சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 46

பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! 

பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம்
 

மிகவும் அடிப்படை  வசதிகள் அற்ற காட்டுப்    பிரதேசத்திற்குள் மிகப் பெருந் தொகையான மக்கள் சென்றதால் தாங்க முடியாத அளவிற்கு மனித அவலங்கள் அதிகரித்தன.

un_lo_20081016 பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் un lo 20081016வன்னிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள்

சர்வதேச அமைப்புகளை வெளியேறும்படி அரசு அறிவித்த பின்னர், ஐ நா உலக உணவுத் திட்டத்தின் 11வது தொடர் வாகனங்கள் 800 தொன் உணவு வகைகளை இறுதியாக எடுத்துச் சென்றன.

மிகவும் கடுமையான எறிகணைத் தாக்குதல்களால் புதுக்குடியிருப்பில் 3 நாட்கள் இவை தடுத்து நிறுத்தப்பட்டன. இதற்குப் பிரதான காரணமாக  ராணுவம் இவ் வண்டிகளைப்  பின்தொடர்ந்து செல்வதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனவரி 23ம் திகதி இவ் வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால் நிலமைகள்   மேலும் சிக்கலடைந்தன.

அதாவது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த ஐ நா அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த உள்ளுர் அதிகாரிகள் 80 பேரையும், அவர்களது  குடும்பத்தினரையும் வெளியேற முடியாது எனப் புலிகள் தடுத்தனர்.

இதனால் இவ் வாகனத் தொடரின் பாதித் தொகை மட்டும் அதில் செயற்பட்டவர்களைக் கைவிட்டு வெளியேறியது.

இச் சம்பவத்தின் விபரங்கள் என்னவெனில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவுகளை  விநியோகிப்பதற்கு என 2008ம் ஆண்டு ஜனவரியில் ராணுவம் அனுமதி அளித்தது.

அதன் பிரகாரம் உணவுகளைத் தாங்கிய வாகனங்கள் புலிகளின் பகுதிகளிலுள்ள முன் அரங்குகள் ஊடாக நுழைந்த போது அந்த வாகனங்களின் அருகாமையில்  ராணுவமும்   அவற்றைக் கவசமாக்கி நுழைவதாக புலிகள் அவதானித்தனர்.

இத் தொடர் அணியே அந்த பாதிப்புற்ற மக்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கான உணவுகளை எடுத்துச் செல்கிறது என்பதையும், அதுவே  இறுதி  விநியோகம் என்பதனையும்   அம் மக்களோ அல்லது புலிகளோ அறிந்திருக்கவில்லை.

Gordon-Weiss2 பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் Gordon Weiss2

Gordon Weiss

இவ்வாறான சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளதை ஐ நா அதிகாரி கோர்டன் வைஸ்  (Gordon Weiss) தமது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். அவரது சாட்சியத்தில்,

…… 2009ம் ஆண்டு   ஜனவரி 22ம் திகதி   ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்   உட்பட 132 பேர் ஐ நா அதிகாரிகள் இருவரின் பாதுகாப்பில் வாகன ஊர்தியில் சென்றுகொண்டிருந்நபோது ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியது.

சகலரும்   ‘ துப்பாக்கிப் பிரயோகம் அற்ற பிரதேசம்’ எனக் குறிப்பிடப்பட்ட   இடத்திலுள்ள பதுங்கு குழிகளுக்குள் ஒதுங்கினர்.

இப் பிரதேசம் பாதுகாப்பானது எனவும், பொதுமக்களை அங்கு வரும்படியும் அரசு ஊடகங்கள் மூலமாக தெரிவித்தது.

ஆனால் ராணுவ குண்டு வீச்சுகளால் ஏற்பட்ட மரண அவலங்களை ஐ நா அதிகாரிகள் தொடர்பு சாதனங்கள் மூலமாக ராணுவ அதிகாரிகளுக்கு  அடிக்கடி தெரிவித்தார்கள்.

