சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 40

பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !!

 

பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அரசு கைவிட்டதைத் தொடர்ந்து அதன் விளைவுகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்தன.

jon_hanssen_bauer_norway பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம் jon hanssen bauer norway1
கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜொன் ஹன்சன் பவரின் ( Jon Hanssen Bauer )  கருத்துப்படி 2006ம் ஆண்டு புலிகள் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வெளியேறும்படி கூறியதன் பின்னர் கண்காணிப்பாளரின் தொகை குறைக்கப்பட்டதுடன் ஊடகங்களுடனான தொடர்பும் குறைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் இது குறித்து கவலையடைந்தார்கள். போர் நிலமைகள் தீவிரமடைந்த வேளை கண்காணிப்புக் குழு தனது பணியைக் குறைத்தது.

போர் ஆரம்பித்த பின் கண்காணிப்புக் குழுவிற்கு என்ன வேலை?

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பின் எமது பணி சகலவற்றையும் சுத்தப்படுத்துவதும் எமக்காக பணிபுரிந்தவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும், எம்மிடமிருந்த ஆவணங்களை என்ன செய்வது? என்ற சிந்தனையுமே தொக்கி நின்றது.

எம்மிடமிருந்த ஆவணங்கள் பல நாம் மக்களுடன் பேசியவை. அவர்களது அடையாளங்களையும், பெயர்களையும் பாதுகாக்கவேண்டியிருந்தது. இது குறித்து அரசுடன் பேசி முடிவுக்கு வர இரண்டு மாதங்களுக்கு மேலாகியது.

நோர்வேயின் புதிய தூதுவரின் கருத்துப்படி போர் நிறுத்த மீறல்கள் மிக அதிகமானவை. அதில் புலிகளே அதிகளவு மீறினார்கள். இந் நிலையில் ஒப்பந்தத்தினை யார் நிராகரிப்பது?

என்பது காலமே தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. நோர்வே அனுசரணையாளர் என்ற நிலையிலிருந்து விலகவில்லை. நாம் தொடர்ந்து பேசி வந்தோம் என்றார்.

2008ம் ஜனவரி 5ம் திகதி ராணுவத்தின் உளவுப் பிரிவினரால் புலிகளின் உளவுப் பிரிவின் முக்கியஸ்தரான கேணல் சார்ள்ஸ் மன்னார் பூனேரி பாதையில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

குழந்தைப் போராளியாக இணைந்த அவர் புலிகளின்  உளவுப் பிரிவின்  தலைவர்  பொட்டு   அம்மானின் சீடராகும்.

இவரே 2001 கட்டுநாயக விமான  நிலைய தாக்குதல் 90 களில் கொழும்பில் இடம்பெற்ற பல தாக்குதல்களின் மூளையாக இருந்தவர்.

இச் சம்பவம் நடைபெற்ற 3 நாட்களில் அரசாங்க அமைச்சர் டி. எம். திஸாநாயக்க கொழும்பிலிருந்து விமான நிலையம் செல்லுகையில் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் மரணித்தார்.

கொலையாளிகளுக்கு இவரது அடையாளம் தெரியாது எனவும், அமைச்சருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாகனங்கள் சென்றது வாய்ப்பாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த அமைச்சர் குறித்து வேறுபல கதைகளும் நிலவின.

அதாவது அந்த அமைச்சர் பலருக்கும் தெரிந்த சண்டியன் எனவும், ஆட்கடத்தல், ஊழல், புத்தளப் பகுதியில் உள்ள அவரது அரசியல் எதிரிகள் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அரசு முறித்ததைத் தொடர்ந்து கூட்டுத் தலைமை நாடுகள் தமது கவலையை வெளியிட்டன. கிளிநொச்சியுடன் நோர்வேயும், கூட்டுத் தலைமை நாடுகளும் தொடர்புகொள்வதற்கான  வாய்ப்புகளைத் திறக்குமாறு கோரியது.

ஆனால் அரசாங்கம் புலிகளுடன் பேசுவதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தாம் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் காட்டுவதற்கு அவர்களுக்கு நோர்வேயும், கூட்டுத் தலைமை நாடுகளும் மூடு திரையாக தேவையாக இருந்தது.

