சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 47

நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் – எரிக் சோல்கெய்ம் : 

நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் – எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம்
 

•  போரை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முடிப்பதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நாமும் முடிவு செய்தோம்.

•  புலிகள் தோற்றுவிட்டதாக கூட்டுத் தலைமை நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கை புலம்பெயர் நாடுகளில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

•  நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று உயிருடன் அரசியலை நடத்தியிருப்பார்கள் – எரிக் சோல்கெய்ம்.

• அரசாங்கமும் போரை மிகவும் முரட்டுத்தனமாக நடத்துவதும் புலனாகியது. புலிகளை முற்றாக ஒழிக்கலாம் என்ற சாத்தியங்கள் காணப்படுவதால் போரை  நிறுத்தும்  உத்தேசம்  அரசிற்கு இல்லை.

தொடர்ந்து…

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பொதுமக்கள் மிகவும் கொடுமை நிறைந்த துன்பங்களை அனுபவித்தார்கள்.

இவை குறித்து கூட்டுத்  தலைமை நாடுகள் கவலை அடைந்தன.

index நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் index6
2009ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஐ நா சபைச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை ஐ நா காரியாலயத்தில் சந்தித்து வன்னி நிலமைகள் குறித்து தனது கவலைகளை வெளியிட்டு இரு தரப்பாரும் போர்ப் பிரதேசத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவ வேண்டும் என்றார்.

இந்தியாவிலும் அதிக  அழுத்தங்கள்  காரணமாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி  கொழும்பிற்குத்  திடீர் விஜயம் செய்தார்.

போரில் துன்பப்படும்  மக்கள் நிலை குறித்து இந்தியாவின் கவலையைத் தாம் புரிந்து கொள்வதாக மகிந்த தெரிவித்ததோடு, பாதுகாப்பான பிரதேசங்களில் ராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக்கொண்ட மகிந்த, அங்கு 300 இற்கு மேற்பட்ட மக்கள் இறந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி இவ்வாறு மறுத்த போதிலும் போர் நிலமைகள் உண்மையை வெளிப்படுத்தின.

புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க அரசு அறிவித்த 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவடைந்த வேளை பாதுகாப்பு பிரதேசத்தின் உண்மைகள் வெளியாகின.

பெப்ரவரி 1ம் திகதி நண்பகலிலும், 2ம் திகதி இரவும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மேல் குண்டுகள் வீழ்ந்தன.

இதனால் வைத்திய அதிகாரிகள் 300 பேரும், நோயாளிகள் 500பேரும் புதுமாத்தளனிலுள்ள சமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அவ் வைத்தியசாலையில் சேவை புரிந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் மேலும் 9 பேர் மரணித்ததாக தெரிவித்தனர்.

பெப்ரவரி 2ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என கோதபய மறுத்தார்.

வைத்தியசாலையும் உங்களின் இலக்கா? என வினவியபோது அவ் வைத்தியசாலை பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அப்பால் இருந்தால் அது சட்டபூர்வமான இலக்கே எனத் தெரிவித்தார்.

சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணானதாகவே அவரது கருத்து இருந்தது.

கூட்டுத்தலைமை நாடுகளும் புலிகள் தோல்வியை நோக்கிச் செல்வதை உணர்ந்தனர்.

நோர்வே தரப்பினரும் இந்த முடிவுக்கு வந்தமையால் கூட்டுத் தலைமை நாடுகளின் மூலமாக மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக போரை நிறுத்தும்படி கோர முடிவு செய்தனர்.

பெப்ரவரி 2ம் திகதி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அப்பால் நடத்தப்படும் குண்டு வீச்சுகளை நிறுத்தும்படி அரசையும், போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வகையில் ஆயுதங்களைக் கீழே போட்டு, வன்முறையைக் கைவிட்டு அரசாங்கம் தரும் மன்னிப்பை ஏற்று அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு கோரியது.

புலிகள் தோற்றுவிட்டதாக கூட்டுத் தலைமை நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கை புலம்பெயர் நாடுகளில் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஆனால் அரச தரப்பினர் மகிழ்ந்தனர். பெப்ரவரி 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின வைபவங்களின் போது அமெரிக்க தூதுவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் புகழ்ந்தார்.

ஆனால் அடுத்த நாள் 5ம் திகதி கோதபய   இந்த அறிக்கையை   பலமாக விமர்ச்சித்தார்.

