சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் : பாகம் 48

போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு

அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!:

பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! 

போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம்

• நோர்வே தூதுவர் மலேசியா சென்று கே பி உடன் இரகசிய ஆலோசனை!!

• ஆயுதங்களைப் போடும்படி எம்மை நிர்ப்பந்திப்பதை விட போரை நிறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுங்கள் – நடேசன்

• கூட்டுத் தலைமை நாடுகள் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை என்பன பெப்ரவரி இறுதிப் பகுதியில் தயாராக இருந்தன.

• மிகச் சிறிய அளவிலான போராளிகள் 50,000 இற்கு அதிகமான ராணுவத்தை எவ்வாறு சமாளித்தார்கள்? அவ்வளவு தொகையினரால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை வெளியேற விடாமல் எவ்வாறு தடுக்க முடிந்தது? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

தொடர்ந்து….

ஐ நா சபை அதிகாரிகளும், ஏனைய பல நாடுகளின் ராஜதந்திரிகளும் போரில் அகப்பட்டுள்ள மக்களின் அவலங்கள் பற்றி இலங்கை அரசை எச்சரித்திருந்தனர்.

index-1 போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் index 1

(John Holmes, United Nations Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator)

ஐ நா செயலாளரின் உதவியாளர் ஜோன் ஹோம்ஸ் ( John Homes ) அவர்களின் கருத்துப்படி இலங்கை அரசின் பல்வேறு மட்டங்களில் செயற்பட்ட பலரும் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாகவும் ஏனெனில் அவர்களும் எமது பிரஜைகள் என நியாயாப்படுத்தினார்கள்.

ஆனால் யதார்த்தத்தில் அது எவ்வளவு உண்மை? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என அவ் வேளையில் தெரிவித்தார்.

nadesannna போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் nadesannnaபோர் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கையில் புலிகள் தரப்பிலிருந்து நடேசன் 22-02-2009ம் திகதி சர்வதேசத்தை நோக்கி விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்.

அதாவது புலிகள் ஆயுதங்களைக் கை விட வேண்டுமென முன் நிபந்தனைகளைப் போடாமல் போர் நிறுத்தத்தினை மேற்கொண்டு அரசியல் தீர்வை நோக்கிச் செல்லுங்கள் எனக் கோரினார். இக் கோரிக்கை செவிசாய்க்கப்பட்டதா? என்பது சந்தேகமாக இருந்தது.

கூட்டுத் தலைமை நாடுகள் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை என்பன பெப்ரவரி இறுதிப் பகுதியில் தயாராக இருந்தன.

இலங்கை வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம அவர்களுக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் அந்த விபரங்களை இந்திய மற்றும் தமது நட்பு நாடுகளுடனும் ஆலோசித்திருந்தார்.

இவ்வாறான பல மாயங்கள் காணப்பட்ட போதிலும் புலிகள் அவ்வாறான ஏற்பாடுகளை முற்றாக நிராகரித்திருந்தார்கள்.

இச் சமயத்தில் இப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் நோர்வே தூதுவர் ரோர் ஹற்றம் (Tore Hattem )மலேசியா சென்று கே பி உடன் இரகசிய ஆலோசனைகளை நடத்தினார்.

இவை அமைச்சர் பஸில் ராஜபக்ஸ இன் ஆதரவுடன் நோர்வே தரப்பில் ஜொன் வெஸ்ற்பேர்க் (Jon Westborg) தோமஸ் ஸ்ரேன்ஸ்லன்ட் (Thomas Stangeland) ஆகியோரும், புலிகள் தரப்பில் உருத்ரகுமாரன், ஜே. மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சம்பவம் குறித்து நோர்வே தூதுவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

….கே. பி ஐச் சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க மற்றும் நோர்வே தரப்பினர் விரிவாகப் பேசினர்.

jonnnaas போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் jonnnaas

Jon Westbor

புலிகளுக்குள் கணிசமான பகுதியினர் ரத்தக் களரியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென விரும்புவதாக எனக்குக் கிடைத்த வேவுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும், இருப்பினும் இவை பிரபாகரனிடமிருந்து வரவில்லை என்பதை அறிவேன் எனத் தெரிவித்தேன்.

எனவே இத் தரப்பினர் மூலமாக பிரபாகரனுக்குத் தகவல்களை அனுப்பி அவர் மனதை மாற்றலாம் என எண்ணினோம்.

இச் சிக்கலான நிலமைகளை மாற்றும் எண்ணத்துடன் பொறிமுறை ஒன்றைத் திட்டமிட்டோம்.

அதன் பிரகாரம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியை நோக்கி நகர்ந்தால் மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் செல்வார்கள்.

