அம்மு முதல் அம்மா வரை : பாகம் 9

ஆந்திரா நடிகர் சோபன் பாபுவுடன்  உறவு!!

ஆந்திரா நடிகர்  சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9)

1979. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன.

மதுவிலக்கை ரத்து செய்யக் கூடாது என்று சொன்னதால்தான் கருணாநிதி என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார் என்று அடிக்கடி பேசியிருந்த எம்.ஜி.ஆருக்கு மதுவிலக்கு என்கிற முக்காடு ரொம்ப நாளைக்கு கை கொடுக்காது என்ற யதார்த்தம் புரிந்தது.

மதுவிலக்கைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் ஒரே கொள்கைதான் என்று கிண்டலடித்தது ஒரு துக்ளக் கட்டுரை. எழுதியவர்  ஜெயலலிதா.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜெயலலிதா. இடைப்பட்ட காலத்தில் ஏதேதோ நடந்திருந்தது.

14-1426334233-5thingsaboutjayalalithathatyoumighthaveneverknown ஆந்திரா நடிகர்  சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9) 14 1426334233 5thingsaboutjayalalithathatyoumighthaveneverknown

 ‘டாக்டர் பாபு ’ வில் நடித்ததில் சோபன் பாபு பழக்கமாகியிருந்தார்.

சோபன் பாபுவைத் திருமணம் செய்துகொண்டு , ஜெயலலிதா ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகச் சில செய்திகள்.

சோபன் பாபுவுடன் நல்ல புரிந்துணர்வு   இருப்பதாக வெளிப்படையாக ஜெயலலிதாவே ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

‘ ஆந்திரா அந்தகதா ’, ஆந்திராவின்  கவர்ச்சிகரமான மனிதர் என்று அழைக்கப்பட்ட சோபன் பாபு , எழுபதுகளில் தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஸ்டார்.

என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் படங்களில் இரண்டாவது ஹீரோவாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு, ஒரு சில வருடங்களிலேயே  முன்னணி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு  சினிமாவில் அதிகமாக விருதுகள் வாங்கிய பெருமை சோபன் பாபுக்கு உண்டு.

ஜெயலலிதாவுடன் ‘ டாக்டர் பாபு ’ உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயலலிதா எழுத்தாளர் அவதாரம் எடுத்தார்.

முன்னாள் நடிகை தன்னுடைய சினிமா அனுபவத்தைத்தான் எழுதுவார் என்று எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில் ஜெயலலிதா எழுதியது , நடப்பு அரசியல் பற்றி!

துக்ளக்கில் ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

முதல் வாரத்தோடு தமிழ்நாட்டு அரசியலை தவிர்த்துவிட்டு மற்ற விஷயங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார்.

இந்திய டாக்டர்களின் அலட்சியம் , கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம் , ஜோஸ்யத்தின் சாத்தியம் என எல்லாமே கனமான விஷயங்கள்.

திரும்பவும்  சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது ஜெயலலிதாவுக்கு.

‘ கிருஷ்ண லீலா ’, ‘ தேவன் கோயில் மணியோசை ’, ‘ கண்ணகியா , மாதவியா ’, ‘ மாற்றான் தோட்டத்து மல்லிகை ’ என்று ஒரு டஜன் படங்களில்  நடிப்பதாக   அறிவிப்புகள்.

அவற்றில் பாதிகூட வெளிவரவில்லை.

கிடைத்ததெல்லாம் அக்கா , அண்ணி , அம்மா வேடங்களே. கதை , பாத்திரம் பற்றியெல்லாம் ஏகப்பட்ட கேள்வி கேட்டுத் திருப்தியாக இருந்தால்  மட்டுமே ஒப்புக்கொண்டார்.

கதாநாயகன்கூட  அறிமுகமானவராக இருக்கவேண்டும்.

கதாநாயகனை   நேரில் பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது , ஒரு பழைய ஸ்கூட்டரில்  போயஸ் தோட்டம்  வீட்டுக்கு வந்திறங்கியவர் ரஜினிகாந்த்!

1980. ராணி சீதை ஹாலில் ஆர்.எம்.வீ. தலைமையில் ஒரு நடன அரங்கேற்றம்.

விழாவுக்கு  ஜெயலலிதாவும் வந்திருந்தார். கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் ஆர்.எம்.வீ. ஜெயலலிதா சந்திப்பு.

பழசை மறந்து ஜெயலலிதாவை பாராட்டிப் பேசிவிட்டு வீட்டுக்கு வந்த ஆர்.எம்.வீ.க்கு எம்.ஜி.ஆரிடமிருந்து போன்.

‘ என்ன , ரொம்பப் பாராட்டினீர்களாமே ?’ ‘ யாரைச் சொல்றீங்க ? புரியலையே! ’ ‘ அம்முவைத்தான்.

பாராட்டெல்லாம் ஜாஸ்தியா இருந்துச்சாமே!’ ‘ யார் உங்களுக்குச் சொன்னாங்க ?’ ‘ அம்முதான் சொன்னது! ’

ஆர்.எம்.வீ. அதை எதிர்பார்க்கவேயில்லை. திரும்பவும் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஜெயலலிதா!

ஜனவரி 4, 1981. மதுரையில்   உலகத் தமிழ் மாநாடு. நாட்டிய    நிகழ்ச்சிக்காக ரயிலில் தனது குழுவினரோடு வந்திருந்தார் ஜெயலலிதா.

முதல் நாள் , ராஜா முத்தையா ஹாலில் ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி. எம்.ஜி.ஆரால் வரமுடியவில்லை.

