சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 45

போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?

போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம்
 

கிளிநொச்சியைக் கைப்பற்றியதும், புலிகளின் பிடியிலுள்ள மக்களை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ராஜபக்ஸ கோரினார்.

அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது.

சுமார் 30 இற்கு மேற்பட்ட நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கையில் அதுவும் நிறைவேறியது.

இதுவும் உலகின் கவனத்தை வேறு பக்கம் திருப்பும் முயற்சியாகவே இருந்தது.

ஏனெனில் சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒரு குறுகிய நிலப் பரப்பிற்குள் அடைத்து போதுமான உணவோ, மருந்தோ வழங்காமல் துன்பத்தில் தள்ளியிருந்தார்கள்.

sarath-300x187 போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் sarath“இலங்கை  ராணுவத்தினை உற்சாகப்படுத்தும் விதத்தில்  ஜெனரல் சரத் பொன்சேகா தனது படைகளை நோக்கி, கொல்லுங்கள். மிக அதிக அளவிலான கெடுதிகளும், உள் கட்டுமான அழிவும், குறைந்த பட்ச ராணுவ இழப்பும் ஏற்படுத்துங்கள் என்றார்.”

அமெரிக்க தூதரக அறிக்கைகளின்படி சமாதான முயற்சி என்பது புலிகளைத் தடை செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தது.

Lasantha_Wickrematunge போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் Lasantha Wickrematungeஇருப்பினும் அப்போதைய வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம இன் அறிவித்தல் சிறிய நம்பிக்கையைத் தந்தது.

அதாவது நோர்வேயின் அனுசரணை முயற்சியும், கூட்டுத் தலைமை நாடுகளினது சுயாதீன செயற்பாடுகளும் தொடரும் என அமெரிக்க தூதுவருக்கு அவர் கூறியதாக தெரிவித்தது.

இச் சம்பவத்திற்கு மறு நாள் இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ‘சன்டே லீடர்’ பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

பரவலாக மிகவும் மதிக்கப்பட்ட அவர், ராஜபக்ஸ அரசிற்குள் இடம்பெற்று வரும் ஊழல்களை பல மாதங்களாக அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோதபய ராஜபக்ஸ இன் ஊழல்களை வெளியிட்டிருந்தார்.

இவரது படுகொலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுவரை நடைபெறாதது. அதாவது அவர் நாட்டின் அதிகார உயர் மட்டத்தில் உள்ளவர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் செயலாளராக இருந்தவர்.

பத்திரிகையாளர் என்ற வகையில் பலரும் அவரை அறிந்திருந்தனர். இவரது படுகொலை குறித்து எரிக் சோல்கெய்ம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இது எவ்வாறு இருந்ததெனில், அமெரிக்க நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் பட்டப் பகலில் நியூயோர்க் நகரத்தின் ரைம்ஸ் சதுக்கத்தில் கொலைசெய்யப்படுகிறார்.

இக் கொலையாளியைப் பிடிக்க நியூயோர்க் பொலீசார் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தனர் என்பது போல இருந்தது. அரசு மிகவும் கடுமையான எச்சரிக்கையை ஊடகங்களுக்கு இதன் மூலம்  விடுத்திருந்தது.

விசாரணை இல்லை. விசாரணை நடைபெறாது. இப் படுகொலை உயர் மட்ட ஆதரவில்லாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்.

இவ்வாறான  உயர்மட்ட தாக்குதல் சம்பவத்திற்கு   இரண்டு நாட்களுக்கு முன்னரும் இடம்பெற்றது.

சுயாதீன தொலைக்காட்சியான எம். ரி. வி ( MTV ) இன் ஊழியர்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டு, கட்டிடத்தின் பெரும் பகுதி தாக்கப்பட்டது.

சேதமாக்கப்பட்டது. இத் தொலைக்காட்சி நிறுவனம் கிளிநொச்சி வீழ்ச்சி குறித்து தேசப்பற்று இல்லாமல் செயற்படுவதாக அரச ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இவை இடம்பெற்றன.

இத்துடன் இவை முடிந்துவிடவில்லை. அந்த மாத இறுதிக்குள் 9 ஊடகவியலாளர்கள் தமது உயிராபத்துக் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மேலும் 5பேர் வெளியேறக் காத்திருந்தனர்.

அமெரிக்க தூதரக செய்திகளின்படி புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறுவதற்கு முன்னர் சுயாதீன குரல்களை ஒடுக்கி மௌனமாக்க ராணுவம் எண்ணியது எனத் தெரிவித்திருந்தது.

உலக நாடுகளில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அற்ற 173 நாடுகளின் வரிசையில் இலங்கை 165 வது இடத்தை வகித்தது.

கடந்த காலத்தில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு எனக் கருதிய நிலையிலிருந்து தற்போது பெலருஷ், சிம்பாப்வே, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் வரிசைக்குச் சென்றிருக்கிறது.

வாசகர்களே!

தற்போது லசந்த விக்ரமதுங்க அவர்களின் படுகொலை குறித்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர் இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒரு பத்திரிகையாளன் தனது உயிருக்க ஆபத்து உண்டு என்பதை தெளிவாக உணர்ந்த பின்னரும், மக்களுக்கு முன்னால் உண்மையைக் கூறி மரணத்தைத் தழுவியிருப்பது உயர்ந்த கௌரவத்திற்கு உரியது.

அப்போதைய ஜனாதிபதியுடன் 20 வருடங்களுக்கு மேலான உறவை வைத்திருந்த அவர், அவரை நோக்கியே அதாவது 11-01-2009ம் ஆண்டு இவ்வாறு எழுதியிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தை இருத்துவது அம் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவும், சுய மரியாதை அற்றவர்களாகவும் கருதும் உள்நோக்கமுடையது.