புலிகள் தாம் தமது அங்கிகளைக் களைந்து, ஆயுதங்களைக் கைவிட்டு தப்பிச் செல்வதா? அல்லது தொடர்ந்து போராடுவதா? என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் என நாம் எண்ணினோம்.

அவர்கள் எதையாவது செய்யட்டும். ஆனால் அவர்கள் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்த எண்ணினோம்.

துர் அதிர்ஸ்ட வசமாக ரோர் ஹற்றம் (Tore Hattem ) , கே பி ஆகியோர் புலிகள் தோற்றுவிட்டதாக கருதினர்.

ஆனால் அதனைப் பிரபாகரனை ஏற்க வைக்க முடியாத நிலையில் இருந்தனர். மொத்தத்தில் அப்போதைய நிலமைகள் குறித்து மிகவும் ஏமாற்றமடைந்தேன்…எனத் தெரிவித்தார் தூதுவர்.

இச் சந்திப்புக் குறித்து தூதுவர், அமைச்சர் ராஜபக்ஸவிடம் கே பி இனால் பிரபாகரனைச் சம்மதிக்க வைக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.

அமைச்சரும் அச் செய்தியைக் கேட்டு ஏமாற்றமடைந்தார். இச் சந்தர்ப்பத்தில் புலிகளைக் காப்பற்ற நோர்வே முயற்சிப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

ராணுவ வெற்றி நிச்சயம் என்ற ஏக்களிப்பில் இருந்த அரச தரப்பினரே இச் செய்திகளைக் கசிய விட்டனர்.

இது நீடிக்கவில்லை. ஏனெனில் நோர்வேயின் செயற்பாடுகள் அனைத்தும் அரசின் சம்மதத்தத்துடன்தான் எடுக்கப்பட்டன. அவர்களே தமது செய்திகளை நோர்வே மூலமாக புலிகளுக்குப் பரிவர்த்தனை செய்தனர்.

இச் சந்தர்ப்பத்தில் கே பி உடனான ஆரம்ப தொடர்புகள் பற்றி எரிக் சோல்கெய்ம் பின்வருமாறு கூறுகிறார்.

….. 2004ம் ஆண்டளவில் பாங்ஹொக்கில் கே பி உடன் இரகசிய சந்திப்பை நடத்தினேன்.

அச் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவு விடயங்களிலிருந்து தாம் ஓய்வு எடுக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

இதன் பின்னர் இன்னொரு பாலசிங்கமாக எதிர்காலத்தில் செயற்படக்கூடுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. நான் அவரிடம் ஆயுதக் கொள்வனவு முயற்சிகளைக் கைவிட்டு எவ்வாறு அரசியலை ஐரோப்பிய மண்ணிலிருந்து நடத்தப் போகிறீர்கள்? என வினவினேன்.

இலங்கை அரசின் சம்மதமில்லாமல் ஐரோப்பிய அரசுகள் அவரைச் செயற்பட அனுமதிக்காது.

அக் காலப் பகுதியில் ரணில் – சந்திரிகா தகராறு தீவிரமாக இருந்தது.

இதனால் அதற்கான அனுமதி பெறுவது மிகவும் கடினம். கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக கே பி யை பிரபாகரன் நியமித்திருந்தார்.

அவர் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பினார். அவர் மீது உயர்ந்த மதிப்பு எனக்கு உண்டு.

ஏனெனில் அவர் அரசின் கைகளில் பிடிபட்ட பின்னர் கருணா செய்தது போல் ஒவ்வொருவரையும் குற்றம் சாட்டாமல் தவிர்த்துக்கொண்டார்…. இவ்வாறு எரிக் சோல்கெய்ம் கூறினார்.

IDPs-560x420 போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் IDPsராணுவ நடவடிக்கைகள்

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சிறிய நிலப் பகுதியையும் கைப்பற்ற ராணுவம் முயற்சித்தது. மார்ச் 3ம் திகதி ராணுவம் புதுக்குடியிருப்பை நோக்கிய பிரதான வீதியின் சந்தியை கைப்பற்ற எண்ணினர்.

அதுவே வன்னிப் பகுதியிலுள்ள புலிகளின் இறுதி நகரமாகும். இதனைக் கைப்பற்ற ராணுவத்திற்கு 4 வாரங்கள் சென்றன. இரண்டு நாட்களின் பின்னர் கூட்டுத் தலைமை நாடுகள் நிலமைகளை ஆராய்ந்தன.

இத் தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை சர்வதேச அரசுகள் அழுத்தியமை காரணமாக இலங்கை அரசு அதனைக் கவனிக்க ஆரம்பித்திருப்பதை அமெரிக்க தூதுவர் ஏற்றுக் கொண்டார்.

