சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 34

கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு

பாதகமாக அமைந்தது!!

கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம்

வாசகர்களே,

கடந்த  கட்டுரையுடன் 2006ம் ஆண்டு பிரபாகரனால் வழங்கப்பட்ட   மாவீரர் தின உரையையும் இவ் இணையத்தில் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ் உரை இரண்டாவது ஜெனீவா சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த பின்னணியில் இடம்பெற்றிருந்தது.

இப் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகமும் தனது சக்தியைச் செலவிட்டிருந்தது.

எனவே அவர்களின் முயற்சியும் தோல்வி அடைந்தது என்றே நாம் கொள்ளவேண்டும்.

முக்கியமாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் ஆகிய நாடுகளின் ஈடுபாடு பயனற்றதாகியது எனக் கொள்ள முடியுமா? அல்லது  அதற்கு ஒரு விலை உண்டு என நாம் கருதலாமா?

அவ்வாறானால்  இத் தோல்வியைத் தொடர்ந்து  ஆரம்பித்த போரும்   அதன் முடிவுகளும் அதில் ஈடுபட்ட இரு தரப்பாருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.

எந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் போராளியாக, பாதுகாவலனாக இருப்பதாக கூறி போராட்டத்தை நடத்திய விடுதலைப்புலிகள்  அம் மக்களில் பல லட்சம் பேரைக் காவு கொள்ளும்   உக்கிரமான போரை  நடத்த ஏன் முனைந்தார்கள்?

அதே போன்று இலங்கையின்  இறைமையைப் பாதுகாப்பதாகக் கூறி பயங்கரவாத்த்தின் பிடியிலிருந்து நாட்டைப் காப்பாற்றுவதாகக் கூறி தனது பிரஜைகளை  படுகொலை செய்யும் போருக்கு இலங்கை அரசு முடிவு செய்தது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவா?

அல்லது தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனிமேல் இல்லை என்ற முடிவின் வெளிப்பாடா?

இரண்டாவது ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் நிலமைகள் ராணுவ தலையீட்டினை அதிகரிக்கலாம் என நோர்வே தூதுவர் கருதினார்.

இதன் காரணமாக நோர்வேயின் சமாதான முயற்சிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.

இருப்பினும் நோர்வே தொடர்ந்து இதில் ஈடுபடுவது அமெரிக்கர், இந்தியர், கூட்டுத் தலைமை நாடுகள் என்பன நோர்வேயினை தொடர்ந்து  ஊக்கப்படுத்தியதால்  மேலும் ஈடுபட வைத்தது.

இலங்கை அரசும் தமது வெவ்வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நோர்வேயினரின் பங்களிப்பை நிறுத்தவும் தயாராக இருக்கவில்லை. ஆனால் வெவ்வேறு தரப்பார் மூலமாக நோர்வேயைத்  திட்டித் தீர்த்தார்கள்.

060222geneva0 கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 060222geneva0The LTTE delegation led by Anton Balasingham, sat across a four sided table from Ministers of the new Rajapakse government in Colombo. Norwegians and the Swiss hosts sat on a third side and the truce monitors completed the square.

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த சில நாட்களுக்குள்ளாகவே போர் ஆரம்பமானது.

2006ம் ஆண்டு நவம்பர் 2ம் திகதி கிளிநொச்சியில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் 5 பொதுமக்கள் இறந்தனர். வைத்தியசாலையும் தாக்குதலுக்குள்ளாகியது.

இதனால் நோயாளிகள் பயத்தினால் வெளியேறினார்கள். இத் தாக்குதல் சர்வதேச மனிதநேய சட்டங்களுக்கு முரணானதாக அமைந்திருந்தது.

இரு சாராரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என கூட்டுத் தலைமை நாடுகள் அறிக்கை விடுத்தன.

நிலமைகள் மோசமடைந்தன. நவம்பர் 8ம் திகதி கடற்கரைக் கிராமமான கதிரவெளியிலிருந்த அகதிகள் முகாம் ராணுவ ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

இதனால் 50 அகதிகள் கொல்லப்பட்டதோடு, 135பேர் காயமடைந்தனர். அதற்கு அருகாமையில் புலிகளின் முகாம் இருந்நதாக அரச தரப்பில் கூறப்பட்ட போதிலும் கண்காணிப்புக் குழுவினரின் விசாரணையில் அதில் உண்மையில்லை என்பது தெரியவந்தது.

இவ் வாகரைச் சம்பவம் குறித்து ராணுவ தரப்பு  சாட்டுகளைக்  கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இதேபோன்ற சம்பவங்களை அதாவது பொதுமக்களின் மரணங்களை அது தமிழரோ முஸ்லீம்களோ அல்லது சிங்களவரோ அதில் வேறுபாடு இல்லாமல் அவற்றைத் தமது அரசியல் லாபத்திற்காக புலிகள் பயன்படுத்தினர்.

