்.

இத் தாக்குதலால் நிலை குலைந்திருந்த அரசிற்கு மேலும் தலையிடி காத்திருந்தது.

காலி துறைமுகத்தில் உள்ள கடற்படைத் தளத்தை புலிகளின் இரண்டு படகுகள் அக்டோபர் 18ம் திகதி தாக்கின.

பாகிஸ்தான் இத் துறைமுகம் மூலமாகவே ஆயுதங்களை இலங்கைக்கு விநியோகித்தது. இத் தாக்குதல்கள் நாட்டில் எப் பகுதியிலும் புலிகள் தாக்கும் வல்லமை உடையவர்கள் என்பதை உணர்த்தியது.

இப் பின்னணியில் 2016ம் ஆண்டு அக்டோபர் 16ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்த மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு அரசியல் அமைப்பிற்கு முரணானது என ஜே வி பி இனால் தொடரப்பட்ட வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது சர்வதேச அளவிலும் குறிப்பாக இந்தியா மத்தியிலும் விரக்தியை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே இலங்கை இனப் பிரச்சனையில் இந்தியாவின் முக்கிய அத்திவாரமாகும்.

இத் தீர்ப்பு எதிர்வரும் மாவீரர் தின உரையில் பிரபாகரனை சுதந்திர நாட்டுப் பிரகடனத்தை நோக்கித் தள்ளலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் கருதினர்.

அக்டோபர் 23ம் திகதி இன்னொரு ஆச்சரியம் நிகழ்ந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ‘ தேசியக் கொள்கைகள்’ என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.

இம் முயற்சி தேசிய அளவிலான தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க உதவலாம் எனக் கருதப்பட்டது. கூட்டுத் தலைமை நாடுகளும் அதனை வரவேற்றன.

richard-boucher-2jpg-preview  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் Richard Boucher

(Sri Lankan President Mahinda Rajapaksa (R) talks to U.S. Assistant Secretary of State for Central and South Asian Affairs Richard Boucher at the President House in Colombo October 19, 2006.)

அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் (Richard Boucher) யசூசி அகாசி, ஆகியோரின் வருகை அங்கு போர் நிலமைகளை ஓரளவு தணித்திருந்தது.

இத் தருணத்தில் வட பகுதியில் காணப்பட்ட மனித நேயத் தேவைகளிற்கான மோசமான நிலமைகளை தமிழ்ச்செல்வன் அமெரிக்க அமைச்சருக்கு கூறினார். புலிகளின் கவனம் ஏ9 பாதையைத் திறக்க வைப்பதுதான்.

ஜெனிவாவில் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் முறைப்படி ஆரம்பிக்கவில்லை. அங்கு நிகழ்ச்சிநிரல் எதுவும் இருக்கவில்லை.

இரு சாராரையும் நெருக்கமாக்க முயற்சிகள் எடுக்கபட்ட போதும் அது சாதகமாகவில்லை. இதனால் எரிக் சோல்கெய்ம் முதலில் தனது உரையைத் தொடங்கினார்.

கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தத் தவறியதால் 2 இலட்சம் மக்கள் உள்ளுரில் இடம் பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 3000 பேர் போரில் இறந்துள்ளதாகவும், ராணுவ முனைப்பிற்கு சர்வதேச ஆதரவு ஒருபோதும் இருக்கப்போவதில்லை எனவும் பேச்சுவார்த்தைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சர்வதேச ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவித்த அவர் மூன்று முக்கியமான பிரச்சனைகள் மேசையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அவையாவன:

மனிதாபிமான சிக்கல்கள்,

ராணுவ விஸ்தரிப்பு,

அரசியல் தீர்வு என்பன எனக் கூறினார்.

சோல்கெய்ம் இன் உரையைத் தொடர்ந்து இரு தரப்பாரும் ஏற்கெனவே தயாரித்த தமது உரைகளை வெளியிட்டனர்.

அதில் அரச தரப்பில் பேசிய அமைச்சர் சிறீபால டி சில்வா இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்ததைகளுக்குப் பின்னர் நடந்த சம்பவங்களைப் பட்டியல் போட்டு புலிகளுடன் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் நோக்கத்தின் நிகழ்ச்சி நிரலையும் தெரிவித்தார்.

புலிகள் தரப்பினரும் அதே போலவே தமது அரசியல் கோரிக்கை வரை நீண்ட பட்டியலை வெளியிட்டனர்.