கூட்டுத் தலைமை நாடுகள் புலிகளைப் பாதுகாக்க முனைவதாகவும், அதனை விடுத்து புலிகள் நிபந்தனையில்லாமல் சரணடையவேண்டுமென ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

கூட்டுத்தலைமை நாடுகளின் அணுகுமுறைகளிலும் மாற்றம் இருப்பதை அதன் வாசகங்கள் உணர்த்தின.

அதாவது சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்தையில் ஈடுபட வேண்டும் என்பதை வற்புறுத்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் குறித்தே அறிக்கை பேசியது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மிகவும் சுருங்கிச் சென்றது. 2006ம் ஆண்டில் கட்டுப்படுத்திய நில அளவின் 5 சதவீதமே தற்போது எஞ்சியிருந்தது.

இச் சந்தர்ப்பத்தில் கண்காணிப்புக் குழுத் தலைவர் ரோ ஹற்றம்   ( Tore Hattrem) அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

போர்ப் பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற பொறிமுறை ஒன்றை வகுக்குமாறு கோரினர்.

இதனை அமெரிக்க தரப்பினருடன் உரையாடியதன் பின்னர் அதன் அடிப்படையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஓர் பதிவு இடாப்பைத் தயார் செய்து   அதில் பொதுமக்களின் பெயர்களைப் பதிவு   செய்யமாறும், புலிகள் சரணடைய விரும்பினால்   ஆயுதங்களைக் கைவிட்டு வரவேண்டுமெனவும்  அமெரிக்க கப்பல் வன்னிப் பிரதேசத்தில் வந்து அவர்களைக் கரை சேர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ் ஒழுங்குகள் குறித்து அரச தரப்பினர் பின்வாங்கிய போதிலும் அமெரிக்க, இந்திய அழுத்தங்களால் மனம் மாறி புலிகளை ஏற்றுக்கொண்டு போரை முறைப்படி முடித்து வைப்பார்கள் என நோர்வே தரப்பினர் நம்பினர்.

blogger-image--69580438 நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் blogger image 69580438ஆனால் அந்த எண்ணம் நீடிக்கவில்லை. புலிகளுக்கு பல்வேறு தரப்பினர் மூலமாக போரை முடித்து வைப்பதற்கான ஒழுங்குகளை தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை உடனடியாக ஏற்பார்கள் என்பதற்கான எந்த அறிகுறிகளும் வெளிவரவில்லை.

அவ் வேளையில் ஐ நா இன் விசேட பிரதிநிதி ரம்றற் சாமுவல்   ( Tamrat Samuel ) மூன்று  நாள் விஜயத்தில் இலங்கை வந்திருந்தார்.

இப் பிரச்சனை குறித்து அங்குள்ள தூதுவர்களுடன் பேசியபோது எதுவும் சாத்தியப்படாத நிலையை உணர்ந்தார். அதேவேளை அரசும் தனது வெற்றியை நோக்கி நகர்ந்தது.

அவர் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவைச்   சந்தித்து போரில் சிக்குண்ட   மக்களின் பாதுகாப்பு  குறித்த  பொறுப்பு உங்களுக்குரியது என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்த அவர் புலிகள் தரப்பினர் போரை எவ்வாறு முடிக்கவேண்டும்? என்பதை அரசுடன் பேசி முடிவெடுக்குமாறும் கோரினார்.

ஆனால் அவர் சரணாகதி பற்றிப் பேசவில்லை. ஆனால் அரச பகுதியினர் சரணாகதிப் பத்திரத்தை எதிர்பார்த்தனர்.

இச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு மாற்று வழிகள் எதுவும் இருக்கவில்லை. இந்த இறுக்கமான நிலை ஏப்ரல் மாதம் வரை நீடித்தது. முழுமையான சுதந்திரத்தைக் கோராமல் மிகவும் குறைந்த அடிப்படையை   நோக்கியே சென்றார்கள்.

ஆனால் அவர்களால் வெளியுலக யதார்த்தினைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந் நிலமைகள் குறித்து எரிக் சொல்கெய்ம் பின்வருமாறு கூறுகிறார்.

362296-3x2-940x627 நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் 362296

….. போரில் சிக்குண்ட மக்களின் அவலம் மிகவும் அவசரமானது. புலிகள் அந்த மக்களைத் தங்கள் பாதுகாப்பிற்காக தடுத்து வைத்திருப்பது தெளிவாகியது.

