உடன் பிறவா சகோதரியான கதை : பாகம் 5

கார்டனுக்கு சசிகலா… கட்சிக்கு நடராஜன்…

கார்டனுக்கு சசிகலா… கட்சிக்கு நடராஜன்… – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை – அத்தியாயம் 5

1973 முதல் 1980-வரை, ‘எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா’ சந்திப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஜெயலலிதாவை, தன் நாட்களில் மட்டுமல்ல, நினைவுகளில் இருந்தே, அகற்றி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். உண்மையில், அபபோது, அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

தனிக்காட்டு ராஜாவைப்போல், கட்சியையும் ஆட்சியையும் நடத்திச் சென்றார். 1982-ல் ஜெயலலிதா கட்சிக்குள் வந்ததும், எம்.ஜி.ஆரின் நிம்மதி தொலையத் தொடங்கியது; அவருக்குத் தலைவலி ஆரம்பித்தது.

அ.தி.மு.க-வில் ஏட்டிக்குப் போட்டிகள் தலைதூக்கின. எம்.ஜி.ஆரின் இரண்டு கரங்களாகத் திகழ்ந்த சீனியர்கள் ஒன்றைச் சொல்வார்கள்.

அந்த வழியில் எம்.ஜி.ஆரைக் கொண்டுபோக நினைப்பார்கள்.

அதில், ஏதாவது ஒரு இடத்தில் வந்து, ஜெயலலிதா ‘செக்’ வைப்பார்; கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும்; பத்திரிகைகள் பரபரப்பாகும்.

இந்தச் சலசலப்புக்கும் பரபரப்புக்கும் காரணம் யார்? என்று தொண்டர்கள் ஆர்வமாகத் தேடுவார்கள்.

அனைத்துக்கும் காரணகர்த்தா, ‘ நான்தான்’ என்று ஜெயலலிதா அங்கே காட்சியளிப்பார்.

உண்மையில், இப்படி எல்லாம்  செய்வதற்கு அன்றைய ஜெயலலிதாவுக்கு விபரம் போதாது. நடைமுறைகள் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவை அப்படி வழிநடத்தியவர் நடராஜன்.

final_1_12004 கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 5 கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 5 final 1 12004

ஜெயலலிதாவின் முதலமைச்சர் கனவு!

சாதாரண கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அப்போதே முதலமைச்சர் கனவு வந்திருந்தது. கட்சியில்  ‘நம்பர் ஒன்’ எம்.ஜி.ஆர் மட்டும்தான்.

அவரைத்தவிர மற்றவர்கள் பூஜ்யம் என்றே ஜெயலலிதா மதிப்பிட்டு இருந்தார். “இத்தனை பூஜ்ஜியங்களை வைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆரால் ஆட்சியைப் பிடித்து, பூஜ்ஜியங்களுக்கும் ராஜ்ஜியத்தில் பொறுப்பு கொடுத்து,  வெற்றிகரமாக அதைக் கொண்டு செலுத்த முடிகிறது என்றால், அது தன்னால் முடியாதா?” என்று கருதினார் ஜெயலலிதா.

அவரின் கண்களுக்குள், குடியேறி இருந்த இந்தச் சந்தேகக்  கனவைக் கலைத்துவிடாமல், கண்களை எரிக்கும் லட்சிய வெறியாக அதை வளர்தெடுத்தார் நடராஜன்.

அது ஜெயலலிதாவுக்கான லட்சியம் அல்ல; ஜெயலலிதா மூலம் தன் மனைவி சசிகலாவுக்கான லட்சியம்; தன் மனைவி சசிகலா மூலம், அது தனக்கான லாபம்” என்பது நடராஜனின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

கார்டனுக்குள் சசிகலா!

இந்த லட்சிய இலாபங்களை அடைய, போயஸ் கார்டன் வீட்டுக்குள் சசிகலா சில வேலைகளைச் செய்தார்; அ.தி.மு.க- என்ற கட்சிக்குள்  சில வேலைகளைச் செய்தார்.

போயஸ் கார்டன் ஊழியர்களுக்கு வேட்டு வைத்து சிதறடித்தைப்போல, அவ்வப்போது, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்துபோகிறவர்களுக்கும் வெடி வைத்தார் சசிகலா.