இரண்டாம் நாளின்போது புலிகள் ஏ9 பாதையை மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைக் கூறி ஆரம்பித்தனர்.

அரச தரப்பினர் அவற்றை நிராகரிக்க புலிகள் தம்மால் தொடர்ந்து பேச முடியாது எனக் கூற நிலமைகள் இழுபறி நிலைக்குச் செல்ல நோர்வே தரப்பினர் ஒருவாறாக மேசைக்கு அழைத்து வந்தனர்.

ஏ 9 பாதையை மூடியமையை பேர்லின் சுவருக்கு உதாரணமாக தமிழச்செல்வன் கூறி அப் பாதை தொடர்பான பேச்சுவார்தைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமெனக் கூறினார்.

அரச தரப்பினர் தாம் கடல் வழியாக உணவுகளை குடாநாட்டிற்கு அனுப்பலாம் எனக் கூற புலிகள் அதனை நிராகரித்தனர்.

geneva-talks1_0  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் Geneva Talks1 0

(Protagonists of war shake hands for peace: LTTE’s chief negotiator S. P. Tamilselvan shakes hands with Sri Lanka Government chief representative Minister Nimal Siripala de Silva while Norway’s International Development Minister Erik Solheim looks on in Geneva)

இரு தரப்பாரும் இணக்கமற்ற நிலையில் காணப்பட்டதால் அடுத்த பேச்சுவார்த்தையை டிசெம்பர் இலும் அதனைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு பெப்ரவரியிலும் வைக்கலாம் என நோர்வே தரப்பினர் தெரிவித்தபோது ஏ9 பாதை விவகாரம் தீர்க்கப்படாமல் தம்மால் அடுத்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள முடியாது என தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இதனால் எதுவித உடன்பாடும் எட்டப்படாமல் சந்திப்பு முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இரு தரப்பாரும் அடுத்த பேச்சுவார்ததைக்கான திகதியை ஏற்றுக்கொள்ளாவிடினும், இரு தரப்பாரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீதான தமது நம்பிக்கையை வெளியிட்டார்கள் எனவும், ராணுவத் தாக்குதல்களை நடத்துவதில்லை என ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் சோல்கெய்ம் தெரிவித்தார்.

05_04_06_kli_01_53081_435  வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக் காரணமாக 2006ம் ஆண்டு மாவீரர் தின உரையில் சுதந்திரநாடு பிரகடனம் எதிர்பார்க்கப்பட்டது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 33) -சிவலிங்கம் 05 04 06 kli 01 53081 435Norwegian Special Envoy Mr. Jon Hanssen-Bauer shaking hands with Mr. S.P. Thamilchelvan

 

இந்த இரண்டாவது ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தொடர்பாக நோர்வே அனுசரணையாளர் ஜொன் ஹன்சன் பவர் (Jon Hanssen Bauer)  தெரிவிக்கையில் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பமே பிரச்சனையாக அமைந்ததாகவும், இரு சாரரும் மேசைகளின் பின்னால் அமர்ந்தபோது புலிகள் வலது பக்கத்தில் அமர்ந்தனர்.

இதனை அரச தரப்பினர் புலிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக முறையிட்டதாகவும், சோல்கெய்ம் தனது உரையில் முதலில் புலிகளை முதலில் விளித்துப் பேசியதும் சரியாக போய்ச்சேரவில்லை எனவும், அரச தரப்பினர் கோபமடைந்ததாக குறிப்பிடுகிறார்.

இவை அவர்களது முகங்களில் வெளியானதாகவும் குறிப்பிட்ட அவர்… “சிக்கலான பிரச்சனைகளில் தாம் ஆரம்பித்தபோதும் அது எடுபடவில்லை எனவும் புலிகள் ஏ9 பாதை விவகாரம் தீர்க்கும் வரை மேலும் பேச தாம் தயாரில்லை என கூற அரச தரப்பினர் பாதகாப்பு காரணங்களைக் கூறி புலிகள் ராணுவ நோக்கங்களுக்காகவே திறக்கும்படி வற்புறுத்துவதாக கூறினர்.

அரச தரப்பினர் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக தயாரில்லை. ஆனால் அவர்கள் எதையும் பேச அனுமதிக்கப்படவில்லை.

எதற்கும் இணங்காமலேயே அடுத்த திகதியை நிர்ணயிக்க அரச தரப்பினர் முற்பட்டனர். இரு தரப்பாரும் பொதுவாகவே பேச விரும்பவில்லை போரிடவே விரும்பினார்கள்.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s