அம் மக்களின் அவலக் குரல்களை அவர்கள் கேட்ட போதிலும் பதில் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. ஐ நா பாதுகாப்பு அதிகாரி உட்பட பலர் அங்கிருந்தனர்.

refugees பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் refugees

அங்குள்ள நிலமைகள்   சாமான்ய மக்களை சர்வதேச அளவில் படுகொலை செய்வதற்கு ஒப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

தம்முடன் கடந்த இரவு பேசிக்கொண்டிருந்தவர்கள் தம்மைச் சுற்றி சடலங்களாக, ரத்தம், தசை ஆங்காங்கு சிதறியும், சிறுவர்களின் உடலங்கள் மரங்களில் தொங்கியும், ஐ நா வாகனங்களில் துளைகளும் காணப்பட்டன.

ஆனால் அரசாங்கம் இதற்கான பொறுப்புகளைச் சுமக்கத் தயாராக இருக்கவில்லை…

இவ்வாறு கோர்டன் வைஸ் அவர்களின் சாட்சியம் அமைந்தது.

இவ்வாறான  அநியாயங்களின் சாட்சியங்கள்  உலக சமுதாயத்தைச் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஊடகங்கள் அங்கு செல்வதை அரசாங்கம் தடுத்தது. இறுதிப் போரின் கொடுமைகள் மக்களின் கவனத்திற்கு குறிப்பாக உலக மக்களின் கவனத்திற்குச் செல்லாமல் தடுத்தார்கள்.

s01_18784741 பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் s01 18784741

பாதுகாப்பு வலையங்கள்

இச் சந்தர்ப்பத்தில் நோர்வேயின் பணியை அரசு முற்றாக ஒதுக்கவில்லை.

இலங்கை  அரசு நோர்வே   மூலமாக  பின்வரும் தகவலை புலிகளுக்கு வழங்கியது.

அதாவது பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோரைத் தவிர அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது.

இருப்பினும்  இவ்வாறான தகவலை அச் சந்தர்ப்பத்தில் வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவிக்கவில்லை.

இத் தகவலை நோர்வே தூதுவர் அமெரிக்க தூதுவருக்குத் தெரிவித்த போது ஜனாதிபதி உண்மையில் அதில் சிரத்தை கொண்டுள்ளாரா? என வினவினார்.

இச் சம்பவம் குறித்து  நோர்வே தூதரக முதல் செயலாளர் பார்ட் லுட்விக் ரோர்கெய்ம்   ( Bard Ludvig Thorheim )  இவ்வாறு கூறுகிறார்.

…. 2009ம் ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் ஜனாதிபதி காரியாலயத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து தொலைநகல் கிடைத்தது.

அதில் புலிகளுக்கு மன்னிப்பு வழங்குவதோடு, அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து அரசியல் வழிகளில் போராட்டத்தைத் தொடர வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலமைகள் குறித்து தூதுவர் அறிந்திருக்கக்கூடும். ஆனால் பல உயிர்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கான நல்ல தருணம் என நான் கருதினேன்.

இச் செய்தியின் உள்ளடக்கத்தை புலிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறே நாம் பகிர்ந்துகொண்டோம். ஆனால் புலிகள் அதற்கான பதிலைத் தரவில்லை.

TamilTigers பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் TamilTigers

அவர்களின்  வேறு சில முக்கியஸ்தர்களோடு பேசிய போது தாம் ராணுவத்தைத் தோற்கடிப்போம் எனத் தெரிவித்ததாக கூறினர்.

மேலும் நாம் பல தடவைகள் தொடர்பு கொண்டோம். அப்போது சுதந்திர தினம் அண்மித்திருந்தது.

அரசியல் நிலமைகள் குறித்து தூதரகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தோம்.

அப்போது இப் போரில் புலிகள் தோல்வி அடைவார்கள். எனவே சில நிபந்தனைகளுடன் புலிகளை ஆயுதங்களைக் கீழே போடும்படி பகிரங்கமாக கோரலாம் என எண்ணினோம்.

எனவே இத் தீர்மானம் தொடர்பாக ஒரு அதிகாரி மகிந்தவுடன் பேசி இந்த இறுக்கமான அரசியல் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணினோம்.