அரசாங்கமும் போரை மிகவும் முரட்டுத்தனமாக நடத்துவதும் புலனாகியது. புலிகளை முற்றாக ஒழிக்கலாம் என்ற சாத்தியங்கள் காணப்படுவதால் போரை  நிறுத்தும்  உத்தேசம்  அரசிற்கு இல்லை. சர்வதேச அளவில் சில அரசுகள் அவ்வாறு செயற்படலாம்.

ஆனால் நிச்சயமாக ராஜபக்ஸ அரசு அல்ல. எனவே புலிகள் போரில் தோற்றுவிட்டார்கள் என அறிவிப்பதன் மூலம் மீதமுள்ள மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு  இன்னொரு  நாள் புதிய சமாதான  வழிகளில் தமது போராட்டத்தை நடத்த முடியும் என எண்ணினேன்.

போரை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முடிப்பதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நாமும் முடிவு செய்தோம்.

இம் முடிவு புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் முடிவுக்காக கண்ணீர் விடவோ அல்ல. தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தே எமது கவலை இருந்தது.

கூட்டுத்தலைமை நாடுகளால் விடுக்கப்பட்ட அறிக்கையின் சாராம்சத்தில் அமெரிக்க அழுத்தம் அதிகம் இருக்கவேண்டுமென நான் வற்புறுத்தினேன்.

அவ் அறிக்கை இரு தரப்பாரையும் நோக்கியதாக இருக்கவேண்டுமென கருதிய வேளை, இரு தரப்பினரும் இச் செய்தியை ஏற்க விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிந்திருந்தோம்.

புலிகள் போர் நிறுத்தத்தைக் கோரிய வேளை அரசு போரை முன்னோக்கி எடுத்துச் சென்றது. பலவீனமான பிரிவினரிடமிருந்தே அதிகம் எதிர்பார்க்கும் அறிக்கையாக அது  இருப்பதாக புலிகள்  மற்றும்  இதர தமிழ் தரப்பினர் விமர்ச்சித்தார்கள்.

அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் இல்லை. ஏனெனில் அவர்கள் புலிகளை விட பலமான நிலையில் இருந்தார்கள். எமது முன்மொழிவுகளை புலிகள் அன்று ஏற்றிருப்பார்களாயின் இன்றும் வேறு வழிகளில் துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல போராடிக்கொண்டிருந்திருப்பார்கள் …

இவ்வாறு அவர் அனுபவம் கூறியது.

புதுக்குடியிருப்பிற்குத் தென் கிழக்கிலுள்ள பொன்னம்பலன் என்ற இடத்திலுள்ள வைத்தியசாலை மீது பெப்ரவரி 5ம் திகதி விமானக் குண்டு வீச்சு இரு தடவைகள் நடத்தப்பட்டது. அதில் நோயாளிகள் 75பேர் கொல்லப்பட்டனர்.

புலிகளின் தலைவர்களில் ஒருவரான சூசையின் இருப்பிடத்தைத் தாக்கி அழித்ததாக இச் சம்பவத்தை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சு ஒளி நாடாவின் உதவியுடன் வெளியிட்டிருந்தது.

அச் செய்தியில் அவ் வைத்தியசாலைக் கட்டிடத்தைக் காட்டி சூசையின் பங்களா எனவும் வர்ணித்தது.

இதன் பின்னர் இச் செய்தி பற்றிய விளக்கங்களை மறுத்து அது வைத்தியசாலை என நிருபித்தபோது அக் கட்டிடத்திற்குள் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ராணுவ வைத்தியசாலை என விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதுவும் சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணான தாக்குதல் என்பதை ஏற்கவில்லை.

இருப்பினும் புலிகள் தோல்வியை நோக்கிச் செல்வது உணரப்பட்டது. பெப்ரவரி 6 – 11ம் திகதி வரையான காலப் பகுதியில் சுமார் 22,000 மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

இவர்களின் வருகையால் புலிகள் மக்களை வருத்தும் செய்திகளின் உண்மைகள் வெளியாகின. அவ் வேளையில் அங்கு பணிபுரிந்த 74 வயதான கன்னியாஸ்திரி மேரி கொலஸ்ரிகா  ( Mary Colostica ) தினமும் 10 பேர் அங்கு மரணித்ததாகவும், புதைக்கவும் ஆளில்லாமல் இருந்ததாக கூறினார்.

sri-lanka_3441612b நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் நான் கூறியபடி அன்று ஏற்றிருந்தால் இன்று  துருக்கியில் போராடும் குர்திஷ் மக்கள் போல புலிகளும் போராடிக் கொண்டிருந்திருப்பார்கள் - எரிக் சோல்கெய்ம் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 47) -சிவலிங்கம் sri lanka 3441612b

ராணுவத்தை நோக்கி வெள்ளைக் கொடிகளுடன் சென்ற மக்கள் மேல் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய விபரங்களைப் பலர் கூறினர்.