போருக்குப் பின்னர் அபிவிருத்தி, மீள் கட்டுமானம் எனக் கூறி ஏமாற்றலாம் எனக் கற்பனை செய்ய வேண்டாம்.

அவர்கள் மேல் விதிக்கப்பட்டுள்ள வடுக்கள் ஒரு போதும் அழியாது.

இதைவிட மிக மோசமான வெறுப்பை அம் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் வெளிப்படுத்துவதற்கு முகம் கொடுக்க நேரிடும். அரசியல் தீர்வு ஒன்றினால் மட்டுமே அப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

இல்லையேல் அது பல ஜன்மங்கள் நீடிக்கும். நான் கோபத்தினாலும், வெறுப்பினாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருதலாம். ஆனால் இவை சுவரில் பதிக்கப்பட்டிருப்பதை எமது தேசத்து மக்கள் பலரும், அரசாங்கமும் காண மறுக்கின்றனர்.

பலரும் அறிந்தது போல நான் இரு தடவைகள் தாக்கப்பட்டேன். எனது வீடொன்று துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின்   உறுதி மொழிகள் இருந்தபோதும் தாக்கியவர்கள் கைது செய்யப்படவோ அல்லது விசாரணைகள் மேற்கொள்ளப்படவோ இல்லை.

இதன் காரணமாகவே இவை யாவும் அரசின் உதவியுடன் நடத்தப்பட்டதாக நம்பகிறேன். நான் கொலை செய்யப்பட்டால் அரசாங்கமே அதனைச் செய்யும்.

எனது மரணத்தின் பின்னர் வழமையான உங்கள் குரல்கள் ஒலிக்கும். பொலீசாரிடம் துரித விசாரணைகளைக் கோருவீர்கள். கடந்த காலம் போலவே இவ் விசாரணைகள் மூலம் எதுவும் வெளிவரப் போவதில்லை.

உண்மைகள் உரைக்கப்பட வேண்டும். எனது மரணத்தின் பின்னால் யார் இருந்தார்கள்? என்பதை நாம் அறிவோம். ஆனால் வெளிப்படுத்த தயாராக இல்லை. இவ்வாறு அவர் எழுதியிருந்தார்.

பத்திரிகையாளர் விக்ரமதுங்க அவர்களின் படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என குரல்கள் எழுந்தன.

அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க அவர்கள் தொலைக்காட்சி நிறுவனத் தாக்குதல்கள், பத்திரிகையாளர் படுகொலை என்பவற்றின் பின்னணியில் சரத் பொன்சேகா, கோதபய ஆகியோர் செயற்பட்டதாக பாராளுமன்றத்தில் நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

1363782533-0634 போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் 1363782533 0634அவரது இக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மகிந்தவின் வாதங்கள் அதாவது ராணுவ வெற்றிகளுக்குப் பதிலாக ‘ சர்வதேச சூழ்ச்சிகள்’ நடப்பதாக கூறினார்.

ராணுவத்தின் வெற்றிகளைக் கண்ட சர்வதேச சக்திகள் தற்போது தமக்கு எதிராக சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளதாக கூறத் தொடங்கினார்.

இச் சம்பவங்களின் தாற்பரியம் பற்றி யாழ். பல்கலைக் கழக மனித உரிமை அமைப்பு இவ்வாறு கூறியிருந்தது.

போரின் பின்னணியில் இரண்டு பிரதான அம்சங்கள் இருந்தன. பிரபாகரனின் தேசிய விடுதலை, ராஜபக்கஸவின் தேசிய இறைமை என்பதாகும்.

இருவருக்கம் தமக்கு எதிரான சவால்கள் அற்ற தனிப்பட்ட அதிகாரத்தை எதிர்பார்த்தனர். ராஜபக்ஸ, பிரபாகரனைப் பின்பற்றி தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் என்றார்.

இவர்கள் இருவருமே போரைக் காரணம் காட்டி தமது எதிரிகளைப் படுகொலை செய்தனர். இருவருக்குமே சுயாதீன அபிப்பிராயம் வெறுப்பாக இருந்தது. அதனால் இருவருமே சுயாதீன அபிப்பிராயங்களையும் கொன்றொழித்தனர் எனத் தெரிவித்திருந்தது.

பத்திரிகையாளர் விக்கரமதுங்கவின் படுகொலையும், பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை.

வெளிநாட்டு ஊடகங்களைத் தடுத்தல் போன்றன போர் எவ்வாறு நடத்தப்படுகிறது? என்பதை மறைப்பதற்கே.

vfgfg போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது?  ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45) -சிவலிங்கம் vfgfg e1488312884292தமது பாதுகாப்பில் உள்ள பிணையாளிகளை பாதுகாப்பதன் உண்மைத் தன்மையை மறைப்பதாகும். தமது பாதுகாப்பில் உள்ள பிணையாளிகளைக் கொல்வது உலகத் தோற்றப்பாடாகியுள்ளது. இப் பிணையாளிகள் குறித்து சிறிய கருணையே இவர்களிடம் இருந்தது. அரச அரசியல் பிரிவு

பிரபாகரன் என்ற பக்கத்தை முழுமையாக அகற்றுவதை நோக்கமாக் கொண்டிருந்தது. இது ஏன்? என்ற கேள்வியை விட உலகத்திற்கு நியாயப்படுத்துவதே ராணுவப் பிரிவின் நோக்காக இருந்தது.

தொடரும்

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s