இதனை நான் அதிகம் வற்புறுத்திய வேளையில்…  ஊடகங்களும், அரசும் நோர்வேயிற்கு எதிராக பேசிய போதிலும் புலிகளுடன் பேசும் வாய்ப்பை நாம் வைத்திருந்தமையால் அது சாத்தியம் எனக் கருதி அவ்வாறான நிலமைகளைக் கவனத்தில் கொள்ளாமல் தொடரலாம் என எண்ணினோம்….

மேற்கண்டவாறு தூதரக முதல் செயலாளர் கூறினார்.

இவற்றின் பின்னணியில் ஜனவரி 21ம் திகதி அரசு புதுக்குடியிருப்பின் வடமேற்குப் பகுதியை பாதுகாப்பு வலையமாக அறிவித்தது.

இப் பிரதேசம் ஓரளவிற்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

எனவே அப் பகுதி மக்கள் அங்கு செல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் உண்மையில் அது பாதுகாப்பான இடமாக இல்லை.

அந்த இடத்தை சரியாக தெரிந்த ஒருவரின் கருத்துப்படி இந்த இடம் நிலமைகளை மோசமாக்கவே உதவியது.

ஜனவரி 21 முதல் 29 வரையான காலப் பகுதியில் பெரும் தொகையான குண்டு வீச்சுகளால் மிக அதிக அளவிலான மரணங்கள் சம்பவித்தன.

இதன் காரணமாக 1996 முதல் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத் தீவு கடற்கரையோர நகரங்கள் ராணுவத்திடம் வீழ்ந்தது.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி முக்கிய நகரமும் வீழ்ந்ததாக சரத் பொன்சேகா அறிவித்தார்.

கிளிநொச்சி வீழ்ந்தபோது மக்களையும், ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு முல்லைத் தீவை நோக்கிப் பின்வாங்கியது போல அங்கிருந்தும் பின்வாங்கினார்கள்.

மக்களில் சிலர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தில் தங்கினார்கள்.

அமெரிக்க தூதராலய செய்திகளின்படி பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்பதாகவே புலிகளை ராணுவம் தோற்கடிக்கலாம் எனவும், அச் செய்தியை மகிந்த சுதந்திர தினத்தில் அறிவிக்கலாம் எனவும் எதிர்வு கூறியிருந்தது.

rober பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் roberபாதுகாப்பு வலையம் என்பதன் உண்மைத் தன்மையை அறிய அதிக காலம் எடுக்கவில்லை.neil punee பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் பிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 46) -சிவலிங்கம் neil punee

அறிவித்த 4 நாட்களுக்குள்ளாகவே ராணுவம் குண்டுகளை வீசியது.

ஐ நா சபையின் வதிவிட இணைப்பாளர் நீல் பூன்   (Neil Buhne)  ராணுவம் பாதுகாப்பு  வலைய  கட்டுப்பாடுகளை பல தடவைகள் மீறி வருவதாகவும், புலிகளும் அவ் வலையத்திற்கு அருகாமையிலிருந்து ராணுவ நிலைகளை நோக்கி எறி கணைகளை வீசுவதாகவும் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக்கிற்கு   ( Robert Blake )  செய்தி அனுப்பினார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியும் அதே தகவலைத் தந்தார்.

அங்கிருந்த வைத்திய அதிகாரிகளின் தகவல்களின்படி சுமார் 300பேர் அப்போது மரணமடைந்திருந்தனர்.

இதன் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த 200 நோயாளிகளையும், தனது அதிகாரிகளையும் அங்கிருந்து வெளியேறி வவுனியா செல்லுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.

ஜனவரி 28ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் உதய நாணயக்கார இம் மரணங்களை மறுத்தார்.

தாம் புலிகளையே இலக்கு வைப்பதாகவும், பொதுமக்களை அல்ல என்றார். இதற்கான உண்மைச் சாட்சியங்கள் இருந்த போதிலும் புலிகளும் தாம் அங்கிருந்ததை மறுத்தனர்.

தொடரும்

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s