அவர் சார்பாக ஜானகி வந்திருந்தார். அடுத்த நாள் காலை இன்னொரு நாட்டிய நிகழ்ச்சி. அதற்கும் எம்.ஜி.ஆர். வரவில்லை.

எம்.ஜி.ஆர். வந்தே ஆகவேண்டுமென்றார் ஜெயலலிதா. ஒருவழியாக அரைமணி நேரம் தாமதமாக எம்.ஜி.ஆரும் வந்துசேர்ந்தார்.

கருணாநிதிக்கு  ஒரு குங்குமம் பத்திரிக்கை இருப்பதுபோல தனக்கொரு பத்திரிக்கை வேண்டுமென்று எம்.ஜி.ஆர். நினைத்தார்.

‘ தாய் ’ ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆசிரியர் வலம்புரி ஜான்.

துக்ளக் , குமுதம் பத்திரிகைகளில் எழுதியது போல , தாய் பத்திரிகையிலும் ஜெயலலிதா எழுத ஆரம்பித்தார்.

14-1426334265-9thingsaboutjayalalithathatyoumighthaveneverknown ஆந்திரா நடிகர்  சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9) 14 1426334265 9thingsaboutjayalalithathatyoumighthaveneverknown

எழுத்தாளர்

எனக்குப் பிடித்தவை ’ என்கிற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை எனக் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எழுதினார்.

தாய் பத்திரிகையில் முக்கிய எழுத்தாளராக ஜெயலலிதா இருந்தபோது நடந்த அந்தச் சம்பவம், எம்.ஜி.ஆரை அதிருப்தியடையச் செய்திருந்தது.

சம்பவம் நடந்தது சென்னைப் பல்கலைக்கழக அரங்கத்தில். தமிழ் சினிமாவின் பொன்விழா.

விழாவின் பாதி நிகழ்ச்சிகளை ஜெயலலிதாவும் மீதியை சௌகார் ஜானகியும் தொகுப்பதாக ஏற்பாடு.

ஒரு வாரமாக   ஒத்திகை செய்துவிட்டு , தன்னுடைய முறைக்காகத் தயாராக இருந்த சௌகார் ஜானகிக்கு ஏமாற்றம்.

மறு பாதியையும் ஜெயலலிதாவே தொகுத்து வழங்கினார்.

கோபமான சௌகார் ஜானகி அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்ய , பத்திரிகைகளுக்குப் பரபரப்பான செய்தி கிடைத்தது.

சௌகார் ஜானகி வெளிநடப்புச் செய்தது தவறு என்று ஜெயலலிதா பேட்டி கொடுக்க , எம்.ஜி.ஆருக்குக் கோபம்.

காரணம், ஜெயலலிதா பேட்டி கொடுத்திருந்தது குங்குமம் பத்திரிகைக்கு.

பிறகு எம்.ஜி.ஆரை சுலபமாகச் சமாதானம் செய்துவிட்டார் ஜெயலலிதா.

ஏதாவது ஒன்றைச் செய்து தமிழக மக்களைத் தன்னோடு இணைத்துக் கட்டிப்போட விரும்பினார் எம்.ஜி.ஆர்.

இதற்காக  அவர் கொண்டுவந்த திட்டம் , சத்துணவு. நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பமான சத்துணவுத் திட்டம் , சூப்பர் ஹிட்.

இந்தச் சமயத்தில்தான் அரசியலில் தடம் பதிக்க எம்.ஜி.ஆரிடம் அனுமதி கோரினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்கும் அப்போது கருணாநிதியின் தாக்குதலைக் கூட்டாக எதிர்கொள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமான முகங்கள் தேவைப்பட்டன.

அ.தி.மு.கவின்   அரசியல் கொள்கையை விளக்கும் 29 பக்க அண்ணாயிஸம் கையேட்டை கொடுத்து படித்துவிட்டு வரச் சொன்னார்.

jayaold44 ஆந்திரா நடிகர்  சோபன் பாபுவுடன் ரகசிய உறவு!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-9) jayaold44

ஜூன் 4, 1982 அன்று கட்சிக்கு ஒரு கவர்ச்சி முகம் கிடைத்தது.

ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி எம்.ஜி.ஆரிடமிருந்து உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு , கட்சியில் சேர்ந்தார் ஜெயலலிதா.

நான்கே மாதத்தில் கடலூரில் கட்சி மாநாடு. அலங்கார வளைவுகள் , கொடிகள் , தோரணங்கள் , போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாகச் சிரித்துக் கொண்டிருந்தன ஜெயலலிதாவின் கட்அவுட்டுகள்.

மாநாட்டில் பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசிய ஜெயலலிதா , தான் கட்சியில் சேர சத்துணவுத் திட்டமே காரணமென்றார்.

ராமனுக்கு அணில் போலக் கட்சிப்பணி செய்யப் போவதாகச் சொன்னார்.

17.10.82. அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டு அன்றோடு பத்தாவது ஆண்டு விழா.

மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம்.

கறுப்பு கலரில் ரவிக்கை, அரக்கு சிவப்பில் ஜரிகை போட்ட பட்டுப்புடைவையில் ஜெயலலிதா.

எல்லோரும்   பேசி முடித்த பின்னர் கடைசியாகத்தான் மைக்கைப் பிடித்தார்.

தொகுதியில் கட்சியை வளர்த்த உண்மையான , அடிமட்டத் தொண்டர்களின் பெயர்களைச் சொல்லி முடித்துவிட்டு , நேராகக் கழக அரசியலுக்கு வந்துவிட்டார்.


தெடர்புடைய செய்தி

ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்

1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா!

அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது.

தொடரும்…

நன்றி : ஜெ. ராம்கி –  இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s