சர்வ கட்சி மாநாட்டு அறிக்கை

2008ம் ஆண்டு ஜனவரி மாத இறுதிப் பகுதியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டு அறிக்கை ஜனாதிபதி மகிந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டபோது அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக அமுலாக்குவது என வழிகாட்டுதல்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.

அறிக்கை தயாரிக்கப்படும்போது அரசின் ஆலோசகர்களின் தலையீடு இருந்ததாக அதிலிருந்த தமிழ் உறுப்பினர் தெரிவித்தார். அதனை கமிட்டி உறுப்பினர்கள் அனுமதித்தனர்.

இவ் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தது. அத்துடன் வடக்கிற்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைக்கவும் தயாரானது.

Gotawithkaruna பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம் Gota with karuna

கருணாவிற்கு சிறைத் தண்டனை

பிரித்தானியாவிற்குள் அடையாள மோசடி செய்து நுழைந்ததாக கூறி கருணாவிற்கு 9 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இவ் வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது அங்கு சாட்சியமளித்த கருணா, தாம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸவிடம் நேரடியாக கோரியதன் காரணமாக அவ் ராஜதந்திர கடவுச் சீட்டு வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அவர் அதனை மறுத்திருக்க முடியும். ஆனால் அவர் தாமே முன்னின்று அதனைப் பெற உதவினார். இதனை கோதபய மறுத்த போதும் பலர் அதனை நம்ப மறுத்தனர்.

கருணா மீது மனித உரிமை மீறல் வழக்குத் தொடர பிரித்தானிய அரசிற்கு அதிக அழுத்தங்கள் போடப்பட்டன. ஆனால் அவ் விசாரணைக்கான சாட்சியங்களைப் பெறுவதில் காணப்பட்ட சிக்கல்கள் தடையாகின.

பெப்ரவரி வன்முறை அதிகரித்த மாதமாக அமைந்தது. புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும், குண்டு வெடிப்புகளும் மரணங்களை அதிகரித்திருந்தன.

குறிப்பாக மன்னாரில் தினமும் மரணங்களின் தொகை அதிகரித்துச் சென்றது. ராணுவமும் தினமும் சுமார் 25 பேரை புலிகளின் கண்ணி வெடிகளுக்கு பலி கொடுத்தனர்.

வட பகுதியில் ராணுவம் முன்னேறுவதாக ராணுவுத் தகவல்கள் கூறியபோதிலும் புலிகளின் தாக்குதல்கள் முன்னேற்றத்தை வெகுவாக தடுத்திருந்தன.

புலிகள் இளைஞர், யுவதிகளை கட்டாயமாக சேர்த்தமையால் சுமார் 12 முதல் 15ஆயிரம் வரை போராளிகள் தயாராக இருந்தனர்.

இருப்பினர் அரசிடமிருந்த சுடும் படைக்கலன்களின் தொகையும், விமானத் தாக்குதல்களும் எவ்வளவு காலம் புலிகள் தாக்குப் பிடிப்பார்கள்? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

TNA_MP_Sivanesan_ பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம் TNA MP SivanesanTNA MP Sivanesan

2008ம் ஆண்டு மார்ச் 6ம் திகதி புலிகளை மிகவும் ஆதரித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவனேசன் படுகொலை செய்யப்பட்டார்.

இவர் தமிழ்ச் செல்வனின் ஆதரவுடன் நியமனம் பெற்றவர். இப் படுகொலை வன்னிக்குள் இடம்பெற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ராணுவத்தின் ஊடுருவும் குழுவின் வேலை என பலராலும் கருதப்பட்டது.

சர்வதேச அளவில் அரசாங்கம் குறித்த அபிப்பிராயம் படிப்படியாக குறைந்திருந்தது.

சிவனேசன் படுகொலை செய்யப்பட்ட  தினத்தன்று சர்வதேச சுயாதீன மதிப்புமிக்க மனிதர்கள் ( International Independent Group of Eminent Persons) குழுவில் செயற்பட்டவர்கள் தாம் அதிலிருந்து விலுகுவதாக அறிவித்தனர்.

