சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 43

ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! 

ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம்
 

வாசகர்களே!

2008ம் ஆண்டின் இறுதிப் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கை அரசு ராணுவ அணுகுமுறையை  விரிவாக்கிப்   பேச்சுவார்த்தைகளுக்கான சகல வாய்ப்புகளையும் மூடிக்கொண்டது.

இலங்கை அரசின் இம் முடிவினை சில அரசுகள் ஏற்கெனவே அறிந்திருந்தன.

அதே போன்று போர் தம்மீது திணிக்கப்படுகிறது என்ற சூழல் நன்கு தெரிந்த பின்னரும் மக்களைப் பணயம் வைக்கும் போரில் புலிகள் இறங்கக் காரணம் என்ன?  இவை பற்றிய பல விபரங்கள் இனிமேல் வரவுள்ளன.

ராணுவத்தின் முன்னேற்றமும், அரசின் நோக்கங்களும் போர் உக்கிரமடைந்து செல்லும்போது தெளிவாகவே புலப்பட்டன.

பத்திரிகையாளர். டி பி எஸ் ஜெயராஜ்   அவர்களின் கருத்துப்படி ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கினை புலிகளிடமிருந்து விடுவிப்பதே போரின் நோக்கமென அரசு கூறியது.

அந்நிய மக்களின் பிடியிலிருக்கும் தமது நாட்டை விடுவிப்பதாக கூறினர். ஆனால் போர் குறித்த ராணுவ திட்டமிடுதல்களின் போது பாதிக்கப்படும் மக்கள் குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை.

Def_Sec-600x330 ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் Def Sec

கோதபய ராஜபக்ஸ இன் கருத்துப்படி விமானப்படை 6000 தடவைகள் தாக்குதல்களை நடத்தியதாக கூறினார். புலிகள் 6 தடவைகள்  தாக்கியதற்குப் பதிலாகவே இவை நடந்தேறின.

கவலை தரும் அம்சம் என்னவெனில் விமானப் படையினர் தமது நாட்டு மக்கள் மீது, தமது மண்ணில்   6000 தடவைகள் குண்டுகளை வீசியபோது   பாதுகாப்பு  அமைச்சின் செயலாளரின் பார்வையில் இந்த உண்மைகள் தொலைந்துவிட்டன.

இப் போர் புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என தொடர்ந்து கூறி வந்தார்கள். ஆனால் அதற்கு மாறாகவே செயற்பட்டனர் என்கிறார் அப் பத்திரிகையாளர்.

ராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்கள்  காரணமாக 2008ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி பூனேரி கைப்பற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து நாச்சிக்குடாவைத் தளமாக புலிகள் மாற்றியிருந்தார்கள்.

மறு பக்கத்தில் யாழ். குடாவிலிருந்து 40000 படைகள் கிளிநொச்சித் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர்.

இக் காலத்தில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து பல்கலைக் கழக ஆசிரியர் மனித உரிமைகள் குழு தெரிவிக்கையில்

2008ம் ஆண்டு அக்டோபர் மாதப் பகுதியில் புலிகளின் ஆட்சேர்ப்பு முயற்சிகள் தீவிரமடைந்தன.

குடும்ப விபரங்கள் அடங்கிய பட்டியல்களுடன் வீடுவீடாகச் சென்று குடும்பத்தில் 4 பிள்ளைகள் இருப்பின் இருவரைத் தருமாறும், இரண்டு பிள்ளைகள்  அல்லது பிள்ளைகள்   இல்லாத குடும்பத்தினர் ஒருவரைத் தருமாறும் நிர்ப்பந்தித்தார்கள்.

இக் கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்தவர்கள் முன் அரங்குகளில் நிறுத்தப்பட்டார்கள். அவர்களில் பலர் பின்னர் மரணமானார்கள். எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தப்பட்டார்கள்.

தப்பிக்கொண்டார்கள். தகவல்களின்படி செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 9000பேர் இணைக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

மக்களுக்கும், புலிகளுக்குமிடையேயான உறவு மிகவும் சிக்கலானது. சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் வன்னி மக்கள் புலிகளுக்கு எதிரான உணர்வில் இருந்தனர்.

இவ் எதிர்ப்பு  அமைதியானது. அல்லது உயிராபத்து உள்ளது. விமானப்படை தாக்குதல்கள் அதிகரித்த வேளை சிறுபான்மையினர் மீது மோசமான தாக்குதல்கள்  நடைபெறுவதாக  நாட்டின் ஏனைய  பாகங்களில் செய்திகள் பரவியிருந்தன.

மக்களின் எண்ணங்கள் மாறத் தொடங்கின என அம் மனித உரிமைக் குழு தெரிவித்தது.

இப் பின்னணியில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி பிரபாகரன் தனது மாவீரர் தின உரையை நிகழ்த்தினார்.