இருப்பினும் ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசுவது குறித்து தெரிவித்த போது அது குறித்து விவாதிக்க அமைச்சர் பஸில் தயக்கம் காட்டினார். இருப்பினும் அங்கு அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை மறுக்கவில்லை. ஏற்றுக் கொண்டார்.

போரில் புலிகள் பலமிழந்த போதிலும் அவர்களை முற்றாக பலமிழக்கச் செய்ய முடியவில்லை. ஏனெனில் மார்ச் 7ம், 8ம் திகதிகளில் புதுக்குடியிருப்பு, சாளை ஆகிய பகுதிகளில் கடுமையான யுத்தம் நடைபெற்றது.

இதில் புலிகள் தமது கடற்படைத் தளத்தினை இழக்கும் நிலை காணப்பட்டது. அப்போது அரச தரப்பினர் புலிகளில் 500பேர் வரையிலேயே எஞ்சியிருப்பதாக பிரச்சாரம் செய்தனர்.

மிகச் சிறிய அளவிலான போராளிகள் 50,000 இற்கு அதிகமான ராணுவத்தை எவ்வாறு சமாளித்தார்கள்? அவ்வளவு தொகையினரால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை வெளியேற விடாமல் எவ்வாறு தடுக்க முடிந்தது? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இச் சம்பவங்கள் இடம்பெற்ற வேளை கருணா, பிள்ளையான் தகராறு புதிய பரிமாணத்திற்குச் சென்றது. மார்ச் 10ம் திகதி கருணா தனது 2000 இற்கு மேற்பட்ட போராளிகளுடன் அலரி மாளிகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து வழமை போலவே அவருக்கும் மந்திரிப் பதவி வழங்கப்பட்டு மொத்தமாக 105 பேர் அமைச்சர்களாக செயற்பட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் நாட்டுப் பிரிவினைக்காக போராடிய ஒருவர் தேசிய நல்லிணக்கத்திற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டமையாகும்.

56 போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் போரில் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க கடற்படை, விமானப்படை தயார்!!: பிரபாகரன் சம்மதிக்க மறுப்பு!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 48) -சிவலிங்கம் 56வாசகர்களே!

கடந்த வாரம் குறிப்பிட்டதைப் போல பாதுகாப்பு வலையத்திற்குள் குவிந்திருந்த மக்கள் மத்தியிலே ராணுவ எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருக்கையில் புலிகள் அம் மக்களிடையே கட்டாய ஆட்சேர்ப்பை நடத்தினார்கள்.

இதனால் மக்கள் மிகவும் கொதிப்படைந்தார்கள். பெரும் மோதல்கள் ஏற்பட்டன.

ஒரு குழுவினர் 18 வயதான இளைஞன் ஒருவனைக் கடத்திச் செல்ல எத்தனித்த போது புலிகளின் தலைவர்களில் ஒருவரிடம் காணப்பட்ட துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டுவிட்டு மேலும் மூவரைக் காயப்படுத்திய பின் ஓடிச் சென்றுவிட்டான்.

ஆனால் மறுநாள் புலிகளின் குழு ஒன்று அங்கு சென்று அப் பையனின் 55 வயதான தந்தையைச் சுட்டுக் கொன்றனர். வலைஞர் மடம் என்ற இடத்திலுள்ள Church of Lady of the Rosary என்ற தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்த போது அம் மக்கள் மேல் வாகனங்களை ஏற்றிச் சென்றனர்.

இச் செயல்கள் மக்கள் ஏன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிகவும் பாதுகாப்பற்ற துப்பாக்கிப் பிரயோகம் அற்ற பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்கு தமது உயிரையும் பொருட்படுத்தாது செல்லத் துடித்தார்கள் என்பதை உணர்த்தின. பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் போர் முனைகளில் நிறத்தப்பட்டு நூற்றுக் கணக்கில் மடிந்தார்கள்.

இம் மரணங்கள் குறித்து புலிகளுக்கு இம்மியளவும் கவலை இருந்ததில்லை. குடிகாரர்கள் போல ஆட்களைக் கடத்த மக்கள் மத்தியில் சுற்றித் திரிவது எந்த மனித நாகரீகம் உள்ள சமுதாயத்திடமும் காணப்படுவதில்லை.

இறுதியில் மக்கள் ஆதரவு தமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்குத் தாம் சென்றதாக புலிகளின் ஊடக உறுப்பினர் ஒருவர் ஏற்றுக் கொண்டார்.

தொடரும்

Erik Solheim  அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட  

TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.

தொகுப்பு : வி. சிவலிங்கம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s