இக் குழு 2007ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளை மேற்பார்வை செய்யும்பொருட்டு (2005ம் ஆண்டு முதல் இடம்பெற்ற மீறல்களை) இக் குழு அமைக்கப்பட்டது.

அரசிடம் தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பு காணப்படவில்லை என்பதே பிரதான காரணமாக இருந்தது.

இவ் விலகல் குறித்து இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் விடுத்த அறிக்கையில்… ஜெனிவா ஐ நா மனித உரிமை ஆணைக்குழுவின் வருடாந்த மாநாடு அண்மித்த வேளையில் சர்வதேச அரசுகள் இலங்கைகையைக் கண்டிக்கவேண்டும் என்பதற்காகவே எடுத்த முடிவு என கிண்டலடித்தது.

ஒரு வாரத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் அரசு பத்திரிகையாளர், ராஜதந்திரிகளை அழைத்தது.

அத் தேர்தலில் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பெரு வெற்றி பெற்றிருந்தது.

pillayan பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம் pillayan

இத் தேர்தலில் முக்கிய கட்சிகளாகிய தமிழர் தேசியக் கூட்டமைப்பு, ஐ தே கட்சி போன்றன சந்திரகாந்தன் கட்சியினரிடமிருந்த ஆயுதங்கள் களையப்படவில்லை எனவும், மாற்றுக் கட்சியினர்  மீதான தாக்குதல்கள்  அதிகரித்த நிலையில் தேர்தலைப் பகிஷ்கரித்தனர்.

ஆனால் வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம குறிப்பிடுகையில் முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை வழங்கும் தேர்தல் மிக முக்கியமான மைல்கல் என்ற அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது என்றார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து அமெரிக்க தூதுவராலயம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பதாக அப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையும், தலையீடுகளும் தேர்தல் சுமுகமாக நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாதுள்ளது.

ஆயுதக் குழுக்கள் இவ்வாறான குற்றம் நிறைந்த சூழலில் அதிகாரத்தைக் கைப்பற்றுமாயின் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்பார்கள்.

25 வருட ஆயுதப் போராட்டத்தின் பின்னரும் ஜனநாயக விரோத நிலமைகள் தொடர வாய்ப்புண்டு எனத் தெரிவித்திருந்தது.

வட மாகாண போர் நிலவரங்கள் ராணுவம் மடுத் தேவாலயத்தை அண்மித்துள்ளதாக தெரிவித்தன. மடு மாதா தேவாலயம் குறித்த கவலைகள் தமிழ் கத்தோலிக்கர் மத்தியில் அதிகரித்தன. உள்ளுர் கத்தோலிக்க

உயர் பீடத்திற்கு புலிகளும் தமது அழுத்தத்தினை அதிகரித்தார்கள். இதன் காரணமாக மாதாவின் சிலையை இடம் மாற்ற தீர்மானித்தார்கள். ராணுவம் இதனை மறுத்தது.

jeyaraj-fernandopulle பிரித்தானியாவில் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை !! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 40) -சிவலிங்கம் jeyaraj fernandopulle

Jeyaraj Fernandopulle

உயர் மட்ட அரசியல் படுகொலைகள் மேலும் தொடர்ந்தன

2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி அரசின் தமிழ் அமைச்சரான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிப்பதற்காக சென்றபோது தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார்.

அத்துடன் சுமார் 90பேர் காயமடைந்தனர். மிகவும் கடுமையாக புலிகளை  விமர்ச்சித்துவந்த அவர் மே மாதம் 10ம் திகதி நடைபெறவிருந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க சார்பில் பிரச்சாரம் செய்ய தயாராக இருந்தார்.

ஏப்ரல் 20ம் திகதி பாலசிங்கத்தின் நெருங்கிய நண்பரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான வண. பிதா கனகரத்னம் அவர்கள் கிளைமோர் தாக்குதலில் மரணமானார்.

இவர் வடக்கு, கிழக்கு மனித உரிமைச் செயலகம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வந்தார். இவர் புலிகளின் மீறல்களை விமர்ச்சிப்பதில்லை.

இவற்றை மூடி மறைத்து அரச மீறல்களையே வெளிப்படுத்தி வந்தார். இதனால் இவர் புலிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளை வைத்திருந்தார்.

 

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s