சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 39

2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!!

2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம்

பலரும் எதிர்பார்த்திருந்த மாவீரர் தின உரை பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் வான் அலைகளில் வெளிவந்தது.

நவம்பர் 27ம் திகதி வழமையான வழி முறையில் வழங்க முடியாது போனது.

உரை வெளிவருவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முதல் ‘புலிகளின் குரல்’ என்ற பெயரில் வெளிவரும் வானொலி அமைந்த கட்டிடம் விமானப்படையால் தரைமட்டமாக்கப்பட்டது.

மாற்று ஏற்பாடு ஏற்கெனவே இருந்தமையால் அவ் உரை உரிய நேரத்தில் வெளியானது.

அதே நேரத்தில் புலிகளின் இதயப்பகுதியும் இனி மிச்சமில்லை என்ற செய்தியை மகிந்த அரசு இத் தாக்குதல் மூலம் உணர்த்தியிருந்தது.

பிரபாகரனின் அவ் உரை வழமையான சிங்கள பேரினவாதிகளுக்கு எதிரான உரையாக அமையவில்லை.

பதிலாக சர்வதேச அரசுகள் இலங்கை ராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிரான விமர்சனமாக அமைந்தது.

குறிப்பாக நோர்வே, கூட்டுத் தலைமை நாடுகள், கண்காணிப்புக் குழு, இந்தியா ஆகிய நாடுகளை நோக்கியதாகவும், இந் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வழி முறைகளை பாதுகாக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக கூட்டுத் தலைமை நாடுகள் பல்வேறு நாடுகளில் சந்திப்புகளை, மாநாடுகளை நடத்தியதன் நோக்கமென்ன? சிங்கள ஆட்சியாளரைப் பலப்படுத்தி, தமிழ் மக்களை அழித்தொழிக்கவா? என வினவினார்.

அவரது ஒட்டுமொத்தமான உரை சுற்றிவழைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களின் மனோநிலையை வெளிப்படுத்தியதாக பலரும் கருதினர்.

2007ம் ஆண்டின் இறுதிப்பகுதி மன்னார் பகுதியை அண்டிய போர்க்களமாக அமைந்தது.

போரே இனி ஒரே வழி என்பதை கோதபய ராஜபக்ஸ டிசம்பர் 29ம் திகதி வழங்கிய பேட்டி உறுதிப்படுத்தியது.

அவரது கருத்துப்படி போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தற்போது நகைப்புக்குரிய ஒன்று எனவும், போர் என்பது முடிவை நோக்கிச் செல்வதாக கருதுவதே பொருத்தமாக அமையும் என்றவர் புலிகளை முறைப்படி தடை செய்வதற்கான சரியான தருணம் இதுவே என்றார்.

மறுநாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்த 6 மாதங்களில் புலிகளின் சகல முகாம்களும் தாக்கப்படும் என அறிவித்த அவர் தினமும் 10 பயங்கரவாதிகளை  கொல்வது தமது இலக்கு எனவும், புலிகளின் பலம் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது எனவும், தாம் இன்னும் மேலதிக தூரம் அடுத்த ஆண்டு செல்லப்போவதாகவும் அறிவித்தார்.

z_p13-norwegian 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் z p13 norwegianSampanthan, Tore Hattrem

 

இச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவராக ரோ ஹற்றெம்  ( Tore Hattrem)  நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது கருத்துப்படி தாம் மகிந்தவுடன் சந்திப்புகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்ட போதிலும் சிங்கள சமூகத்துடன் தொடர்புகளை  ஏற்படுத்துவதில்   தமக்கு பாரிய பிரச்சனைகள் ஏற்படவில்லை எனவும்…,