இவ் உரை தாம் எதற்கும் தயார் என்ற உணர்வாகவே அமைந்திருந்தது.

தாம் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே உள்ளதாக தெரிவித்த அவர், அரசின் இனவாத நோக்கம்கொண்ட படுகொலைகளை மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும் என்றார்.

ராணுவ வெற்றி என்ற கனவில் கொழும்பு அதிகார வர்க்கம் மிதப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை மறைமுகமாக சாடினார். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட அரசியல் நாடகம் ஒன்றை அவர் அன்று அரங்கேற்றினார்.

இந்தியாவுடனான முறுகல் நிலையைத் தணிக்கும் பொருட்டு, தாம் இந்தியாவை எதிரியாக ஒருபோதும் கருதியதில்லை எனவும், குறிப்பாக ராணுவத் தாக்குதல்கள் அதிகரித்திருந்த வேளையில் அதனை நிறுத்தும்படி குரல் கொடுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இவ் உரையினைச் செவிமடுத்திருந்த அரசியல் அவதானிகள் இந்திய அழுத்தத்தினால் மட்டுமே இலங்கை அரசைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர முடியும் என்பதை புலிகள் உணர்வதாக தெரிவித்தனர்.

மாவீரர் தின உரை நிகழ்த்தப்பட்ட அதே தினம் இந்திய முக்கிய வர்த்தக நகரமான மும்பாயில் பாரிய பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதால் இப் பிரச்சனையில்  இந்தியத் தலையீடு அசாத்தியம் என்பது பலருக்கும் புலனாகியது.

இலங்கையிலுள்ள நோர்வே தூதரக முதலாவது செயலாளர் பார்ட் தோர்கெய்ம்  ( Bard Thorheim ) இலங்கை அரசின் ராணுவ நோக்கங்கள் குறித்து தெரிவிக்கையில்….. ” 2006ம் ஆண்டு அமெரிக்க சி ஐ ஏ வெளியிட்ட அறிக்கையில் புலிகளைத் தோற்கடிக்க முடியாமல் போகலாம் எனத் தெரிவித்தது,  அது போலவே உயர் மட்ட ராணுவ அதிகாரிகள் சிலரும் 2007 இல் இதே கருத்தைக் கொண்டிருந்தனர்.

2008 இன் கோடை  காலத்தின்போது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர பகுதி எதனையும் ராணுவம் கைப்பற்றவில்லை.

ஆனால் முன்னேறிக்கொண்டிருந்தனர்.

இதனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கிக்கொண்டிருந்தது. புலிகள் எப்படியும் திருப்பித் தாக்குவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஏனெனில் இந்திய சமாதானப் படையினர் காலத்தில் இவ் அனுபவம் காணப்பட்டது.

ராணுவ தந்திரோபங்களிலேயே தனது கவனம் செலுத்தப்பட்டதாக கூறும் அவர், ராணுவத்திற்கு இரண்டு வழிகளில் முன்னேற்றம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ராணுவமும், விமானப் படையும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டனர்.

இதனால் புலிகளை விட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. கடற்புலிகள் விடயத்திலும் கடற்படை முன்னணியில் இருந்தது.

மறு பக்கத்தில் ராணுவம் புலிகள் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல், அவர்களது பாதகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல்களைத் திரட்டி அனுப்புதல் என்பவற்றில் ஈடுபட்டனர்.

இத் தகவல்களின் அடிப்படையில் ராணுவத் தாக்குதல்களை குறிப்பிட்ட இலக்கு வைத்து நடத்துவது சாத்தியமாகியது.

ராணுவம் தம்மால் எது சாத்தியம்? என்பதனை ஆராய்ந்து அவ் வழிகளில் செயற்பட்டனர்.

ஆனால் புலிகள் தரப்பில் புதிய முறைகள் என்பது மிகச் சொற்பமாக இருந்தது.

வெளிநாட்டுத் தூதரகங்களில் செயற்பட்ட ராணுவ ஆய்வாளர்கள் புலிகள் கெரில்லா போர்முறையைத் தவிர்த்து மரபு வழியான எல்லைகளைப்  பாதுகாக்கும்  போர்முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்பது குறித்து குழப்ப நிலையில் இருந்தனர்.

இவ்வாறான சமச் சீரற்ற நிலையில் புலிகள் கெரில்லா முறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் எனக் கருதினர்.

mahinda-r-415x260 ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் mahinda rராஜபக்ஸ அரசு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்தி போரை எவ்வாறு வெல்வது? என்பதிலேயே தமது கவனத்தைக் குவித்தனர்.

இதனால் ராணுவத்தில் காணப்பட்ட ஊழல்களைக் களையெடுத்தார்கள். ஏனெனில் ராணுவ அதிகாரிகள் சிலரை விலைக்கு வாங்கியதன் மூலம் சில ராணுவ கேந்திர  ஸ்தானங்களை புலிகளால் தாக்க முடிந்தது.

images ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் images1அத்துடன் கருணா தரப்பினரது உளவுத் தகவல்களையும் நன்கு பயன்படுத்தினார்கள்.