அதில் சிக்கிச் சிதறியவர்களில் முக்கியமானவர், ஜெயலலிதாவின் நீண்ட நாள் தோழி லீலா. தோட்டம் வளர்ப்பதில் லீலா கெட்டிக்காரர். ஜெயலலிதா, மனம்விட்டுப்பேசும் ஒரு சில தோழிகளில் லீலாவும் ஒருவர்.

ஒரு நாள் லீலாவைத் தொடர்பு கொண்ட ஜெயலலிதா, சில புத்தகங்களை கொண்டுவரச் சொன்னார். ஜெயலலிதா சொன்னநாளில், சொன்ன நேரத்துக்கு லீலாவும் வந்தார்.

ஆனால், அவருக்கு வாசலிலேயே முட்டுக்கட்டை விழுந்தது. “இன்றைக்கு அம்மா யாரையும் வரச்சொல்லவில்லையே” என்றார் போயஸ் கார்டன் வாசல்  செக்யூரிட்டி. இது சசிகலாவின் வேலை.

திகைத்துப்போன லீலா, “இல்லையே… இன்றைக்குத்தானே என்னை வரச் சொன்னார்” என்றார். “எங்களுக்கு அப்படி ஒரு தகலும் இல்லை.

வேண்டுமென்றால், நீங்கள் வேண்டுமானால், உள்ளே வெயிட் பண்ணுங்கள்” என்று வேண்டாவெறுப்பாக உள்ளே அனுப்பினார் செக்யூரிட்டி.

லீலாவுக்கு அப்போதே மனம் விட்டுப்போனது. “சரி வந்ததுவந்துவிட்டோம்…. உள்ளே ஒரு எட்டுப்போய் காத்திருக்கலாம்” என்று வீட்டுக்குள் வந்து அமர்ந்தார் லீலா.

 ஜெயலலிதா அப்போது மாடியில் இருந்தார். அவருக்கும் லீலா வந்த தகவல் சொல்லப்படவில்லை. தகவல் சொல்ல வேண்டிய சசிகலா, சொல்லவில்லை.

ஆனால், லீலாவிடம் வந்து, “ஜெயலலிதா உங்களை இன்னொரு நாள் வரச் சொல்லிவிட்டார். நீங்கள் இப்போது கிளம்பலாம்” என்றார். லீலாவுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

“நம்மை வரச் சொல்லிவிட்டு, வந்தபிறகு பார்க்க முடியாது எனத் திருப்பி அனுப்பினால், என்ன அர்த்தம்” என்று சினந்து கொண்டே சென்றுவிட்டார்.

அவர்போனபிறகு, “ஜெயலலிதாவிடம் சென்ற சசிகலா, “உங்களைப் பார்க்க லீலா வந்தார்… காத்திருக்கச் சொன்னேன், எனக்கு காத்திருக்க எல்லாம் நேரமில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்” என்றார்.

இப்போது, ஜெயலலிதாவுக்கு  கோபம், “அவர் வந்து எவ்வளவு நேரம் ஆனது” என்று சசிகலாவிடம் கேட்டார்.

“இப்போதுதான் வந்தார். வந்ததும் ஜெயலலிதா எங்கே?” என்றார். “5 நிமிடங்களில் வந்துவிடுவார். வெயிட் பண்ணுங்கள் என்றேன்.

ஆனால், அவர் கேட்கவில்லை” என்று சசிகலா சொன்னதை ஜெயலலிதா அப்படியே நம்பினார். “ஒரு 5 நிமிடம் கூட எனக்காகக் காத்திருக்க முடியாதா?” என்று என்று ஜெயலலிதாவுக்கும் கோபமும் ஏமாற்றமும்.

அதோடு அவர் லீலாவைத் திருப்பி எப்போதும் அழைக்கவே இல்லை. அதன்பிறகு, எப்போதும் லீலாவை அழைக்காதபடி, சசிகலா பார்த்துக்கொண்டார்.

கட்சிக்குள் நடராஜன்!

இதையே, கட்சிக்குள் வேறு விதமாக நடராஜன் செய்தார். அன்றைக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவர் ஜனார்த்தனன். அன்றைக்கு ஜெயலலிதா கட்சியின், சாதரண கொள்கை பரப்புச் செயலாளர் அவ்வளவுதான்.

இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால்,  ஜனார்த்தனனை இன்றைக்கு ஜெயலலிதா இருந்த இடத்திலும், ஜெயலலிதாவை இன்றைக்கு நாஞ்சில் சம்பத் இருக்கும் இடத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும்.

final_3_12287 கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 5 கார்டனுக்கு சசிகலா... கட்சிக்கு நடராஜன்... - சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை - அத்தியாயம் 5 final 3 12287

அப்போது, அ.தி.மு.க சார்பில், ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குத் தலைமை அன்றைக்கு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜனார்த்தனன்.

ஆனால், வேறு சில வேலைகளால்,  அந்த கூட்டத்தில் ஜனார்த்தனன் கலந்து கொள்ளவில்லை. கட்சி அரசியலில் இது சாதரண விஷயம். ஆனால், ஜனார்த்தனன் கலந்து கொள்ளாததை அரசியல் ஆக்கினார் ஜெயலலிதா.

அப்போது, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சியின் சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், “கட்சிக்காரர்கள் கஷ்டப்பட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றனர். அதில் போய் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் புண்படும்.

அது கட்சியை பலவீனப்படுத்தும். ஆகவே, அந்தக்கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு, அந்த நோட்டீஸ் விவகாரத்தை எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்த்தார்.

“ஒரு கொள்கை பரப்புச் செயலாளர், ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு எப்படி நோட்டீஸ் அனுப்பலாம்?” என்று கட்சிக்குள் சீனியர்கள் உறுமினர்.

“அந்தம்மா, கேட்பது நியாயம்தான்” என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். இந்த யோசனை, யோசனையை செயல்படுத்திய ஜெயலலிதா, ஜெயலலிதா செய்ததைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்த்ததற்குப் பின்னால் இருந்தது, சாட்சாத் பி.ஆர்.ஓ நடராஜன் தான்.

இதில், மனதளவில் அடிபட்ட ஜனார்த்தனன், மெல்லவும் முடியாமல், விளக்கம் சொல்லவும் முடியாமல் அவமானத்தால் குறுகிப்போனார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் ஏதோ செய்து அவரைச் சமாதானப்படுத்தினார்.

இது சாதரணமான விவகாரமாகத் தோன்றலாம். ஆனால், கட்சியில் உள்ள பெரும்பகுதி தொண்டர்களின் பார்வையை, ஜெயலலிதாவின் மேல் திரும்ப வைத்தது.

“கட்சியில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் எல்லாம் சும்மாதான்… இனி எல்லாம் அம்மாதான்” என்று அப்போதே அவர்களை குழப்பி அடித்தது. அன்று ஜெயலலிதா செய்ததை, இன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கு  அ.தி.மு.க-வில் இருக்கும் நாஞ்சில் சம்பத், விளக்கம் கேட்டு, ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா? அப்படி அனுப்பினால், நாஞ்சில் சம்பத் அடுத்த நொடி கட்சிக்குள் மட்டுமல்ல..

வேறு எங்கேயாவது, எதுவாகவாவது இருக்க முடியுமா? ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில், ஜெயலலிதா அப்படி ஒரு காரியத்தைச் செய்தார்.

நடராஜன் அதைச் செய்ய வைத்தார். ஜெயலலிதாவுக்குப் பின்னால் நடராஜன் இருப்பதை அறிந்த, மூத்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், அப்போதே நடராஜனின் வளர்ச்சியை வீக்கம் என்று வருணித்தார்.

எம்.ஜி.ஆரின் தந்திரம்!

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களுக்கும் ஏற்பட்ட இந்த முட்டல்மோதலை எம்.ஜி.ஆர் ஒருபக்கம் ரசித்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

“தன் கண் முன்னாலேயே, ‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து, இவர்தான்’ என்று யாரும் யாரையும் பேசவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்.

அதற்காக, இரண்டாம் இடத்தில் உள்ள சீனியர்களை ஜெயலலிதாவை வைத்தும், ஜெயலலிதாவை இரண்டாம்கட்ட சீனியர்களை வைத்தும் தலையில் தட்டிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த வித்தையை, ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கே எதிராகப் பயன்படுத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதற்குப் பின்னால் இருந்தவர்கள் சசிகலா-நடராஜன்.

தொடரும்

நன்றி : ஜோ ஸ்டாலின் இணையதளம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s