ஆரம்பத்தில் சந்தேகங்கள் காணப்பட்ட போதிலும்  தூதுவராலயம்  கொண்டிருந்த தொடர்புகள்   காரணமாக சிங்களத் தலைவர்கள்,   ராணுவத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் ஆகியோரைச் சந்தித்து தாம் ஆரம்பித்த இடத்திலிருந்து தற்போது வந்துள்ள இடம்வரையான விபரங்களைப் பரிமாறி ஏற்பட்டிருந்த சமச் சீரற்ற நிலையை மீண்டும் சமநிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும்,  தமிழருக்கு  சாதகமாக இருப்பதாக  காணப்பட்ட   மனோ நிலையை மாற்றி   சமாதானத்திற்கும், பேச்சுவார்த்தையை  ஏற்படுத்துவதற்காகவும்  தமது நாட்டின் பணி மேற்கொள்ளப்பட்டதாக புலப்படுத்தப்பட்டது என்றார்.

ராணுவம் வெற்றியை நோக்கிச் செல்வதால் அரசிற்கும், நோர்வேயிற்குமிடையிலான முறுகல் நிலை தளர்ந்தது எனவும் தெரிவித்தார்.

eric-sol-kaim-norway 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் eric sol kaim norway2007ம் ஆண்டு நிலமைகள் குறித்து எரிக் சோல்கெய்ம் இன் பார்வை பின்வருமாறு காணப்பட்டது.

2007ம் ஆண்டில் அரசு பெரும்தொகையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருந்தது. தெற்கிலும் புலிகளின் தாக்குதல்களை கணிசமான அளவிற்கு குறைத்திருந்தது.

அதாவது அவர்களின் தொடர்புகள் பல அறுக்கப்பட்டன. இதன் காரணமாக புலிகள் தெற்கில் பாரிய பதில் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் ராணுவம் நடத்திய ஆட் கடத்தல்கள் காரணமாக அது சாத்தியமாகவில்லை. அவ்வாறு புலிகள் பாரிய அளவில் தாக்கியிருந்தாலும் பேச்சுவார்த்தைக் கதவுகளை அரச தரப்பினர் எப்போதுமே திறந்தே வைத்திருந்தனர்.

அமைச்சர் மிலிந்த மொறகொட ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்காக ஈரான் சென்றிருந்தார்.

images 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் images5இருப்பினும் ராணுவச் சமநிலை அவ்வளவாக குலையும் என நாம் எண்ணவில்லை. பிரபாகரன் அவ்வளவு முட்டாள் அல்ல என்பதை தொடர்ந்தும் நம்ப முடியவில்லை.

தெற்கிலுள்ள புலி வலைப் பின்னலை அரசு அழித்திருந்தது. போதுமான ஆயுதங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் வைத்திருந்தது. ராணுவ இழப்புகளை மறைக்கும் முறைகளையும் நடமுறைப்படுத்தியிருந்தது என்கிறார் சோல்கெய்ம்.

நோர்வே தூதுவராலயத்திலிருந்த பத்திரிகை அதிகாரி ஒருவரின் கருத்துப்படி தாம் உள்ளுர் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் சென்றிருந்தபோது கோதபய, சரத் பொன்சேகா  ஆகியோர் தாம்  இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் புலிகளைத் தோற்கடிப்போம் என முதன்முறையாக மிகவும் தெளிவாகவே அங்கு பேசினர்.

போரும் இல்லை, சமாதானமும் இல்லை என்ற நிலை மாறி போரை மட்டுமே பேசும் நிலை காணப்பட்டது.

ஆரம்பத்தில் தாம் கிளிநொச்சி செல்வதற்கு அரச உத்தரவு பெறுவது சிரமமாக இருந்தது. ஆனால் 2007இன் நடுப்பகுதியின் பின்னர் முற்றாகவே அனுமதி கிடைக்கவில்லை எனவும், புலித் தேவனுடன் அல்லது அவர்களது சமாதானச் செயலகத்துடன் மின் அஞ்சல் மூலமாக அல்லது தொலைபேசி ஊடாகவே பேச முடிந்தது என்கிறார்.