இதில் காணப்பட்ட முக்கிய அம்சம் என்னவெனில் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்த கப்பல் மாலுமிகள் பல ரகசியங்களை அதாவது ஆயுத விபரங்களை அரசுடன் பகிர்ந்தமையாகும்.

இதனால் புலிகள் மிகவும் பலவீனமுற்றார்கள்.

தூதுவராலயம் என்ற வகையில் இலங்கை ராணுவம் எவ்வளவு வலிமையாக உள்ளது? என்பதை புலிகள் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்த பின்னணியில் தாம் ஆராய்ந்ததாக தெரிவிக்கும் அவர், நோர்வே தூதுவர், எரிக் சொல்கெய்ம் ஆகியோர் புலிகளின் எச்சரிக்கைகளில் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்கிறார்.

ஆனால் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி மும்பாயில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அவர்களின் சிந்தனைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்கிறார்.

அவ் வேளையில் தமிழ்நாடு மத்திய அரசின் மேல் பலத்த அழுத்தங்களைப் போட்டிருந்தது. ஆனால் மும்பாய் தாக்குதல்கள் புலிகள்மேல் கவனத்தைச் செலுத்த இடமளிக்கவில்லை.

ErikSolheim-large ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் ஈற்றில் கிளிநொச்சியும் வீழ்ந்தது!! ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 43) -சிவலிங்கம் ErikSolheim largeபுலிகளின் அரசியல் பிரிவுடன் நோர்வே தூதராலயம் ஸ்கைப், தொலைபேசி என்பன மூலமாக தொடர்புகளை வைத்திருந்தது.

புலிகள் தோற்கடிக்கப்படும் ஒரு சூழல் ஏற்படுமென   இந்தியா கருதுமாயின் அவர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என புலிகள் நம்பிக்கை கொண்டிருந்ததை அவர்களுடனான உரையாடல்களின் போது தெரியவந்ததாக அவர் கூறினார்.

இவ்வாறான நினைப்புத் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறிய அவர், மறு பக்கத்தில் இந்தியாவுடன் தமக்கு இருந்த அனுபவங்கள் வேறாக இருந்தது என்கிறார்.

தாம் சர்வதேச நிலமைகள் குறித்து யதார்த்தமான, நேர்மையான தகவல்களையே புலிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும், ஆனால் அவற்றில் சிலவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்கிறார்.

டிசெம்பர் மாத ஆரம்பத்தில் கிளிநொச்சிக்கு அண்மித்ததாக போர்க்கோடுகள் காணப்பட்டன.

புலிகளின் நிழல் அரசின் தலை நகர் விழப் போவதாக ராணுவச் செய்திகள் வெளியாகின.

தமது நிழல் அரசின் வீழ்ச்சியைத் தடுக்க பலமும், பயிற்சியும், அனுபவமும் நிறைந்த போராளிகளை பாதுகாப்பு பணியில் புலிகள் ஈடுபடுத்தினார்கள்.

பாதுகாப்பிற்காக புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மண் அரங்குகளும், கடுமையான மழையினால் ஏற்பட்ட சேறும், சகதியும் ராணுவ முன்னேற்றத்தைத் தடுத்தன.

டிசெம்பர் மாத நடுப்பகுதியில் சுமார் 7000 படையினர் கிளிநொச்சியைத் தாக்கினர்.

நான்கு ராணுவ படை அணியினர் கிளிநொச்சி நகரத்தை நோக்கி முன்னேறினர். மரணித்தோரின் தொகையை இரு சாராருமே மிகைப்படுத்தி வெளியிட்டனர்.

ஆனால் இறந்தோரும், காயமடைந்தோரும் மிகப் பெரும் தொகையினராகும்.

இச் சம்பவங்கள் குறித்து எரிக் சோல்கெய்ம் தெரிவிக்கையில் 2008ம் ஆண்டிலேயே அரசு வெற்றி பெறக்கூடும் எனத் தாம் கருதியதாக கூறும் அவர்,  இதற்கு முன்பதாகவே அதாவது 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் இந்தியர்கள் இதனை முதன் முதலாக தெரிவித்தனர் என்கிறார்.

இந்தியர்களுக்கே அதிக தகவல்கள் தெரிந்திருக்கும் என்பதால் அது சாத்தியம் எனத் தாம் கருதியதாக கூறும் அவர், ஒரு தடவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தம்முடன் உரையாடும்போது கடந்த காலங்களில் பேசியதைப் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்ததாக கூறுகிறார்.

அதாவது போர் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிச் செல்லும் இவ் வேளையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமாகது எனத் தெரிவித்திருந்தார்.

தொடரும்

 Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s