பெப்ரவரி 13ம் திகதி சுமார் 60 பேர் படகில் தப்பிச் செல்ல முயன்றபோது புலிகள் அம் மக்களைப் படுகொலை செய்ததாக கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்கள் செய்தி வெளியிட்டன.

ராணுவ பாதுகாப்பு முன்னரங்கிலிருந்து வெளியேறுவதற்கென குவிந்திருந்த மக்கள் மத்தியில் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடித்தனர்.

பெப்ரவரி 9ம் திகதி பெண் கறுப்பு புலி ஒருவர் விஸ்வமடு பகுதியில் உள்ள கண்காணிப்பு தரிப்பிடத்தில் குவிந்திருந்த மக்கள் மத்தியில் தற்கொலைக் குண்டினை வெடித்து அதில் 28பேர் மரணமாகினர்.

இவர்களில் பலர் ராணுவத்தினராகும். அடுத்த 3 நாட்களில் 12 கிலோமீற்றர் நீளமுள்ள புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியை துப்பாக்கிப் பிரயோகம் அற்ற பிரதேசம் என ராணுவம் அறிவித்ததது. ஆனால் இப் பிரதேசமும் புலிகளின் முன் அரங்கிற்கு அண்மித்ததாகவே இருந்தது.

மாகாணசபைத் தேர்தல்கள்

போரின் வெற்றி தொடரும் போது அரசியல் முயற்சிகள் ஆரம்பித்தன. வட மேற்கு மற்றம் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு எதிர்பார்த்தபடி வெற்றியும் கிடைத்தது.

இத் தேர்தல் முடிவுகள் போரின் காரணமாக சிங்கள மக்கள் போரை ஆதரிப்பதும், தமிழ், முஸ்லீம் மக்கள் எதிர்க்கட்சிகளை நோக்கிச் செல்வதும் தேர்தல் முடிவுகள் நாட்டில் பலமான பிளவுகளை அடையாளப்படுத்தியது.

இக் காலவேளையில் புதிய பாதுகாப்பு வலையங்களுக்குள் பெரும் பிரச்சனை தோன்றியிருப்பதாக ஐ நா வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் (Neil Buhne ) பெப்ரவரி 16ம் திகதி செய்தி வெளியிட்டார்.

அதே காலத்தில் ஐ நா சிறுவர் பிரிவும் புலிகள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை கட்டாயப் பயிற்சிக்கு திரட்டுவதாக குற்றம் சாட்டியது.

அப்போது புலிகளின் விமானங்கள் இரண்டு கொழும்பு விமானப்படைத் தலைமையகத்திற்கு அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இச் சம்பவத்திற்கு மறுநாள் ஐ நா செயலாளரின் உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் ( John Homes ) தனது 3 நாள் இலங்கை விஜயத்தை முடித்து வெளியேற தயாராக இருந்தார்.

இவர் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமினைப் பார்வையிட்டதோடு ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்திருந்தார்.

அவர் தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரு தரப்பினரும் ரத்தக் களரியைத் தடுக்க உதவ வேண்டுமெனவும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்யவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

போர்ப் பிரதேசத்தில் தினமும் இடம்பெறும் மரணங்கள், காயங்கள் பற்றிய விபரங்கள் அவருக்கு நன்கு தெரிந்திருந்த போதிலும் அவர் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு நடுநிலைப் போக்கில் பேசினார்.

அவரது அறிக்கை பாதுகாப்புச் சபைக்குச் சென்றபோது சில விமர்சகர்கள் கொதித்தார்கள். இதில் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அடங்குவர்.

ஏனெனில் நடுநிலையான அறிக்கை எனில் அது அரசு சார்பானது என்பதே விளக்கமாக இருந்தது. இருப்பினும் அவரது அறிக்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்வதாகவே காணப்பட்டது.

தொடரும்

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s