2007 இல் பலமுறை தாக்குதல்கள் நிகழ்ந்தன. ஆனால் தமது பலத்தில் நம்பிக்கை தெரிவித்தபடி புலிகள் இருந்தார்கள் எனவும், நிலமைகள் எத் திசையில் செல்கிறது? என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் போர் நிறுத்தத்தினை தன்னிச்சையாக 2008ம் ஆண்டு சார்க் மாநாட்டில் அறிவிக்க தயாராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

4419043038_dac7ea9317 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் 4419043038 dac7ea9317

Sri Lankan Ambassador to UN Dr. Palitha Kohona

பாலித ஹோகன:

இந் நிலமைகள் குறித்து பாலித ஹொகன இன் அபிப்பிராயம் இவ்வாறாக இருந்தது. நோர்வே தரப்பினர் பேசும்போது புலிகள் சமமான பலத்தில் இருக்கும் போதே பேச்சுவார்த்தைக்குத் திரும்புவர் எனத் தெரிவித்து வந்தனர்.

ஐ நா சபையில் பணி புரிந்தவன் என்ற வகையிலும், இறைமைக்கு மிக முக்கியத்துவம் வழங்கும் அமைப்பு என்ற வகையிலும் புலிகளின் நம்பிக்கை வெறுக்கத் தக்கதாக அமைந்தது என்கிறார்.

பல ஜனநாயக நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடைசெய்யப்பட்ட நிலையில், ஓர் இறைமையுள்ள நாடு என்ற வகையிலும், அரசுடன் பேசுவதற்கு முன்பதாக எவ்வாறு புலிகள் பலமுள்ளதாக இருக்க ஓர் அரசு அனுமதிக்க முடியும்? என வினவுகிறார்.

பயங்கரவாத அமைப்பு தனக்கு என ஒரு அரசை ஏற்படுத்திய பின்னர் இரு தரப்பாரும் பேசலாம் எனக் கருதுவதாக உள்ளது என்கிறார்.

புலிகளின் பொலீஸ் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு, தொலைக் காட்சி நடத்துவதற்கு நோர்வே பணம் வழங்குவதைத் தாம் அறிவோம் எனத் தெரிவிக்கும் ஹோகன புலிகளின் சமாதான செயலகத்திற்கு பணம் வழங்கி சர்வதேச பிரச்சாரத்திற்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

jon_hanssen_bauer_norway 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் jon hanssen bauer norway

ஜொன் ஹன்சன் பவர் (jon hanssen bauer)

பாலித ஹோகன இனது கருத்துக்கள் தொடர்பாக கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜொன் ஹன்சன் பவர் தெரிவிக்கையில்..

அவ்வாறான கருத்தக்கள் பரிமாறப்பட்டது தொடர்பாக தமக்கு ஞாபகமில்லை எனக் கூறும் அவர் ராணுவ பலத்திற்கும், பேச்சுவார்த்தைக்குமிடையே நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.

பலவீனமான நிலையிலிருந்து பேச புலிகள் பின்னடித்தார்கள். இதன் காரணமாக பேச்சுவார்த்தை நடத்துவதெனில், அரசு தரப்பினர் புலிகளைப் பலப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.

ஆனால் அது எனது வழிமுறையல்ல. புலிகள் ஏன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை? என்பதை நான் விளக்கியிருக்கக்கூடும். புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருமாறு ஹோகன அடிக்கடி எம்மைக் கேட்டுள்ளார்.

ஆனால் அரச தரப்பில் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமான முயற்சிகளை ஒருபோதும் எடுத்ததில்லை.

நாம் புலிகளின் சமாதான செயலக செயற்பாடுகளுக்கு நிதி உதவி செய்தது உண்மையே.

ஆனால் இவை அரசிற்கும் குறிப்பாக ஹோகன இற்கும் நன்கு தெரியும். புலிகளுக்கு பணம் கொடுப்பதில் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்துள்ளோம்.

அங்கு மிக அதிக அளவிலான இடப்பெயர்வும், மனித நேய பிரச்சனைகளும் அதிகரித்திருந்தது. தமிழ் மக்கள் நடத்தப்படும் முறை குறித்து நாம் மிகவும் கவலை அடைந்திருந்தோம்.

அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டார்கள். இதனால் எமது உதவிகளை மேலும் அதிகரித்தோம் எனக் கூறினார் அவர்.

Maheswaran_1 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் Maheswaran 1

ஐ தே கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார்.

2008ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தனது குடும்பத்துடன் வழிபாட்டிற்குச் சென்றிருந்த மகேஸ்வரன் ஆலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.

அவர் அரச அமைச்சராகவும், சிறு வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் திரட்டியிருந்தார். இச் செயற்பாடுகளின் சட்டபூர்வ தன்மை குறித்து அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பிரதான ஏ 9 பாதை மூடப்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் இவர் விற்பனை செய்த பொருட்கள் குறித்தே அச் சந்தேகங்கள் எழுந்திருந்தன.

இப் படுகொலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இப் படுகொலையின் பின்னணியில் செயற்பட்டதாக தமிழ் நெற் இல் செய்திகள் அப்போது வெளியாகியிருந்தன.

ஏனெனில் அவரது படுகொலைக்கு சில தினங்களுக்கு முன்னர் குடா நாட்டிற்குள் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் அரசாங்கத்தின் வழிகாட்டுதலில் ஈ பி டி பி இனர் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்ற விபரத்தைத் தரப்போவதாக தொலைக் காட்சியில் கூறியிருந்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது.

இப் பின்னணியில் பெரும்பான்மை மந்திரிசபை உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தினை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்தது.

சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என தமிழ் ஜனநாயக சக்திகள் குற்றம் சாட்டின.

d3378041373c3daaa0c9f4983e033ad9_XL 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம் d3378041373c3daaa0c9f4983e033ad9 XL

போகொல்லாகம

ஓப்பந்தம் வாபஸ் பெறப்பட்ட போதிலும் பேச்சுவார்த்தை மூலமான சமாதான முயற்சிகள் தொடரும் எனவும், அதில் நோர்வே தொடர்ந்து ஈடுபடும் என அப்போதைய வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

அரசின் இம் முடிவு குறித்து ஐ தே கட்சி தெரிவிக்கையில் ஜே வி பி, ஜாதிக கெல உறுமய போன்ற தேசியவாத சக்திகள் விரைவில் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக எடுத்த முடிவு என குற்றம் சாட்டியது.

ராணுவத் தோல்விகளும், பொருளாதார பின்னடைவுகளும் எழுந்துள்ள வேளையில் போர் நிறுத்த ஒப்பந்த்தினை முறிப்பது துர்அதிர்ஸ்டமானது எனவும், போர் நிறுத்த ஒப்பந்தம் பிரச்சனைக்கு பேசித் தீர்க்கும் வாய்ப்பை வழங்கியதாகவும், நாட்டின் இறைமையை பாதுகாக்க உதவியதாகவும் ஐ தே கட்சி தெரிவித்தது.

அரசின் இம் முடிவு குறித்து நோர்டிக் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கையி;ல் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த   முதல் மூன்று ஆண்டுகளில் மரணங்கள் வெகுவாக அதாவது மரணங்களே இல்லை என்ற அளவிற்கு நிலமைகள் இருந்ததாக தெரிவித்தது.

இந் நிகழ்வு குறித்து எரிக் சோல்கெய்ம் தெரிவிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்தது பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கும் எனத் தெரிவித்த அவர் வன்முறையும், முரண்பாடுகளும் மேலும் அதிகரிக்கும் என எச்சரித்தார்.

விடுதலைப் புலிகளின் கருத்து ஒரு வாரங்களுக்குப்பின்னரே அதாவது கண்காணிப்பக் குழத் தலைவர் விடைபெறும் வைபவத்தில் தமது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் நடேசன் வெளியிட்டிருந்தார்.

உலக யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளத் தவறிய புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழமையாக அமுலாக்கும் படியும், நோர்வேயை தொடர்ந்து செயலாற்றும்படியும் கோரிக்கை விடுத்தனர்.

தொடரும்…

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s