08_11_poonakary_09 கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 08 11 poonakary 09Sri Lanka Monitoring Mission (SLMM) Major General Lars Johan Sølvberg and his delegation who were visiting the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled Pooneryn jetty

வாகரைச் சம்பவ தினத்தன்று பூனேரியில் (Pooneryn)   கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார்ஸ் சொல்பெர்க்   (Lars Solvberg)ராணுவ தாக்குலிருந்து மயிரிழையில் தப்பினார்.

ஏ 9 பாதை மூடப்பட்டதைத் தொடர்ந்து மாற்று வழிகள்  மூலம் உணவுகளை எடுத்துச்   செல்லும் வாய்ப்புகளைக்  கண்டறிவதற்காக அரச சம்மதத்துடன் அவர் அங்கு சென்றார்.

அவர் அங்கு நிற்பது ராணுவத்திற்கு நன்கு தெரியும். பூனேரித் துறைமுகம் பாவனைக்கு உகந்ததாக உள்ளதா? என்பதனை உறுதிப்படுத்தவே அவர் அங்கு சென்றார்.

அங்கு நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் பதுங்கு குழிக்குள் மறையவேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் புலிகளின் உதவியுடன் தமது இருப்பிடத்திற்குச் சென்றார்.

08_11_poonakary_06 கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 08 11 poonakary 06

HoM seeking refuge at an LTTE bunker in Pooneryn

இச் செய்தியைக் கேள்வியுற்ற எரிக் சோல்கெய்ம் இத் தாக்குதல் அங்குள்ளவர்களைக் கொல்லவே என்ற முடிவுக்கு வந்த அவர் ஒருவேளை அத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு கண்காணிப்புக்குழுத் தலைவர் அங்கிருப்பது தெரியாமல் இருக்கலாம் என்றார்.

அரசாங்கம் இச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியதோடு வழமைபோலவே எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் தவிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரான ஜொன் ஒஸ்க்கர்  ( Jon Oskar ) தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கும், கண்காணிப்புக் குழுவிற்குமிடையே காணப்பட்ட  நெருக்கடியான உறவை இது உணர்த்தியதாகவும், குறிப்பாக பாலித கோகனவுடனான உறவினை இது பிரதிபலித்தது என்றார்.

11_11_06_raviraj_06 கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 11 11 06 raviraj 06

இவை ஒரு புறம் தொடர அரசியலில் மேலும் துக்கமான சம்பவங்கள் தொடர்ந்தன்.

2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவரது மெய்ப்பாதுகாவலருடன் படுகொலை செய்யப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது கூட்டமைப்பு உறுப்பினராக அவர் காணப்பட்டார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக் கூடிய ஒருவர் அவர்.

அவ்வாறான மிதவாத கருத்துடைய, சிங்கள மக்கள் மத்தியிலேயும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். அவர்களின் மொழிகளுக்கு அப்பால் இவ்வாறானவர்களின் குரலை ஒடுக்குவது அரசின் தேவையாகவும் இருந்தது எனக் கூறப்பட்டது.

இவரது மரணம் தொடர்பான விசாரணைளை நடத்துவதற்கு பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து பொலீசாரின் உதவியை மகிந்த கோரியிருந்தார்.

இதிலிருந்த வேடிக்கை என்னவெனில் உள் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க அவர் ஓர் ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

ரவிராஜின் மரணத்தை விசாரிக்க பிரித்தானிய பொலீசாரைக் கோரும் ஜனாதிபதி, நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க நியமித்த குழுவில்  எவ்வாறான நம்பிக்கை  கொண்டுள்ளார் என்ற கேள்விகள் எழுந்தன.

அத்துடன் வெளியாரின் உதவியின்றி அரசினால் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பது புலனாகியது.

இப் பின்னணியில் ஏ 9 பாதையை பரீட்சார்த்த முறையில் முகமாலையில் திறக்கப்போவதாக நவம்பர் 19ம் திகதி அரசு அறிவித்தது.

நவம்பர்  21ம் திகதி கூட்டுத்  தலைமை நாடுகள் அமெரிக்காவில் மனிதாபிமானப் பிரச்சனைகள் குறித்து சந்திக்க இருந்த வேளையில் இவ் அறிவிப்பு வெளியாகியபோது  அதனைப் புலிகள் நிராகரித்தனர்.

அத்துடன் நவம்பர் 16ம் திகதி அரசு தனது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டியிருந்தது. அதில் பாதுகாப்பு செலவினங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 45 சதவீத அதிகரிப்புக் காணப்பட்டது. இவை போருக்கான ஆயுதங்கள் கொள்வனவுக்கான முயற்சி எனக் கருதப்பட்டது.

jonn கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் jonnUN’ special advisor on children and armed conflicts Allan Rock

இத் தருணத்தில் ஐ நா சபை செயலாளரின் விசேட பிரதிநிதி அலன் றொக்   ( Allan Rock ) 10 நாள் விஜயத்தில் இலங்கையில் தங்கியிருந்தார்.

புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அத்துடன் கருணா குழுவினர் ராணுவத்தின் உதவியுடன் அரச தரப்பிற்காக சிறுவர்களை ஆயுதக் குழுவில் இணைப்பதாக சாட்சியங்களும் அவருக்குக் கிடைத்தன.

அவரும் தனது அறிக்கையை ஐ நா செயலாளருக்கு ஜனவரியில் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஏ 9 பாதை திறப்பு பற்றிய அரச அறிவித்தல் வெளியாகியது.

கூட்டுத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் கண்காணிப்புக் குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவது இரு தரப்பினரின் கடமை எனவும், குறிப்பாக ஏ 9 பாதை திறப்பது முக்கியமானது எனவும் தெரிவித்திருந்தது.

நவம்பர் மாவீரர் தின உரையில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவிழந்துவிட்டது எனவும், அரசு பொருளாதார முனையிலும், ராணுவ முனையுமாக இரு வழியில் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது எனவும் கூறி சர்வதேச அரசுகள் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென பிரபாகரன் கோரினார்.

2006ம் ஆண்டு டிசம்பரில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும்படி மகிந்தவிற்கு அழுத்தம் கொடுத்தார். தாம் டிசம்பர் மாத மத்தியில் அதிகார பரவலாக்கல் அடிப்படையில் இடைக்கால தீர்வு ஒன்றை முன்வைக்கப்போவதாக மகிந்த தெரிவித்திருந்தார்.

72686919 கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 72686919
ஆனால் மாவீரர் தின உரை முடிவடைந்து நான்காம் நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸ படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் தப்பினார்.

ராஜபக்ஸ சகோதர்கள் குறித்து மேற்குலக ராஜதந்திரி ஒருவர் தெரிவிக்கையில் பஸில் நேரடியாக எதையும் பேசுபவர். தினசரி அரசியலை நீண்ட நோக்குடன் நட்புறவுடன் பேசுபவர். அவருடன் இலகுவில் பேச முடியும். ஆனால் அவர் மிகவும் தந்திரமாக பேசுபவர். அத்துடன் இலகுவில் உணர்ச்சி வசப்படுவார்.

கோதபய மிகவும் இறுக்கமானவர். மாற்றமடைவதற்குத் தயங்குபவர். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அல்லது பேச தயங்குபவர். ஓன்றை அவர் தீர்மானித்துவிட்டால் அதனை விளங்கப்படுத்தும் மனநிலைக்கு அவர் சென்றுவிடுவார்.

அவர் மற்றவர் சொல்வதைக் கேட்பதை விட பேசுவதே அவரது நடைமுறையாகும். இது ஒரு வழியில் வெற்றியை இட்டுச் செல்வதற்கான வழிமுறையாக கொள்ளக்கூடும்.

22th-opedmahinda_-photo-n-ram கூட்டமைப்பு உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இன உறவுக்கு பாதகமாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 34) -சிவலிங்கம் 22TH OPEDMAHINDA Photo N Ram

மகிந்த அரசியலில் கவரக்கூடியவர். ஆனால் கபடம் நிறைந்தவர். பகிடியாக அவர் காணப்படுவார் ஆனால் அவர் பல விதங்களில் குழப்பம் நிறைந்த மனிதர்.

அவரது சகோதர்கள் இல்லாமல் அவரால் முன்னேற முடியுமா? என்பது சந்தேகமே.

ஆனால் அவரை யாராவது அவமானப்படுத்தினால் அல்லது அவரது சகோதர்ர்கள் மீது கைவைக்க எண்ணினால் அது அவரது தனிப்பட்டதாகிவிடும். அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும்.

நான் 2005ம் ஆண்டு பிரபாகரனுக்கு எனது நேசக் கரத்தை நீட்டினேன். ஆனால் அவர் எனது சகோதரரை படுகொலை செய்ய முயற்சித்துள்ளார். சரி. நான் யார்? என்பதை அவருக்கு காட்டுகிறேன் என்பது போன்று சிந்திப்பவர்.

இத் தருணத்தில் நோர்வே விசேட தூதுவர் ஜொன் ஹன்சன் பவர்  ( Jon Hanssen Bauer ) இலங்கை திரும்பினார்.

சமாதான முயற்சிக்கான வாய்ப்புகள் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளைக் கண்டறிவதை விட போரிலேயே அரசின் கவனம் சென்றது.

அவரது வருகைக்கு முன்பதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகை கருணா இன் செவ்வி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் எரிக் சோல்கெய்ம் பாரிய அளவிலான தொலைக்காட்சி ஒன்றினை பிரபாகரனுக்கு வழங்கியதாகவும், அத்துடன் பாலசிங்கத்திடம் 16 மில்லியன் நோர்வே குரோன் பணம் கொடுக்கப்பட்டதாகவும்  பதிலாக புலிகள் தரப்பினர்   ஒஸ்லோவில் எரிக் சோல்கெய்ம் இற்கு வீடு வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இவற்றை நோர்வே நிராகரித்திருந்தது.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட   TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s